
உலகின் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளில் முக்கால்வாசி தற்கொலைகள் அல்லது அதற்கான முயற்சிகள் நடுத்தர அல்லது ஆகக்குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிடையே இடம் பெற்று வருகின்றது. அவை கிட்டத்தட்ட ஆண்டொன்றுக்கு 800,000 என உலக சுகாதார நிறுவகம் தெரிவித்துள்ளது. இது மொத்தமாக வேறு காரணங்களால் இறக்கின்றவர்களில் இருந்து 1.4 விகிதமாகும். இலங்கையின் சமுக வலைத்தளங்கள், இணையத்தளங்கள் மூலமான செய்திகளினடிப்படையில் இந்த தற்கொலை அல்லது அதற்கான முயற்சி அதிகரித்துக்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது.







