ADS 468x60

23 October 2025

முருகா முருகா உன்னை வேண்டியே

 முருகா முருகா உன்னை வேண்டியே மருகா மால்மருகா தினம் பாடினேன்

கந்தர் சஷ்டியை கைப்பிடித்தேன் காலம் முழுவதும் துணை வாநீ

ஆறு நாட்களும் நோன்பிருந்து பேறுகள் பெற்றிட தவமிருப்பேன்

பேறுகள் பெற்றிட தவமிருப்பேன்

முருகா முருகா உன்னை வேண்டியே மருகா மால்மருகா தினம் பாடினேன்

முருகா முருகா உன்னை வேண்டியே மருகா மால்மருகா தினம் பாடினேன்

அலைகின்ற மனதில் வந்து நிலைகொள்ளு வேல் முருகா

வினைவந்த போதும் வெற்றி வேல்கொண்டு வா முருகா

விரத நாட்களும் உன்னருளால் வாழ்வில் ஜெயம் கொண்டு வருகுதப்பா

சக்தி வேல்கொண்டு சூரனையே சித்திகள் செய்த குமரேசா

சித்திகள் செய்த குமரேசா

முருகா முருகா உன்னை வேண்டியே மருகா மால்மருகா தினம் பாடினேன்

முருகா முருகா உன்னை வேண்டியே மருகா மால்மருகா தினம் பாடினேன்

மனம்மொன்றி நாள் ஆறும்; நினைத்தவை நான் கேட்டேன்

தினம் உனை மறவாத பெரும்வரம் நீ தந்தாய்

கண்கள் மூடியே வேல் முருகன் கந்தர் சஷ்டியை நான் படித்தேன்

காக்கும் பன்னிரு கைகளினால் அள்ளி அணைக்கி;றாய் அருள்நேசா

அள்ளி அணைக்கி;றாய் அருள்நேசா

முருகா முருகா உன்னை வேண்டியே மருகா மால்மருகா தினம் பாடினேன்

முருகா முருகா உன்னை வேண்டியே மருகா மால்மருகா தினம் பாடினேன்

0 comments:

Post a Comment