ADS 468x60

01 May 2022

உழைப்பைத் தேடி ஓடும் சாமானியர்கள் நாங்கள்

உதிரத்தையே வியர்வாகச் சிந்தி இந்த நாட்டின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்காகவும் தியாகம் செய்து உழைத்தவர்கள் போற்றுதற்குரியவர்கள். உழைப்புக்கு ஜாதி, மத ஆண் பெண் பிரதேசம் என்ற எந்தவித பேதமும் இல்லை. குடும்பத்திற்காக ஆண்கள் ஓய்வின்றி உழைக்கின்றனர் என்றால் அந்த அச்சாணி முறிந்து விடாமல் காப்பதற்காக பெண்களும் வேலைசெய்து கைகொடுத்து கரைசேர்க்கின்றனர். ஆணும் பெண்ணுமாக வேலை பார்க்கும் வீட்டில் விடுமுறை என்பது இருவருக்குமே கிடையாது தான்.

இன்று (மே 1) உழைப்பாளர் தினம். கோடீஸ்வரனுக்கும் ஏழைக்கும் நேரம் ஒரே அளவு தான். ஒரு சாண் வயிற்றுக்காக ஏழை ஓடிக் கொண்டே இருந்தால் இருப்பதை தக்கவைப்பதற்காக பணக்காரர் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த உழைப்பில் உயர்வு, தாழ்வில்லை. வீட்டுக்காக தங்களை அர்ப்பணித்து மெழுகாய் உருகி கொண்டிருக்கும் அனைவருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

ஏனெனில், பின்தங்கிக்  கிடந்த பல நாடுகள் இன்று வளரும் நாடுகளாகவும்,  வளரும் நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளாகவும் மாற்றமடைந்து இருப்பதற்கு தொழிலாளர்களின் கடின உழைப்பே காரணம். இன்று உழைப்புக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு இல்லாமல் விளிம்பு நிலையில் இருக்கும் தொழிலாளர்கள் உயர்வடையும் நாளே உண்மையான உழைப்பாளர் தினம் ஆகும் என்பதே எனது சித்தாந்தம்.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில்மயமாக்கலின் போது,  அமெரிக்காவில் தொழிலாளர் வர்க்கம்' தொழிலதிபர்களால் சுரண்டப்பட்டது மற்றும் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை வேலை செய்யும்படி கட்டாயபடுத்தியது. இதனால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இருப்பினும், இந்த வேலைநிறுத்த போராட்டம் பல உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை, மரண தண்டனை விதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொழிலாளர் இயக்கத்திற்கு பெரும் உத்வேகத்தை அளித்ததாக நம்பப்படுகிறது. இதை நினைவுகூரும் வகையில் மே 1 சர்வதேச தொழிலாளர் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து' 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு' சிகாகோவின் தேசிய மாநாட்டில்' எட்டு மணிநேரத்தை சட்டப்பூர்வ வேலை நேரம் என அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியா உட்பட பல நாடுகள் எட்டு மணி நேர வேலை கொள்கையை ஏற்றுக்கொண்டன.

ஆகவே இன்றும் பல அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும், வன்முறைகளுக்கும் எதிராக கிளர்ந்தெழுந்துள்ள எமது மக்களுக்கு விடிவு தொலைவில் இ;ல்லை என்பதனைவே இது பறைசாற்றுகின்றது.

வாழ்க்கையில் நல்லது எதுவுமே எளிதில் கிடைக்காது

எப்போதும் கடின உழைப்பாளியாக இருங்கள்.

உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் முயற்சி செய்துகொண்டே இருங்கள்....

இனிய மே தின வாழ்த்துக்கள்!!!


0 comments:

Post a Comment