மட்டு மண்ணில் எங்கும் ஓடும் ஆறு- இங்கு
மானங் காக்கும் வீரர் உண்டு நூறு
வந்தவரும் இங்கு இல்லை வேறு- நாங்க
வாழ வைக்க எங்கும் உண்டு சோறு ஹேய்
வாடா இறங்கி வாடா ஹே
வாழும் வரையும் போராடு
வாடா இறங்கி வாடா நீ
வாழும் வரையும் போராடு
வாகரை எல்லாம் கடற்கரை தாளமிசைக்கும்
கொக்கட்டிச் சோலை வயலினில் குருவிகள் பாடும்
ஆலயம் தோறும் தமிழரின் காவியம் கூறும்
ஆநிரை கூடி செல்வங்கள் அளவின்றி ஊறும்
இனியும் கவலைகள் இல்லை (chorus இல்லை)
வானம் அதுமட்டும் எல்லை ஹேய்
வயலில் விதைக்கணும் நெல்லை உன்
வாழ்வில் மலர்ந்திடும் முல்லை
புதிதாய் விதை போடு
ஓஹோ புயலாய் நீ ஓடு
பூவாய் நீ ஆடு
ஓஹோ புதையல் உன்னோடு
புதையல் உன்னோடு வாடா வாடா
அத்தான்மேல ஆசவைச்சி வயலுக்க வாமா நீ
ஆக்கி வச்ச சோத்தக் கொண்டு ஆறப்போடுமா
மத்தாளத்துடன் ஒண்டு சேரக் கூத்துமாடுவோம் நாங்க
மாலைநேரம் வயலுக்குள்ள பாட்டுப் பாடுவோம்
உங்கள் உறவினில் ஒருவன் ஹேய்
ஊரைக் காத்திடும் மறவன் (chorus மறவன் )
எங்கள் மண்ணுக்கு முருகன் ஹேய்
ஏங்கும் மக்களின் இறைவன்
நாளை நான் வருவேன்
ஓஹோ நன்மைகள் தினம் தருவேன்
ஏழை இனி யாரு
ஓஹோ எல்லாம் எம் ஊரு
எல்லாம் எம் ஊரு வாடா வாட
0 comments:
Post a Comment