ஆனால், இச்சூழ்நிலையில் அரசு மின்சார
வாகனங்கள் (Battery
Electric Vehicles – BEVs) தொடர்பான மிக முக்கியமான
வாய்ப்பை தவறவிட்டது என்பதே கவலைக்குரியது. புதிய BEVs இறக்குமதிக்கு
சலுகைகள்
(Concessions)
அல்லது ஊக்கங்கள் (Incentives) வழங்குவதற்கு
பதிலாக, சுங்கத் திணைக்களத்தில் நூற்றுக்கணக்கான BEVs
தடுத்து வைக்கப்பட்டிருப்பது தவறான செய்தியை வெளிநாடுகளுக்கும்,
உள்நாட்டு வாகனக் கொள்முதலாளர்களுக்கும் அனுப்புகிறது. இது
எதிர்பார்த்த மின்சார மாற்றத்தைத் திசைதிருப்பி, மக்களை
மீண்டும் பெட்ரோல்
வாகனங்கள் (Petrol
vehicles) நோக்கி இட்டுச் செல்லும் அபாயத்தை
உருவாக்குகிறது.
இலங்கை ஆண்டுக்கு சுமார் 6 பில்லியன் டொடாலர் மதிப்பில்
எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இவ்வளவு பெரிய வெளிநாட்டு நாணயச் செலவை
குறைப்பதற்கான ஒரே நீண்டகால வழி — எரிபொருள் சார்ந்த வாகனங்களின் (Fossil fuel-driven vehicles) எண்ணிக்கையை குறைத்து, மின்சார வாகனங்களையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable
Energy) சார்ந்த போக்குவரத்தையும் ஊக்குவிப்பதே ஆகும். ஆனால்
தற்போதைய கொள்கை இதற்கு நேர்மாறான பாதையில் செல்கிறது.
மின்சார வாகனங்களுக்கு ஊக்கத் திட்டம்
வழங்காமல் இருப்பது,
அரசின் ஆற்றல் முகாமைத்துவக் (Energy management) கொள்கையில் தெளிவின்மையை வெளிப்படுத்துகிறது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்காமல், பெட்ரோல் மற்றும் டீசல்
வாகனங்களை பெருமளவில் அனுமதிப்பது, நாடின் எரிபொருள்
இறக்குமதி பில் (Fuel import bill) இன்னும் உயர்த்தும். எனவே,
வரவிருக்கும் பட்ஜெட்டில் (Budget) குறைந்தது
BEV மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு (Hybrid
vehicles) குறைந்த வரி சலுகைகள் வழங்கப்படுவது அவசியம். அதே
நேரத்தில், BEV வாகனங்களைப் பெறுபவர்கள் தங்களுக்கான சோலார்
மின்சார அமைப்பு (Solar
system) ஒன்றை நிறுவுதல் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இதுவே உண்மையான பசுமை இயக்கம் (Green Mobility) நோக்கமாகும்.
மின்சார
வாகனக் கொள்கையில் அரசின் தாமதம் பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலிற்கும்
பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,
மக்கள் நம்பிக்கையையும் குறைக்கிறது. ஏனெனில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் அடிப்படையில் இயங்கும் போக்குவரத்தே ஒரு
நாட்டின் எரிசக்தி சுயாதீனத்திற்கான அடித்தளமாகும். அதற்கு எதிராக நடவடிக்கைகள்
எடுக்கப்படுவது திட்டமிடல் தவறாக (Policy misalignment) கருதப்பட வேண்டும்.
இப்போது
இன்னொரு சிக்கல் வெளிப்பட்டுள்ளது. சமீபத்திய வாகன பதிவு (Vehicle registration) தரவுகளின்படி, மூன்று சக்கர வாகனங்களின் (Three-wheelers) பதிவுகள்
கடுமையாக அதிகரித்துள்ளன. ஏற்கனவே ஹையர் (Hire) சந்தை நிரம்பிய நிலையில், இத்தகைய பெருமளவு பதிவுகள்
ஏற்படுவது, மக்கள் சிறிய கார்கள் அல்லது மின்சார வாகனங்களை
வாங்க இயலாததால் மூன்று சக்கர வாகனங்களை குடும்ப வாகனமாகத் தேர்வு செய்கிறார்கள்
என்பதைக் காட்டுகிறது.
இது
பொருளாதார ரீதியில் புரிந்துகொள்ளத்தக்கது — ஒரு புதிய பெட்ரோல்
மூன்று சக்கர வாகனம் சுமார் ரூ. 20 லட்சம், ஆனால் ஒரு சிறிய 1000 CC காரின் விலை ரூ. 80 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இதுபோன்ற ரூ. 60 லட்சம் வித்தியாசம் ஒரு நடுத்தர
குடும்பத்திற்கு மிகப் பெரிய சுமையாகும். ஆனால் இந்த “மாற்று வழி” ஒரு மறைந்த
ஆபத்தை தாங்கியுள்ளது.
மூன்று சக்கர வாகனம் இயல்பாகவே
பாதுகாப்பற்றது.
ஒரு கூடுதல் சக்கரமும் வலுவான வெளிப்புற அமைப்பும் கொண்ட கார்கள் பாதுகாப்பு, பிரேக் தரம், ஏர்பேக் (Airbags), சீட் பெல்ட், மற்றும் சஸ்பென்ஷன் (Suspension) ஆகியவற்றில் பல
மடங்கு மேம்பட்டவை. பெரும்பாலான மூன்று சக்கர ஓட்டுநர்கள் சாலையில் விதிகளைப்
பின்பற்றாமல் ஆபத்தான முறையில் ஓட்டுகின்றனர். இதனால் பெரிய வாகனங்களுடன்
மோதல்களில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.
அடுத்த
சில மாதங்களில் 10,000 க்கும் மேற்பட்ட புதிய
மூன்று சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டால்,
அவை சம்பந்தப்பட்ட விபத்துகள் அதிகரிக்கும் அபாயமும் உறுதியாகவே
உள்ளது. இதுபோன்ற விபத்துகளின் சிகிச்சைச் செலவை அரசு மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்ள
வேண்டி வரும். இதனால், கார்களுக்கு விதிக்கும் அதிக வரிகளில்
கிடைக்கும் வருவாய் கூட மருத்துவச் செலவுகளால் மீண்டும் அரசின் தோள்களில்
விழுகிறது. பொருளாதார
ரீதியில் இது சுழல் இழப்பாக (Net loss) மாறுகிறது.
இதனால், அரசு சிறிய வாகனங்களின்
விலைச் சரிவை ஊக்குவிக்கும் வகையில் சுங்கக் கட்டணங்கள் மற்றும் வரிகளை (Taxes and Duties) குறைக்கும் முடிவை சீரியஸாகப் பரிசீலிக்க வேண்டும். சிறிய
கார்கள் ரூ. 40–50
லட்சம் வரையில் கிடைக்கும்
வகையில் சலுகைகள் வழங்கப்பட்டால், குறைந்தபட்சம் சில மூன்று
சக்கர வாங்குநர்கள் கார் வாங்கும் பக்கம் திரும்புவார்கள். இது சாலைகளில்
பாதுகாப்பையும், குடும்ப வாழ்வின் தரத்தையும் உயர்த்தும்.
இந்த
நிலைமை எங்களை “பெரிய படம் (Big
picture)” நோக்கி சிந்திக்க வைக்கிறது. அதிகமான மதுவரி (Liquor taxes) மக்கள் “மூன்ஷைன் (Moonshine)” நோக்கி நகர்வது போலவே,
மிக அதிகமான வாகன வரிகள் மக்களை பாதுகாப்பற்ற வாகனங்கள் (Unsafe vehicles) நோக்கி தள்ளுகிறது. இதன் சமூகச் செலவுகள் நீண்டகாலத்தில் எந்த அரசும்
தாங்க முடியாத அளவிற்கு உயரும். பல நாடுகள் மூன்று சக்கர வாகன
இறக்குமதி அல்லது பதிவு (Registration) முறையே
தடைசெய்திருப்பதும் இதற்கே காரணம் — பாதுகாப்பு பணத்துக்கு மேலானது.
அதனால், அரசின் வாகன இறக்குமதி கொள்கை
மறு
சிந்தனைக்கு (Rethink)
உட்பட வேண்டிய நேரம் இது. எதிர்காலம் மின்சாரத்திலும்
புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலும் (Renewable Energy) அமைந்துள்ளது என்பதை உணர வேண்டும். சோலார் ஆற்றல் (Solar power) மற்றும்
காற்றாலை
(Wind
energy) உற்பத்தி விரிவாக்கத்திற்கு தடையாக உள்ள
கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும். நாட்டின் மொத்த மின்சாரத்தின் 90 சதவீதம் வரை புதுப்பிக்கத்தக்க மூலங்களில் (Renewables)
இருந்து உருவாக்க முடிந்தால், மக்கள் தங்கள் BEV
கார்கள் இரவிலே தேசிய மின்சார வலையுடன் இணைத்தாலும் அதுவே உண்மையான பசுமை
இயக்கம் (Green
Mobility) ஆகும்.
இது
மின்சார
வாகனங்களை ஊக்குவிப்பது மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார
எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான கொள்கை மாற்றமாகும். உலகம் முழுவதும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த
போக்குவரத்து ஒரு தேசிய முன்னுரிமையாக மாறியுள்ள
நிலையில், இலங்கையும் தனது வாகன கொள்கையை மறுசீரமைக்க
வேண்டிய நேரம் இது.
0 comments:
Post a Comment