நம் நாட்டில் பண்டங்களின் விலை உயர்வுக்கு எப்பொழுதும் ஏதோ ஒரு காரணம் உண்டு. மழையால் காய்கறிகள் விலை உயரும். அல்லது வெயிலின் காரணமாக பயிர்கள் கருகி, காய்கறிகளின் விலை உயரும். ஒன்று ரசாயன உரம் இல்லாததால் அரிசி விலை உயரும். அல்லது உலகச் சந்தை விலை உயர்வு எண்ணெய் விலையை உயர்த்தும். இதனால் பெட்ரோலியத்திற்கும் தேங்காய் எண்ணெய்க்கும் பெட்ரோலியத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வது எளிது.
தற்போதைய அறிக்கைகளின்படி, உலக எரிபொருள் விலையுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் விற்பனை விலை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இதனடிப்படையிலேயே அரசாங்கம் விலைவாசி உயர்வு என்கிறது. இந்த விலைகளின் திருத்தத்தின் அடிப்படையில் இலங்கை வரலாற்றில் ஒருமுறையாவது பெற்றோல் விலை குறைந்ததில்லை. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிக்கத் தொடங்கினால், ஒரு நாள் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு வாகனத்தின் மதிப்பை விட அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையை சமாளிக்க அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மட்டுமே வேலைக்குவர வேண்டும் என அரசாங்கம் கூறுகிறது. நூம் அவர்களை வேலைக்கு வருபவர்கள், வேலைக்கு வர விரும்புபவர்கள், வேலைக்கு வர வேண்டியவர்கள் என மூன்று வகையாகப் பொதுவாக பிரிக்கலாம். அதில் வழக்கமாக வேலைக்கு வருபவர்கள், வேலைக்கு வர விரும்புபவர்கள் என இருவரையும் நீக்கும்போது அத்தியாவசியமான சிறுபான்மையினர்தான் மிச்சமாக இருப்பர். இந்த குறிப்பிட்ட சேவையாளர்களிடமிருந்து ஒரு நாட்டைக் மீட்டெடுகக முடிந்தால் அது மிகவும் நல்லது. இதை முன்னுதாரணமாக கொண்டு, தேவைப்படுபவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று ஒரு அறிக்கையை அரசாங்கம் வெளியிட வாய்ப்பு உள்ளது அல்லவா. அதன் பின்; இரண்டுமே நடக்காது என மக்கள் கருதுகின்றனர்.
இந்த நேரத்தில் உலகம் முழுவதும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது. இந்த நெருக்கடியில் முதல் இரண்டு நாடுகளாக ஆப்கானிஸ்தானும் இலங்கையும் அடையாளம் காணப்பட்டுள்ளன. எல்லா வகையிலும் இரண்டாவது அல்லது மூன்றாவது அல்லது அதற்குக் கீழே இருக்க வேண்டிய இலங்கை, இந்த விடயத்திலும் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலகளாவிய கோவிட் 19 தொற்றுநோய் மற்றும் சமீபத்திய உக்ரைன் நெருக்கடியால் உலகளாவிய பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என்று பலர்; நம்புகிறார்கள். உலகின் பிற பகுதிகளில் பொருளாதார நெருக்கடி சமீபத்தில்தான் தொடங்கியது. கோவிட் 2019க்குப் பிறகு, மற்ற நாடுகள் படிப்படியாக நெருக்கடியில் இருந்து உயர்ந்து நிலைபெற்றன. ஆனால் நாம் அறிந்த காலத்திலிருந்தே இந்த நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டது. 1948ல் நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல், பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. முன்னொரு காலத்தில் எங்களின் லோங்ஸின் பின் பொக்கெட்டில் அவசர தேவைக்கு எடுத்துச் செல்ல கொஞ்சம் பணம் இருந்தது. இப்போது அந்த பொக்கெட்டில் பணம் இல்லை, அதனால் நமக்கு அவசரத்துக்கு பணம் தேவைப்பட்டால் இந்த லோங்ஸின் கழற்றி விற்க வேண்டிய நிலை இப்போது உருவாகியுள்ளது. ஒரு நாடு என்ற ரீதியிலும் இதுதான் நிலைமை.
1948 இல் வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது இலங்கை அரசிடம் ஒதுக்கு என்ற நிதி இருந்தது. அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுனர்கள் சபையின் உறுப்பினர் ஜோன் எக்ஸ்டர் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இங்கு வந்து இலங்கை மத்திய வங்கியை நிறுவியதன் பின்னர் அதனை மேலும் பலப்படுத்தினார். நாட்டில் ஒரு அனர்த்தம் ஏற்பட்டால், இந்த மேலதிக ஒதுக்கு நிதி என்று அழைக்கப்படும் சேமிப்பில் இருந்து பணம் பெறப்பட்டது. 1977 ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக்கு வந்து திறந்த பொருளாதாரம் நாட்டிற்குள் நுழைந்தவுடன் இந்த எண்ணக்கரு தகர்க்கப்பட்டது. ஜோன் எக்ஸ்டர் 2006 இல் இறந்தார். தான் உருவாக்கிய இலங்கை மத்திய வங்கியின் ஒதுக்கு நிதி தன் கண் முன்னே சரிந்து கிடப்பதைப் பார்த்த இந்த வெள்ளைக்காரனுக்கு எப்படித் தோன்றியது? இப்போது மேலதிக ஒதுக்கு நிதி இல்லை. அவசரத் தேவைக்கு 50 காசு கூட மிச்சமில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த நாட்டில் உருவாகிய ஒவ்வொரு அரசாங்கமும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என அடிக்கடி கூறுகின்றனர். இது ஒரு உண்மைக் கதை. அது ஒரு போதும் திருத்த முடியாத தவறு.
0 comments:
Post a Comment