ADS 468x60

18 August 2019

தமிழனுக்கு நாடுதான் ஒன்றில்லை ஆள, நமக்கென்று ஒரு பண்பாடும் இல்லையா வாழ!

நாம் எதற்காக சண்டை போடுகின்றோம், அல்லது எதை வைத்துக்கொண்டு சண்டை போடுகின்றோம்?. நாம் தமிழர்கள், எமது கலாசாரம், பாரம்பரியம் காப்பாற்றப்பட்டு நாங்கள் ஒரு தனித்துவமான குடிகளாக சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவே இத்தனை சண்டை, பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் எல்லாமே. ஆனால் நம்மில் எத்தனை பேர் எமக்கென்று இருக்கும் கலாசாரத்தினை, பண்பாட்டை, நாகரிகத்தினை பின்பற்றுவதனூடாக நாம் மற்றவர்களின் கலாசாரத்தில் இருந்து வேறுபட்டவர்கள் எனக் காட்டுகின்றோம் என்றால், அது பூச்சியமாகவே இருக்கும்.


எமக்கென இருந்த கலாசாரம் பல்வேறுபட்ட பிற நாடுகளின் தொடர்ச்சியற்ற செல்வாக்கு, யுத்தம் அனர்த்தம் இவைகள் காரணமாக பல்வேறு கலாசார மாற்றங்களுக்கு ஏற்ப மாறுதலடைந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது. 

எமது கலாசாரம் பல்வேறுபட்ட காரணிகளால் தாக்கம் செல்லுத்தப்பட்ட போதிலும் அது தன்னுடைய புராதன அம்சங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. எமது நீண்ட வரலாறு மற்றும் பௌத்த பரம்பரையினால் கூடுதலாக தாகத்திற்கு உள்ளாகியது. எமது பிரதேசங்கள் வளமுள்ள கலைத்திறனான பாரம்பரியம் மற்றும் இசை, நடனம், காட்சிக் கலை ஆகிய நுண் கலைகளை தன்னகத்தே கொண்டு கலாசாரங்களை அடையாளப்படுத்துகின்றது. எமது வாழ்க்கை முறையானது எங்களுடைய சமையற்கலை, திருவிழாக்கள், சம்பிரதாயங்கள் மற்றும் விளையாட்டு முறைகளில் பிரதிபளிக்ன்றது. எமது பிரதேசத்தில் பல்வேறுபட்ட கோணங்களிலும் தென் இந்தியர்களின் வருகை வெளிபடையாக செல்வாக்கு செலுத்துகின்றது. மேலும் போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர் , பிரிட்டிஷ் ஆகியவர்களின் குடியேற்றமும் சில துறைகளில் செல்வாக்கு செல்லுத்தி வருகின்றது.

எவ்வாறு இருப்பினும் சிங்களவர்கள்; அவர்களது கலாசாரங்களை மீள ஒழுங்கமைத்துக்கொண்டுள்ளார்கள். மரணவீட்டு மரியாதச் சடங்கு பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டத்தினை உங்களிடம்; பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். குறிப்பாக எல்லோருக்கும் பிறப்பு ஆரம்பம், இறப்பு முடிவு அந்த முடிவு மரியாதைக்குரியது, வணக்கத்துக்குரியது அதனால்தான் இறுதி அஞ்சலி, இறுதி வணக்கம், இறுதி மரியாதை என்றெல்லாம் அழைக்கின்றோhம்.

ஒருவர் வாழும் போது அவரை தரிசிக்க முடியாவிட்டாலும் போகும் இறுதிநாளின் போது அதற்கு மரியாதை செலுத்த தவறமாட்டார்கள். அது எமது போராட்ட வரலாற்றிலும் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் உங்களுக்கும் எனக்கும் தெரியும் இல்லாமற்போகும்; பல கலாசாரம் வழமைக்குள் முதலில் தொலைந்து போய்க்கொண்டிருப்பது எமது தமிழ் கலாசார மரபாகும். தமிழனுக்கு நாடுதான் ஒன்றில்லை ஆள எமக்;கென்று ஒரு பண்பாடும் இல்லையா? என எண்ணத் தோணுகின்றது இப்போது.

பொதுவாக மரணவீட்டில் அங்கு காலமானவர்க்கு எமது பண்பாட்டின்படி வெள்ளை ஆடை அணிந்து இரங்கல் தெரிவிப்பதன் மூலம் அதை கௌரவிபபதாக ஒரு கலாசாரம் இருக்கின்றது. அது அன்று இருந்தது அதனால்தான் இறந்த வீட்டில்கூட வெள்ளைக் கொடி பறக்கவிடும் மரபு இருக்கின்றது.

அதுபோல் பெண்கள் வெள்ளைச் சாறி அணிந்தும் ஆண்கள் வெள்ளை வேட்டி சட்டை அணிந்தும் அந்த மரியாதையை இறுதி அஞ்சலியாகச் செலுத்தி வந்தனர். ஆனால் உலக்தோட ஒட்ட ஒழுகத் தலைப்பட்டு விட்டோம் என சிலர் நினைத்துக்கொண்டு; கலாசாரத்தை காற்றில் பறக்கவிடத் தொடங்கி விட்டோம். இது 'அரசனை நம்பி புரிசனை கைவிட்ட' கதையாட்டம் இருக்கின்றது.

பிரச்சினை காலமாற்றத்தில் இல்லை, மாறாக இது மனமாற்றத்தில்தான் தொடங்குகின்றது. மறுபுறத்தில் காலம் மாறினாலும் கலாசாரத்தினை மாற்றாமல், பிற நாட்டு மக்களுக்கும் எடுத்து புகட்டி தாங்களும் அதை மதித்து வாழும் சிங்களவர்கள் வாழும் நாட்டில்தான் நாமும் வாழுகின்றோம். எனது அனுபவத்தில் அவர்கள் எம்மை விட உலக மாற்றத்தை உள்ளீர்த்துக் கொள்ளுவில் படு வேகமானவர்கள் இருக்கட்டும், ஆனால் அவர்களுக்கு என இருக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் அன்று எப்படி இருந்ததோ இன்றும் ஒரு எள் அளவும் பிசகாமல் கட்டுக்கோப்பாக கடைப்பிடிக்கிறார்கள். இது ஒரு சிங்கள மரணவீடு என இலகுவாக அடையாளம் காணமுடிகின்றது. 

ஆனால் உதாரணத்துக்கு மரணவீட்டுக்கு நாம் செல்லும்விதம் பற்றி ஒரே ஒரு சம்பிரதாயத்தை எடுத்து சொல்லாம் என நினைக்கின்றேன். நம்மில் அதிகம் பேர் எவ்வாறு செல்லுகின்றனர் என்றால் 'நிண்டான் பாஞ்சான்' கதையாட்டம் நிண்ட நிண்ட மாதிரி கலந்கொள்ளுவதை பார்கின்றேன். மரியாதை செய்பவர்கள் மரியாதையாக போவதற்குத்தான் கலாசாரம் இருக்கின்றது. ஆனால் நாம் இருக்கின்ற ஆடைகளுக்குள்ளே மிக மிக அழுக்கான ஆடையை எடுத்து ஏதோ போகனும் என்று போகும் 'போமியா', பலமாகப் பரவி வருகின்றது. அதில் ஒரு விடயம் என்னவென்றால் பெரியவர்கள் முதல்கொண்டு இந்த கலாசாரப் புறழ்வை கட்டவிழ்த்து விட்டிருப்பது வெட்கித் தலை குனிய வைக்கின்றது.

சில தவிர்க்க முடியாத தாங்க முடியாத உணர்சிவசமான இழப்புக்கழுக்கு இவற்றை எதிர்பார்க்க முடியாவிடினும் சாதாரணமாக நிகழுகின்ற மரணவீடுகளை எமது கலாசார போர்வை கொண்டு மரியாதை செலுத்துவோம். அதன் ஆத்ம சாந்திக்கு அது உறுதுணையாக நிச்சயம் இருக்கும். இது எமது நாட்டில் மாத்திரமல்ல எமது மக்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் இவற்றை நாம் கடைப்பிடித்தால் என்ன?

இறுதி மரியாதையிலாவது எமது பண்பாட்டை காப்பாற்ற உங்களின் மனதை மாற்றிக் கொள்ளுவீர்களா! இளைஞர்கள் இதற்க எடுத்துக்காட்டாகவும் உதாரணமாகவும் விளங்கினால் நிச்சயம் மாற்றத்தினைக் கொண்டு வரலாம். அத்துடன் ஆலயங்கள் பொது நிகழ்வுகளில் இவ்வாறான பொது கலாசார நடைமுறைகளை எடுத்துக்கூறி விழிப்படையும் செயற்பாட்டினை பட்டி தொட்டி எங்கும் பரவச் செய்ய வேண்டும். ஏனெனில் எமக்கு அபிவிருத்திக்கு சமமாக எமது அடையாளங்களையும் காப்பாற்றும் போதுதான் எமது தனித்துவத்தினை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தலாம்.

மாறுவோம் மாற்றுவோம் வாரீர்.

0 comments:

Post a Comment