ஆகவே நாட்டிற்குத் தேவையான உணவை விவசாயத்தின் மூலம் வழங்கக்கூடிய நிலையில் இருக்கின்றோமா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். 1948 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டின் அரிசி உற்பத்தியை அதிகரித்து அரிசியில் நாட்டை தன்னிறைவு நிலைக்கு கொண்டு வருவதற்கு அதிக கவனத்தினைச் செலுத்தியது.
நாட்டில் 1940 களில், நமது ஆராய்சியாளர்கள் ஹெக்டேருக்கு 650 கிலோ அரிசியை அறுவடை செய்ய உதவினர். அன்று பாரம்பரிய நெல் வகைகளையும் பாரம்பரிய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி அந்த அறுவடைத் தொகையைப் பெற்றோம். உண்மைணயில் அதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஆனால் 1950 களின் முற்பகுதியில், நாட்டின் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு உணவளிக்க வேண்டுமானால்;, அதிக விளைச்சலுக்கு நாம் செல்ல வேண்டும் என்று விவசாய ஆராய்சியாளர்கள் அறிந்திருந்தனர். நாம் அறுவடை செய்ய வேண்டிய நிலப்பரப்பும் குறைந்துகொண்டு வந்ததது அதேநேரம் மக்கள் தொகை அதிகரித்து வந்தது. அவர்கள் விளை நிலங்களில் தமது குடியிருப்புக்களை பெருக்கவேண்டியிருந்தது.
இந்த நிலையில், எங்களிடம் இருந்த சிறந்த தீர்வு ஒரு ஹெக்டேருக்கு விளைச்சலை அதிகரிப்பதாகும். அதற்காக நம் நாட்டு விவசாய வல்லுநர்கள் புதிய அரிசி வகைகளைக் கண்டுபிடித்து அவற்றிற்குத் தேவையான உள்ளீடுகளை இறக்குமதி செய்து முன்னேறினர். தற்போது ஒரு ஹெக்டேரில் கிடைக்கும் அறுவடையின் அளவு 4500 கிலோவாக இருந்து 4800 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை விவசாயத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாகும். அதனால் 2008 ஆம் ஆண்டளவில், இலங்கையில் நுகர்வுக்குத் தேவையான அரிசியின் அளவை விட அதிகமாக அறுவடை செய்ய முடிந்தது.
அந்த ஸ்திரத்தன்மையை நாங்கள் தக்க வைத்துக் கொண்டோம். ஆனால் 2016 மற்றும் 2017 இல் பருவநிலை மாற்றம் காரணமாக இரண்டு பருவங்கள் தோல்வியடைந்தன. இலங்கை கடும் வறட்சியை எதிர்கொண்டுள்ளது. அரிசி உற்பத்தி சரிந்தது. 2017ஆம் ஆண்டின் இறுதிப் பாதியில் 7 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை எமது நுகர்வுக்காக இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. இருந்தபோதிலும் 2018ஆம் ஆண்டுக்குள் அரிசி உற்பத்தியை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடிந்தது.
அதன் பின்னர், தொடர்சியர்கு 2020ல் 20,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்தோம். 2021ல் 14,000 மெட்ரிக் டொன் இறக்குமதி செய்யப்பட்டது. எங்கள் மாதாந்த நுகர்வு 185,000 முதல் 200,000 மெட்ரிக் டொன் அரிசியாக இருக்கின்றது. அதனால் ஆண்டுக்கு 24 லட்சம் மெட்ரிக் டொன் அரிசி தேவைப்படுகின்றது.
இன்று நாம் பேசும் உணவு நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் இலங்கையின் விவசாயத்தில் ஓராண்டுக்கு முன் எடுக்கப்பட்ட தன்னிச்சையான தவறான முடிவுதான். இது இயற்கையான நிகழ்வல்ல. அது அரசின் தலையீட்டால் ஏற்பட்டது. கடந்த பருவத்தில் இலங்கையில் நெல் விளைச்சல் 50 வீதத்தால் குறைந்துள்ளது.
பருவத்தின் பாதி ஏற்கனவே கடந்துவிட்டது. ஆனால் விவசாயிகளுக்கு உரம் கிடைக்கவில்லை. யூரியா உரம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரஸ்;யா - உக்ரைன் போர் காரணமாக உலகில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகில் யூரியா உரங்களை உற்பத்தி செய்வதில் ரஸ்யா மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. மறுபுறம், சீனா தனது உரப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளது. நமக்குத் தேவையான உரங்களைப் பெறுவதற்கான வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக அந்நியச் செலாவணி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம். இந்நிலையில் இந்த பருவத்தில் அரிசி உற்பத்தி 50 சதவீதம் குறையும் என்று அறிவியல் அடிப்படையில் கணிக்க முடியும்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள், நமது முழு விவசாயத் தொழிலில் இருந்தும் நுகர்வுக்குத் தேவையான அளவு அரிசியைப் பெற முடியாது. இந்த நிலை அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை நீடிக்கலாம். அடுத்த பருவத்தில் அறுவடை கிடைக்கும் வரை இந்த பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த நிலை உணவு நெருக்கடி என்று அழைக்கப்படுகிறது. அதைச் சமாளிக்க அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கு அன்னியச் செலாவணி தேவை.
உலக அரிசி உற்பத்தியில் 4 சதவீதம் சந்தைக்கு வருகிறது. இந்த தடைகளை எப்படியாவது சமாளித்து மக்களின் தேவைக்கு தேவையான அரிசியை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு. உணவு நெருக்கடிக்கு உடனடி தீர்வு இல்லை. உணவு உற்பத்திச் சங்கிலியை உடனடியாக அழிந்தாலும் அதை இயல்பு நிலைக்குக் கொண்டுவர உடனடி தீர்வுகள் இல்லை. அடுத்த பருவத்தில் வெற்றிகரமாக பயிரிடுவதே எங்களிடம் உள்ள குறுகிய கால தீர்வு. அதன் மூலம் வரும் பெப்ரவரிக்குள் அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.
எப்படியிருந்தாலும், நாங்கள் விவசாயத்தைப் பற்றி பேசும்போது, எரிபொருள் பயன்பாட்டைப் பற்றி குறிப்பாகப் பேசவில்லை. தற்போது விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்களை இயக்க எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். வருங்காலத்தில் உரம், பூச்சிக்கொல்லி, எரிபொருள் பற்றி பேச வேண்டி வரும்.
முதலில், உணவு நெருக்கடியை எதிர்கொள்ள உணவு இறக்குமதிக்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். அதற்கு,
1. அன்னியச் செலாவணியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
2. முக்கிய பருவத்தில் வெற்றிகரமாக விளையவைக்க வேண்டும்.
3. நாம் உணவு நெருக்கடியை எதிர்கொள்கிறோம் என்பதை அறிந்து, உணவை வீணாக்குவதைக் குறைக்க வேண்டும். அதற்கு அரசு மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
ஒரு நாடு முன்னேறுவதற்கு மேற்கூறியவை மிகவும் அவசியம்.
மற்ற முக்கியமான விடயம் என்னவென்றால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஏதாவது ஒருவகையான உண்ணக்கூடிய உணவை வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். உணவின் அளவை அதிகரிப்பதற்கு பதிலாக, உணவின் தரத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும். வீட்டுத் தோட்டக்கலை மூலம் அதை வெற்றிகரமாக செய்ய முடியும். இதில் மரவள்ளிக்கிழங்கு போன்ற பயிர்களை நான் குறிப்பிடவில்லை. ஏனெனில் அறுவடைக்கு அதிக காலம் எடுக்கும். ஆனால் சில வகையான உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் உணவின் ஊட்டச்சத்து தரத்தை அதிகரிக்கும். அடுத்த விடயம், விவசாயம் செய்யக்கூடிய நிலம் இருந்தால், அதை விவசாயம் செய்ய கூட்டாகவும், நிறுவன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்பாடு செய்யலாம். முடிந்தவரை விளைச்சலைப் பெருக்க நாம் அனைவரும் ஆர்வமாக இரக்கவேண்டும்.
இறுதியாக, முக்கிய பருவத்திற்கான விதைகளை உற்பத்தி செய்வதில் நமது கவனம் இருக்க வேண்டும். தேவையான இடுபொருட்கள் அல்லது உள்ளீடுகள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டாலும், விதைகள் மற்றும் நடு பொருட்களை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். விவசாயிகளின் விளைச்சல் பரப்பை நன்கு புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
தற்போது 50 கிலோ யூரியா உர மூட்டை 29000-40000 ரூபாவாக உள்ளது. இது விவசாயிகளால் வாங்கக் கூடிய விலை அல்ல. எனவே, விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளை அரசு கண்டறிந்து, பயிர்ச்செய்கை மற்றும் நெல் உற்பத்திக்கான உரங்களை சலுகை விலையில் வழங்க வேண்டும். இந்த பருவத்தில் எங்கள் வளங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். அதனால் பயிர்களுக்கு முன்னுரிமை அளித்து உரம் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒரு சமுக ஆய்வாளனாக, விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று என்னால் சொல்ல முடியும். இரண்டாவதாக, நமது முன்னணி ஏற்றுமதிப் பயிரான தேயிலைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தீவனப் பயிர்களான சோளத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்தப் பயிர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை மற்ற பயிர்கள் புறக்கணிக்கப்படுகிறது என்று அர்த்தம் இல்லை.
இலங்கை ஒரு அனர்த்த நிலையை எதிர்கொண்டுள்ளது. எங்களுக்கு தெரிந்த வரையில், விரைவில் புதிய பட்ஜெட் வரவுள்ளது. இந்த விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். விவசாய நடவடிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து, உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், கவனமாக கணிப்பிட்டு, முடிவுகளை எடுக்க வேண்டும். விவசாய அமைச்சி ஏற்கனவே சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இலக்குகள் எட்டப்பட்டால், இந்த நெருக்கடியில் இருந்து மீளலாம். இந்த நேரத்தில், ஒவ்வொரு குடிமகனும் நெருக்கடியின் ஆழத்தை குறைக்க பங்களிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment