நமது நாட்டை பொருளாதார ரீதியில் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள பல வேலைத்திட்டங்களை எமது அரசாங்கம் காலத்துக்கு காலம் முன்னெடுத்து வந்துள்ளது. தற்போதைய அரசும் மக்களுக்கு தொழில் முயற்சியாண்மையை ஊக்குவிக்க ஒரு திட்டத்தினை முன்னெடுத்து, கடந்த பாதீட்டில் அதற்கான நிதி ஒதுக்கீட்டினையும் பரிந்துரை செய்திருந்தது. ஆதன் பிரகாரம் நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றவும் முயற்சியாண்மையை ஊக்குவிக்கவும் இதுவரைக்கும் ரூபாய் 88 பில்லியன் பெறுமானமுள்ள 55,000 கடனுதவிகளை வழங்கியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தளவில் எமது நாட்டைவிட சிறிய சனத்தொகையைக் கொண்ட நாடுகள் அதிக சுயதொழில் முயற்சியாளர்களைக் கொண்டிருக்க ஒப்பீட்டளவில் இங்கு முயற்சியாண்மை மிகச் சிறியவிகிதத்திலேயே இருக்கின்றது. அந்த வகையில் இந்த செயற்பாட்டினைப் பார்க்கும்போது இது ஒரு சாதகமான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
இங்கு துவங்கப்பட்டுள்ள 'என்ரபிரைஸ் ஸ்ரீலங்கா' திட்டம் பகுதியளவில் ஆசிய அபிவிருத்தி வங்கியினுடைய (ADB) நிதியுதவியாகும். ஆனால் குறிப்பிடத்தக்க மேலதிக நிதி பொதுநிதியில் இருந்தே கையாளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தினூடாக குறித்த அளவான கடனுதவி குறைந்த வடடிவிகிதத்தில் ஒரு ஊக்குவிப்பு தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. உண்மையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் இலங்கையின் பொருளாதார வளர்சியில் இருக்கும் சவால்களை முறியடிப்பதற்கான ஒரு திட்டமாகவே பார்க்கப்படும் அதே நேரம் இவை வரிசெலுத்துவோரின் பணத்தினை வீணடிக்காத ஒரு தொழில் முயற்சியாண்மைக்கான அத்திவாரமாகவே கருதப்படுகின்றது.
தொழில் முயற்சியாளர்கள் வருமானத்தினை மாத்திரம் பெருக்காமல், நாட்டின் பாரிய சவாலாக இருக்கும் வேலையின்மைக்கு விடைகொடுக்கும் முகமாக பலருக்கு வேலைவாய்பினையும் வழங்கக்கூடிய ஒரு துறையாக உள்ளது. இவர்கள்தான் நாட்டின் பொருளாதார மாற்றம், உலகமயமாக்கல் சவால், கட்டமைப்பு மாற்றங்களை கொண்டுவருவதற்கான கருவியாகப் பார்க்கப்படுகின்றனர்.
பொருளாதார ரீதியில் பெறக்கூடிய எல்லா வகையான நன்மைகளையும், சந்தர்பங்களையும் இந்த தொழில் முயற்சியாண்மையை வளர்த்துவிடுவதனூடாக இலகுவில் அடைந்துகொள்ளலாம் என்பது ஏனைய நாடுகளின் வளர்ச்சி நமக்கு கற்பிக்கும் பாடமாகும்.
இந்தத்துறையை விருத்திசெய்ய வினைத்திறனான நிதி மற்றும் ஊழியச் சச்சந்தை அத்துடன்; இலகுவான மற்றும் வெளிப்படையான தனியார் துறை வரிவிதிப்பு என்பன உலக சந்தையுடன் ஒத்துப்போகும் வகையில் இருப்பதனை நிச்சயப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். அதாவது இந்த தொழில் முயற்சியாண்மை ஒரு பொருளாதார வளர்ச்சி மாத்திரமல்ல இவற்றை கொண்டு செல்வது ஒரு பாரிய சவாலாகவும் இருக்கின்றது.
இலங்கையில் இந்த நிலைப்பாடு ஒரு குழப்பகரமானதாகவே இருந்து வருகின்றது. ஒரு பக்கம் பெரிய தனியார் நிறுவனங்கள் கொழும்பினையே தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றது இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இது தனியார் துறையின் முதுகெலும்பாக அமைந்துள்ளமை கறிப்பிடத்தக்கது. அதே நேரம் சிறு தொழில் முயற்சியாண்மை அதிகமாக கிராமப்புறங்களிலேயே மிக சிறிய தொழிலாளர்களுடன் இயங்கி வருகின்றது. ஆனால் நடுத்தர முயற்சியாளர்கள் எங்கும் பரந்து இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
சில தொடக்கநிலை முயற்சியாளர்கள் தங்களது தொழில் முயற்சியை ஆரம்பிக்க நிதி இல்லாது இருக்கின்றார்கள், அதுபோல ஏற்கனவே முயற்சியாண்மையில் ஈடுபட்டுவருகின்றவர்கள் தகுந்த சந்தை வசதி மற்றும் வழிகாட்டல் இல்லாமல் இருந்து வருகின்றனர். இந்த இருவகையான சவால்களுக்கும் விடைகொடுக்கவே இன்று ' என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா' திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பல தசாப்தமாக இத்துறையை வேகமாக விருத்திசெய்ய பல முயற்சிகளை அரசு எடுத்து வருகின்றபோதும் அவை சொல்லக்கூடிய அளவுக்கு வெற்றியளிக்கவில்லை. காரணம் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் தொழில் முயற்சியைவிட (நஒpழசவ-கழஉரளநன எநவெரசநள) இறக்குமதி சலுகை கலந்த முயற்சியாண்மையே (iஅpழசவ ளரடிளவவைரவழைn நககழசவள) அதிகரித்து வந்துள்ளமை சொல்லப்படுகின்றது.
இப்போது காணப்படுவது மிக போட்டித்தன்மையான உலகம், இன்று தோன்றும் பல புதிய கம்பனிகள் உலகமயமாக்கலை அனுசரித்த நோக்கத்துடனே உருவாகி வருகின்றன. அதனால் அவர்கள் உலகின் பெறுமானச் சங்கிலியுடன் தொடர்பினைப் பேணக்கூடியதாக ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் இந்தக் கம்பனிகளுக்கு உதவுவது, அவர்களை தகுதியான முதலீட்டாளர்களுடன் இணைத்துவிடுவது, அதுபோல் ஏற்றுமதி சந்தர்ப்பங்களை உருவாக்குவது என்பதெல்லாம் உண்மையில் ஒரு கடினமான வேலையாகும். ஆனால் இச்செயறபாடுகள்; இலங்கை வியாபாரத்தினை உலகுடன் இணைப்பதற்கான ஒரு சூழலை உருவாக்கும் இலகுவான வேலைத்திட்டமாகும். அவற்றை இலங்கை அரசு பலகாலமாக கருத்தில் எடுக்கத் தவறிவந்துள்ளது. ஆகவே இங்கு கட்டமைப்பு மாற்றத்தினை இந்தச் சூழலுக்கு பொருத்தமானதாக மாற்றியமைக்க வேண்டும்.
இன்று வெற்றி பெற்ற முயற்சியாளர்களிடையே சிறிதளவானவர்களே ஏற்றுமதியாளர்களாக மாற்றம்பெறுவதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இது ஒரு முக்கியமான மையில் கல்லாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் இவற்றின் மீது செலவிடப்பட இருப்பது பொதுமக்களினுடைய பொதுப்பணம் ஆகவே இவற்றில் வெற்றிபெறும் மார்க்கத்தினை உருவாக்குவதில் அரசாங்கம் கருசனையுடன் இருப்பது அவசியமாகும்.
0 comments:
Post a Comment