ADS 468x60

04 August 2013

இலங்கையின் பேண்தகு வீட்டுத் திட்ட செலன்முறைகளும், வாழ்கை முறையும்.

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் அவன் வாழ்வதற்க்கு தேவையான உறைவிடம் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இதனால்தான் எந்த ஒரு நாட்டை எடுத்துக் கொண்டாலும் வீட்டுத்துறை முக்கியமானதாகக் அபிவிருத்தி திட்டங்களில் கருத்தில் எடுக்கப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதாரச் செழிப்பினைத் தூண்டி விடுகின்ற வகையில் எல்லாத் துறைகளையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கும் முகாமைத்துவத்தின் தேவையை வலியுறுத்துகிறது. 

அழகான வீடு ஒரு மனிதனின் அடிப்படை மனிதாபிமானத் தேவையாகும். இது முழுவதுமாக வீட்டுக்காரரின் விருப்பு மற்றும் வாழ்கைத் தரம் என்பன மூலம் செல்வாக்குச் செலுத்துகின்றது. வீட்டுத் திட்டங்களில் ஏற்ப்படுகின்ற முன்னேற்றம் பல வழிகளில் நன்மை பயக்கின்றது. உதாரணமாக பொருளாதார நன்மைகள், சேரிப்புற வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளி, சேமிப்பு ஊக்குவிப்பு, நேரடி மறைமுக கட்டுமானப் பணி வேலைவாய்ப்புகள் மற்றும் நுகர்வு என்பனவற்றினை குறிப்பிடலாம்.

31 July 2013

கருணையுள்ளம் மட்டும்

படித்தவன்தான் இன்று

பகல் வேசம் போடுறான்-பணம்

படைத்தவன்தான் இன்று

அடுத்துயிரை கொல்கிறான்

கிடைத்தவற்றை பிரித்து

அடுத்தவர்கும் கொடுக்கும்

கருணையுள்ளம் மட்டும்

எங்களிடம் அதிகம் அதிகம்

பேஸ் புக்

என் சட்டைப்பேனைக்கு
விடுதலை கொடுத்தவன்
கண்ணீர் துளிக்கு
பெறுமதி சேர்த்தவன்

கண்டங்களுக் கிடையே
பாலம் சமைத்தவன்
சமையல் விவகாரத்தையும்
சர்வதேசத்துக்கு அறிவிப்பவன்

ஒற்றை இடைவெளிக்குள்
காதல் கணை தொடுத்தவன்
அள்ளக்கையர்களையும்
கவிஞ்ஞராக்கியவன்

புகைப்படங்களின் ஆல்பங்களை
அழ வைத்தவன்
கள்ளத் தொடர்புக்கு
சாவி கொடுப்பவன்

இன்னும் ஒன்ன நம்பித்தான்
ஐபோனும் சம்சுங்கும்
சக்கைபோடுகிறது
சொர்க்கமும் நரகமும்
நீதான் அமைத்துக் கொடுக்கிறாய்
பேஸ் புக் - நீ
புரட்சிகளின் புதிய ஆரம்பம்.

உயிர் காப்பதற்க்காக....

நிஜம் ஒறுத்துவிட்டது
அதற்க்காக பொய்கள்
விலைக்கு போகலாமா??

இன்னும் உள்ளுக்குள்
குமறுவதில் மட்டும்
வாழ்ந்து போகிறோம்.....
உயிர் காப்பதற்க்காக....

28 July 2013

தோணிதாட்ட மடுவின் சோகக் கதை....


போய்க்கொண்டே இருந்தோம் அந்த முகங்களைத் தேடி அடர்ந்த காடு, உடைந்த றோடு, விரிந்த புல் வயல் வெயிலில் காய்ந்த பயிர்போல் பல பரிதாப முகங்களைக் கண்டு சோகத்தோடு உள்ளே நுழைகிறோம்... அங்கே புதிய புதிய அனுபவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டோம்.

20 July 2013

எட்டு உயிரை ஒரே குடும்பத்தில் பறித்து ஏப்பம் விட்ட ஆழி அலை-- நடந்தது என்ன!

கரு இருந்து தெரு வரைக்கும் சீவியங்களை பறித்து பசியாறிச் சென்ற ஆழி அலைக்கு வயசு ஒன்பது. காலங்கள் காத்திருப்பதில்லை ஆனால் அது ஞாபகங்களைத் எறிந்து விட்டு நடப்பதும் இல்லை. 26.12.2012 அன்று குப்பம் இருந்து குடிமனை வரை நீத்த உயிர்களுக்கு சாந்திவேண்டி கண்கள் பனிக்க மௌனங்கள் அஞ்சலிக்கப்பட்டன.

19 July 2013

மட்டக்களப்பின் ஆவணங்களை பாதுகாக்கும் முனைப்பு ஆரம்பம்.

ஒரு சமூகத்தின் இருப்பினை உறுதி செய்வது அதன் புராதன சுவடுகளாகும். உலகில் பல தொலைந்து போன நாகரிகங்கள் அதன் சுவடுகளை ஆதாரமாகக்  கொண்டே அதன் வரலாறு ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது. இது போன்று தான் இலங்கைத் தமிழர்களின் தொன்மை வரலாறுகள், பல கால இனமுரன்பாடுகள் காரணமாக நியாயமான அளவு இழந்திருக்கின்றது. குறிப்பாக கிழக்கின் மட்டக்களப்பின்  தொன்மை, பூர்வீகம் சார்பான தேடல் அதன் பராமரிப்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருந்திருக்கவில்லை என்பது கவலைக்குரியதே.

14 July 2013

சிந்துவெளி நாகரிகத்தை விஞ்சிவிட்ட கிழக்கு மக்களின் நாகரிகம்


நாகரிகங்கள் மக்களது வாழ்விடங்கள் சார்ந்து அந்த அந்த இடத்துக்கு ஏற்ப்ப தோற்றம் பெற்ற ஒரு விடயமாகும். மக்களது சமுக வளர்ச்சி அந்த நாகரிக பரிநாமத்தில் பூத்துக் குலுங்கும் ஒன்றாகும். உலகில் தலை சிறந்த விரல் விட்டு எண்ணக்கூடிய நாகரிகங்களுள் சிந்து நாகரிகம் போற்றுதற்க்கு உரியதாகும். இவர்கள் இயற்க்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தனர், இயற்க்கையை நேசித்தனர், இயற்க்கைக்கு பயந்து இயற்கையை வணங்கினர். சிந்து நதி வறட்சி நிலப்பகுதியைச் சேர்ந்த ஒரு காட்டாறு. வெள்ளம் பெருகி வரும் போது படுகைளில் வண்டல் படியும். செடி, கொடி, புதர்களை வெட்டிப் போட்டுத் தீ மூட்டுவார்கள். பின்பு ஆடு மாடு, ஒட்டகங்களை படுக்கப் போடுவார்கள். அவை படுத்து எமுந்த பகுதிகளில் விதைகளைத் தூவி விளைந்த வற்றைச் சேமித்துக் கொள்வார்கள். உலகில் சிந்து நதி தீரத்தில் மட்டுமல்ல பாரசீகப் பகுதிகளில், இன்றய ஈரான், ஈராக் நீல நதிக்கரை(எகிப்து) இல் கூட இப்படித்தான் நாகரிகம் வளர்ச்சி கண்டது.