ADS 468x60

10 May 2022

உண்மையான மக்கள் புரட்சியும் பொய்யான அரசியல்வாதிகளும்

நாம் அனைவருக்கும் தெரிந்தவகையில் கோல்பேஸ் போராட்டமும், அலரிமாளிகை போராட்டமும் நசுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட விதத்தை வன்மையாக கண்டிக்கிறேன். 

இதேபேரவலம் உலகில் இன்னொரு நாட்டிற்கு நேர்ந்த கதையினை சொல்ல விரும்புகின்றேன். இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 17, 2010 அன்று, ஒரு காய்கறி விற்பனையாளர் ஆபிரிக்கக் கண்டத்தில் வடக்கே உள்ள டியூனிசியா சந்தையில் தீக்குளித்தார். காரணம், நடைபாதையில் காய்கறிகளை விற்க அனுமதிக்க டியூனிசியா போலீசார் அவரிடம் லஞ்சம் கேட்டனர். ஆந்த நேரத்தில் டியூனிசியா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. டொலரின் மதிப்பு கடுமையாக சரிந்தது, அதன்போது டியூனிசியாவை 23 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த அதிபர் பென் அலி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக, டியூனிசிய மக்கள் அரசாங்கத்தை வெறுத்தனர். 

காய்கறி விற்பனையாளர் மொஹமட் பௌசி தீக்குளித்து இறந்ததைத் தொடர்ந்து, அன்று இந்த சம்பவம் பேஸ்புக் மூலம் டியூனிசியா முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது கோபமடைந்த மக்கள் அதிபர் பென் அலிக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக வீதியில் இறங்க ஆரம்பித்தனர். இறுதியில், மக்கள் எதிர்ப்பு பரவத்துவங்கியது, தொடர்ச்சியான அட்டூழியங்கள் மற்றும் படுகொலைகளுக்குப் பிறகு, ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் அரசியல் தஞ்சம் கோரினார்.

ஃபேஸ்புக் மற்றும் எஸ்எம்எஸ் மூலம்தான் டியூனிசியா மக்கள் நாடு முழுவதும் டியூனிசியா போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு செய்திகளை பரிமாறிக் கொண்டனர். இதன் விளைவாக, டிஜிட்டல் தளமான பேஸ்புக்கைக் கவிழ்த்த உலகின் முதல் அரசாங்கமாக டியூனிசியா அரசாங்கம் ஆனது. 

இதேபோல் மாலைதீவில் புரட்சி ஒன்று முதலில் எஸ்எம்எஸ் மூலம் செய்திகளை பரிமாறி ஆரம்பித்தனர். மாலைதீவு அதிபர் அப்துல் கயூம் நீண்ட காலம் ஆட்சி செய்தபோது ஆத்திரமடைந்த மாலைதீவு மக்கள், கடந்த 2005ம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பை நடத்தினர். இந்த யோசனை முற்றிலும் எஸ்எம்எஸ் மூலம் பரவியது. அந்த நேரத்தில் எஸ்எம்எஸ் ஒரு உடனடி செய்தி அமைப்பாக இருந்தது. அதன்படி, மாலைதீவு அரசு அந்நாட்டின் டெலிபோன் எக்சேஞ்ச் சிக்னல் சிஸ்டம் மூலம் எஸ்எம்எஸ் நெட்வொர்க்கை முழுமையாக நடுநிலையாக்கி சதியை முறியடித்தது கதை.

அதுபோல அரபு வசந்தம் மக்கள் எழுச்சி என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு 100 வீதம் புரட்சிகரமான அம்சங்கள் இலங்கையில் இல்லாவிட்டாலும், அந்த வகையான மக்கள் எழுச்சி இந்த நாட்டில் இன்று ஆரம்பமாகிவருகின்றது. தலைவர்கள் இன்றி பிரஜைகளின் பங்களிப்பை மாத்திரம் கொண்ட இந்த புரட்சிகர நடவடிக்கையின் பிரதான நோக்கம் கோட்டாபயவையும் மஹிந்தவையும் வீட்டுக்கு அனுப்பி தற்போதைய பொஹொட்டு அரசாங்கத்தை கவிழ்த்து நாட்டை வேறு ஒரு சக்தியிடம் ஒப்படைப்பதாகும். அதன் முதல் பகுதி ஏற்கனவே சரியாகப் போய்விட்டது. தற்போதைய ஆட்சியாளர்கள் மிகவும் மோசமானவர்கள் என்றும், மக்கள் பட்டினியால் வாடுவதைப் பார்த்துக்கொண்டு அவர்களை மீட்க எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கையினையும் எடுக்காத தலைவர்களை இந்நாட்டு மக்கள் முற்றாக வெறுக்கத்துவங்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் மக்களின் அரச தலைவர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ச சில தியாகங்களைச் செய்ய வேண்டும் என்பதே எமது புரிதலாகும். முதல் பார்வையில், அரசாங்கம் அதிகாரத்தை கைவிட வேண்டும் என்று முழு நாடும் கூறுகிறது. ஆனால் அரசாங்கம் எந்த வகையிலும் அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தால், எரிபொருள், எரிவாயு, உணவு மற்றும் டொலர் நெருக்கடிகளைத் தீர்க்க வேண்டும். இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது, எம்மிடம்; போதுமான எரிபொருள் இருக்கிறது என்று அர்த்தமல்ல. பழைய விலையில் மக்களுக்கு போதுமான எரிபொருளை; வழங்குதல். அத்துடன், பழைய விலைக்கே போதிய எரிவாயு விநியோகம், போதிய மலிவு உணவுப் பொருட்களை சந்தைக்கு கொண்டுவந்து, தற்போது 400 ரூபாவாக உள்ள டொலர் 210 ரூபாவாகும் வரையான செயற்பாடே புதிய அரசின் கடமையாக இருக்கவேண்டும் என எதிர்பார்பது நியாயம் தான்.

இவ்வாறான ஒரு நிலையினை நாட்டில் அரசு கொண்டுவர முடியவில்லையானால் அடுத்த கட்டமாக அரசாங்கம் அதிகாரத்தை துறக்க வேண்டும். ஆட்சியை துறந்து ஆட்சியைப் பிடிப்பவர்கள் அதைச் சரியாகச் செய்யத் தவறினால், மீண்டும் மக்கள் அவர்களைக் விரட்டியடித்துவிடுவார்கள்;. கோத்தபாயவும் மஹிந்தவும் ஆட்சியை விட்டு வெளியேறியதும் அடுத்த அரசாங்கத்தை அமைக்க சஜித் பிரேமதாச தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. சஜித் தனது வேலையை சரியாக செய்யத் தவறினால் அவரை வெளியேற்ற ரிஜெக்ட் சஜித் என்ற ஹேஸ்டேக் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. கோட்டா கோகோம் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியவர்களே இதையும் உருவாக்கியுள்ளனர்.

எனவே இனி மக்களை ஏய்பவர்கள், சரியாக வேலை செய்யாது போலிக்கதைபேசி மக்களையும் நாட்டினையும் வங்குரோத்துக்குள்ளாக்கி சுகபோக வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அரசியலுக்கு வரமுடியாத யுகம் ஒன்று இன்று துவங்கியுள்ளது.


0 comments:

Post a Comment