ADS 468x60

07 May 2022

யதார்த்தத்தினை புரிந்துகொண்டுள்ள அரசு

இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ஆற்றிய உரை நம் அனைவரின் கண்களையும் திறக்கிறது என்றே கூற வேண்டும். நாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இந்தக் கதை உருவாக்குகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கதை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி நமது பொருளாதாரத்தின் உண்மைக் கதையைச் சொல்கிறது. பொருளாதாரத்தைப் பற்றி தற்பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பொருளாதாரம் பற்றிய விஷயங்களை மறைக்கும் போது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இது சரியான செயல் அல்ல. இரண்டாம் பாகத்தில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பின்பற்ற வேண்டிய உத்திகள் பற்றி கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே வேலை செய்யத் தொடங்கியுள்ளனர்.

நமது அந்நியச் செலாவணி கையிருப்பு டொலர் 50 மில்லியனுக்கு மேல் இல்லை. இது மிகவும் கடினமான மற்றும் துரதிஸ்ட்டவசமான சூழ்நிலை. அன்னிய செலாவணி கையிருப்பை விரைவில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளோம். திடீர் வரி குறைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் முன் பேச்சுவார்த்தைகள் இல்லாதது ஆகியவை நெருக்கடிக்கு பங்களிக்கும் காரணிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. வெளிநாட்டு மூலங்கள் மற்றும் வருமான ஆதாரங்களில் இருந்தும்,       தேவையில்லாமல் பெறப்பட்ட கடன்கள் சுமையை கூட்டியுள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணியில் பெரும்பகுதியை கடன் மற்றும் வட்டியை அடைப்பதற்குப் பயன்படுத்துவதும் நல்லதல்ல.

1950களில் இருந்து இலங்கை வெளிநாட்டுக் கடன்களுக்கு வெகுவாக ஈர்க்கப்பட்டது. அன்றைக்கு நீண்ட காலக் கடன்கள் வழங்கப்பட்டன, வட்டியும் இன்று இருப்பதை விட மிகக் குறைவாக இருந்தது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே வெளிநாட்டுக் கடனை வெற்றிகரமாக நிர்வகிக்கப்படவில்லை என்று தெரிகிறது. ஆதன் பின்னர் 1977ல் இருந்து வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துள்ளன. பின்னர், கடன் மற்றும் வட்டியை அடைக்க அதற்று பிரத்தியேகக் கடன்களும் திருப்பிச் பெறப்பட்டன இது இன்றுவரைக்கும் அப்படியே தொடருகின்றன. ஆகவே யார் ஆட்சியைக் கைப்பற்றினாலும் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்த வேண்டும் அதுதான் இன்றய அதுதான் யதார்த்தம்.

நிதி அமைச்சர் குறிப்பிடுவது போன்று பொருளாதார நெருக்கடி இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வராது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். நாட்டின் அனைத்து குடிமக்களும் அந்த நேரத்தில் எந்த சுமையினையும் தாங்கத் தயாராக இருக்க வேண்டும். தற்போது பல உலகளாவிய நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தவிர நட்பு நாடுகள் எமக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. உதாரணமாக இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் வங்காளதேசம். நட்பு நாடுகளின் ஆதரவும் இதில் தீர்க்கமான காரணியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. நமது வெளியுறவுக் கொள்கையின்படி எந்த நாட்டிலிருந்தும் கடன் மற்றும் உதவிகளைப் பெற முடியும் அதனையே இன்று அரசு துருப்புச் சீட்டாக எடுத்துள்ளது..



0 comments:

Post a Comment