ADS 468x60

26 December 2013

சுனாமி

காலத்தின் தலைகீழ் மாற்றத்தில்
மனிதன் மாத்திரமல்ல
நீயும் எமக்கு எதிரி
வருடங்கள் உருண்டு
ஒளிந்து கொண்டாலும்-நீ
வந்து போன நாள்
இருட்டித்துக் கொள்ளுகின்றது..

மாந்திப் போகாத நினைவலைகள்
சாந்தி சாந்தி எனப் பகரட்டும்---

24 December 2013

யாவரும் மகிழ்சி கொள்வோம்!!.

மெசியா மெசியா!
யூதர்கள் அழைத்தனர் அன்று,
நானும் ஒரு இடையன்,
அவலம், அவமானம்,
சவால்கள், சங்கடங்கள்,
பாவம்,  துரோகம்
இவற்றுடன் களைத்துவிட்டேன்.....

பாவ அடிமைத்தனம்,  அடக்குமுறைகளில்
இருந்து இன்னும் மீளாமல்...
அருவருப்பான, எளிமையான,
துன்பம் நிறைந்த, ஒதுக்கப்பட்ட
இடையன்  என்னிடம்,
இறை மகனே வாருவாயா!

என்னிடம் உன் வருகை சொல்ல
வான தூதர்கள் கிடையாது,
செருக்குடையோர் தலைக்குனிவும்,
வலியோரின் வலு இழப்பும்,
எழியோரை உயிர்த்தெழுதலும்,
உன் வருகையால் நிறைவேறட்டும்,
மகிழ்ச்சி பிரகாசிக்கட்டும்
விடிவெள்ளியாக எனக்கு
வெளிச்சம் காட்டு!!

காட்டுப்பாதையின் முட்புததர்களை
காண்பதற்க்காய்
ஒளியை ஏற்று!!...
என்நாளும் இன்னாளாய் இருக்க
தேவனே உன்னை பிரார்த்தித்து
அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்....

10 December 2013

புன்னகை மட்டும்












அன்பு கனத்துவிட்டுப்போகும்
மனதையும் கரைய வைக்கிறது
பொறுமை நம்மை
அடிக்க ஏங்குவோர்கு ரணமாகிறது
எழிமை எல்லோரையும்
நம்மில் விருப்பம் கொள்ளச் செய்கிறது
புன்னகை மட்டும் 
வரண்ட உள்ளங்களுக்கு மழைத்துளியாகிறது..
மழைத்துளியாக இல்லாவிட்டாலும்
மிருகங்களாக மாறாமல் இருப்போம்
ஏனெனில் அவை புன்னகைப்பதில்லை

23 November 2013

மட்டு மாவட்டத்தில் ஒட்டுமொத்தத்தில் கடந்த ஆண்டு 1102 மாணவர்கள் இடைவிலகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக இடைவிலகும் மாணவர்கள் (339) மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தம்இ வறுமை காரணமாக பின்தங்கிய கிராமங்களை அதிகமாகக் கொண்டுள்ளமை இதற்கு காரணம் என்று சொன்னால் மட்டக்களப்பின் மத்திய வலயத்துக்கு (195) என்ன நடந்தது?? 
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக இடைவிலகும் மாணவர்கள் (339) மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தம்இ வறுமை காரணமாக பின்தங்கிய கிராமங்களை அதிகமாகக் கொண்டுள்ளமை இதற்கு காரணம் என்று சொன்னால் மட்டக்களப்பின் மத்திய வலயத்துக்கு (195) என்ன நடந்தது?? 

இன்றய கல்வியில் இருக்கும் அவநம்பிக்கை இதற்கு ஒரு காரணம். எவளவோ முதுமானி வரைக்கும் படித்துவிட்டு பட்டதாரிப்பயிலுனர்ளாக இருப்பது அவர்களில் உள்ள பிழையா அல்லது அந்தக் கல்வியில் உள்ள தவறா என இன்றய தலைமுறை சிந்திக்கலாம். தொழில் தான் இன்றய கல்வியின் முதல் இலக்குமேஈ ஆனால் இந்தக் கல்வியால் அந்த இலக்கை எட்டமுடியவில்லையே என்பதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்கள் கண்முன் காட்சி தருவதும் நகர் புறங்களில் கல்வியினை தொடர முடியாமல் இருப்பதற்க்கான காரணமாக இருக்கலாம், சாதாரண தரம் முடித்தபின்பே அவர்கள் தொழில் சார் கல்வி அல்லது பயிற்சியுடன் கூடிய தொழில் போன்ற புதிய உத்திகளை கையாண்டு உழைக்கும் மார்க்கத்தினை நாடி விட ஆரம்பித்துள்ளதனைக் காணலாம்.

கல்வியை மாற்றவேண்டும் அது நடைபெறவில்லை அதனால் தானாக மாறுகின்றனர் இது இடைவிலகலுக்கு முழுக்காரணமும் இல்லைதான் ஆனாலும் பெரிய பங்கு இந்தத் தலைமுறையினரின் நியாயமான மாற்றம் புறக்கணிக்கதக்கதல்லவே!












"சமுக கலாசார சீர்கேடுகள் என்ற பேரில் வயிற்றுப்பசியாறும் ஒரு துரதிஸ்ட்ட பெயரினை எமது மாவட்டம் பெற்றுள்ளதோ"

  82,234 குடும்பங்கள் கிட்டத்தட்ட 1/5பகுதியினர் மாத வருமானமாக 1000 க்கும் குறைவாகப் பெறுகின்றமை வறுமையில் வாடுகின்றவர்களின் அதிகப்படியான எண்ணிக்கையை சுட்டிக்காட்டுகின்றது. யுத்தம் நடைபெற்ற வடக்கின் சில மாவட்டங்களில் கணவரை யுத்த அநர்த்தங்களால் இழந்த பெண்களை விடவும் பல மடங்கு அதாவது 24இ084 பெண்களை தலைவர்களாகக் கொண்ட விதவைப் பெண்களை எமது மாவட்டம் 'யுத்தமும்' 'சுனாமியும்' போட்ட சாபத்தினால் இன்னும் கொண்டுள்ளதை தகவல் சொல்லுகின்றது. 
'சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' மட்டக்களப்பின் நிலமை பௌதீக ரீதியில் சில மாற்றங்களை அபிவிருத்தி என்ற வகையில் ஏற்ப்படுத்தி இருப்பினும் மனித வலுவில் ஏற்ப்பட்டிருக்கும் மாற்றம் ஏமாற்றமே என்கின்ற தகவலை கீழுள்ள தகவல் காட்டுகின்றது.

26 September 2013

இனங்களால் ஒன்றாகத் துடியடா

தாகத்தில் தண்ணீரை குடியடா
தலைகீழாய் போவதும் குடியடா
ஒன்றாகச் சேர்ப்பதும் குடியடா
ரெண்டாக பார்ப்பதும் குடியடா

கோயிலில் கும்பிடக் குடியடா
குயவர்கள் பறயர்கள் குடியடா
திருமணம் செய்திடக் குடியடா
இருமனம் பிரிப்பதும் குடியடா

மனிதனில் வேறில்லை படியடா
மதங்கொண்ட மாந்தரை அடியடா
இனங்களால் ஒன்றாகத் துடியடா
இல்லாடடி இருந்தென்ன மடியடா-நீ
இல்லாடடி இருந்தென்ன மடியடா

14 September 2013

மீன்பாடும் தேநாடு வாருமையா


மீன்பாடும் தேநாடு வாருமையா-எங்க
மேலான பண்பாட்டை பாருமையா
தேனோடு பால்தயிர் சேருமையா-நம்ம
தேமதுர தமிழ் ஊறுமையா

நெஞ்சினில் வஞ்சகம் இல்லையையா-எங்க
நிலத்தினில் பஞ்சமும் இல்லையையா
கெஞ்சாமல் தஞ்சமும் கிடைக்குமையா- இரந்து
கேட்போர்கு அமுதள்ளி படைக்குமையா

இல்லாதோர் இல்லாமல் செய்வோமையா-இங்கு
இருக்கின்ற பேதத்தை கொய்வோமையா
கல்லாமை இருள்நீங்கி உய்வோமையா- நம்ம
காலத்தில் உறவினை நெய்வோமையா

ஒரு கிராமத்து காத்து

மண்டூர் வருக்கன் சொழயே  உன் மம்மி எந்தஊரு
வாவிமகள் பாடும் நாடா  வந்தூh கேக்கிறேன்.
நீ வாவிமகள் பாடும் நாடா வந்து கேக்கிறேன்.

சோலையூர் சிவன் தேரு உன் சொந்தம் இங்கயாரு
சொல்லடி கல்லடிப் பாலம் சென்று நோக்கிறேன்
நீ சொல்லடி கல்லடிப் பாலம் சென்று நோக்கிறேன்

காரைதீவுப் பொண்ணப் போல காரமாகப் பார்கிறாய்
போரதீவு பாலப் போல பொங்கிவிட்டு போகிறா
தேத்தாத்தீவு கலையப் போல பாத்தாநீயும் கலக்கிறாய்
புளியந்தீவு கோட்டை யாட்டம் நெஞ்சிக்குள்ள பூட்டுறா
நீ எனக்கு இல்லைஎன்றால் அச்சொடைஞ்ச சில்லு சில்லு
நீ சிரிச்சிப் போனாப்போதும் மப்புஏத்தும் கள்ளு கள்ளு

வெல்லாவெளி வெள்ளாம போல் தலகுனிஞ்சி போகிறா
வாழச்சேனை கடதாசி போல் இடைமெலிந்து இழுக்கிறாய்
கதிரவெளி சோளன் குலையே கண்டமெல்லாம் மணக்கிறாய்
கன்னங்குடா கூத்தப் போல கண்டபடி ஆட்டுறா
காதல் கடல் தாண்ட நீதான் மட்டக்களப்பு வெளிச்சவீடு
கண்ணிரண்டும் ஒன்னத் தேடும் காதறுந்த தோடு தோடு