ADS 468x60

17 May 2022

ஆரோக்கியமான நாடளுமன்றத்துக்கு ஐந்து பரிந்துரைகள்

ஒரு தடைவை நாடாளுமன்றத்தினைக் கூட்ட 90 இலட்சம் ரூபாய்களை இலங்கை செலவிடுகின்றது. இந்த இக்கட்டான நேரத்தில் இது மிக முக்கியமானதொன்றாகவே பார்க்கப்படுகின்றது. இந்த செலவினை வைத்து எந்தவித நல்ல முடிவுகளையும் எடுக்கமுடியவில்லை எனில் அதனால் மக்களுக்கு என்ன பயன்?. ஆதனால், இன்று நாட்டு மக்கள் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தின் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். ஆனால் அவ்வாறு நினைப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன என்பது பெரும்பான்மையான கருத்து. இது நாடாளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை தகர்க்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது. ஆட்சியில் மக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியமானது. ஆட்சியாளர்களை நியமிப்பதற்கும் ஆட்சியாளர்களை அகற்றுவதற்கும் மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்று பலர் வாதிடுகின்றனர். அது புறந்தள்ள முடியாத ஒரு வாதம்.

மிக நெருக்கடியான தருணத்தில் கூட, அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் சுயநலத்திற்காகவே செயல்படுகின்றனர். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிகள் குறித்து மிகுந்த உணர்வுப்பூர்வமாக பேசப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் நெருக்கடியை தீர்ப்பதில் எந்த தியாகத்தையும் செய்ய விரும்பவில்லை. தங்களின் ஆதிக்கம், கட்சி பலம், வெற்றி என இன்னும் அவற்றை முன்னுரிமைப்படுத்தி எண்ணிக்கொண்டிருப்பவர்களே அதிகம். இது இன்று பாராளுமன்றம் கூடியபோது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரலாறு நமக்குப் பாடம் புகட்டுவதால், மக்கள் பிரதிநிதிகள் இவற்றை உதாரணமாகக்கொண்டு நேர்மையான முயற்சி எடுக்க வேண்டும். 

நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், நாடாளுமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே செய்தி. அதுதான் இந்த தருணத்தில் நடக்க வேண்டும். நாட்டின் இளம் தலைமுறையினருக்கு நாடாளுமன்றத்தின் மீது இன்று நம்பிக்கை இல்லை. இது ஒரு துரதிஸ்டவசமான நிலை. ஆசியாவிலேயே மிகப் பழமையான நாடாளுமன்ற முறையைக் கொண்ட நாடாக இலங்கை அறியப்படுகிறது. ஆகவே இலங்கை நாடாளுமன்ற அமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர். 

இந்த இடத்தில் முக்கியமான ஐந்து விடயங்களை பரிந்துரைக்க விரும்புகிறேன்;. 

1. நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க நாடாளுமன்றத்தில் உள்ள இருநூற்றி இருபத்தைந்து மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும். 

2. நாடாளுமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். 

3. நாடாளுமன்றத்தின் நேர முகாமைத்துவத்தினை உணர்ந்து செயற்படுவதனை உறுதிப்படுத்தல். 

4. கட்சி பேதமின்றி கூட்டாகச் செயல்படுவதனை உறுதிசெய்தல்.

5. நெருக்கடியில் இருந்து மீளுவதற்கான பேச்சுக்களைவிடுத்து செயற்பாட்டில் நிருபித்துக்காட்டுதல்.

தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க மேலுள்ள ஐந்து காரணிகளும் நன்றாகப் பொருந்தலாம்.

0 comments:

Post a Comment