ADS 468x60

13 July 2022

முதலாளித்துவம் சோசலிசம் இவற்றுக்கப்பால் ஜனநாயகம் என்று ஒரு சக்தி உள்ளது அது மிகவும் ஆபத்தானது.

மிக மிக ஆபத்தான முறையில் கையாளக்கூடிய இரண்டு மாபெரும் சக்தி உலகில் உள்ளது. ஒன்று மக்கள் சக்தி மற்றது குடிநீர் இவை இரண்டும்தான் மிகவும் ஆபத்தான முறையில் கையாளக்கூடியவை. ஜனநாயகம் பலவீனமாக இருக்கும் இடங்களில் மக்கள் சக்தி கிளர்ந்தெழுந்து அரசாங்கத்தை கவிழ்க்கிறது. 

அவ்வாறு ஆட்சி மாற்றத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால், நூறு இருநுர்று அல்லது இருபதாயிரம் அல்லது முப்பதாயிரம் பேர் கூட கொல்லப்பட வாய்ப்புள்ளது. அதேபோல குடிநீர் விநியோகத்தில் விஷம் கலந்தாலும் இதேதான் நடக்கும். அப்போது ஆட்சி மாறாமல் விஷம் கலந்த தண்ணீரைக் குடித்து ஏழாயிரம், எட்டாயிரம் பேர் இறக்கலாம். நாட்டில்; தற்போதய அரசியல் ஒரு குழப்பமாக உள்ளது. 

எனவே முதலாவது முதலாளித்துவம். இரண்டாவது சோசலிசம். இவற்றுக்கப்பால் ஜனநாயகம் என்று ஒரு சக்தி உள்ளது, ஆனால் அது முதலாளித்துவத்தின் ஒரு முகம், எனவே இது தனித்தனியாக விவாதிக்கப்பட வேண்டிய அலகல்ல. ஆனால் எமது மக்களின் வசதிக்காக, சோசலிசம் மற்றும் ஜனநாயகம் என்ற இரண்டு அரசியல் அமைப்புகள் மட்டுமே பூமியில் உள்ளன என்று வைத்துக் கொண்டு இந்த கட்டுரையை இன்று ஆரம்பிக்கலாம்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ;யாவில் லெனின் தனது செம்படையை நிலைநிறுத்தி ரஷ;யாவின் சாரிஸ்ட் வம்சத்தை தரைமட்டமாக்கினார், கிழக்கு ஐரோப்பாவில் சோசலிசத்தின் இரத்தக்கறை படிந்த கொடியை நட்டார். அப்போதிருந்து, சோசலிசம் உலகின் மிக சக்திவாய்ந்த அரசியல் பலமாகப் பார்க்கப்படுகின்றது. 

சோசலிசம் என்பது மக்கள் சார்ந்த அரசியல். ஆனால் அந்த அமைப்பு தொடரும் போது மக்கள் சார்ந்த அரசியல் சிதைவடைந்து, அதிகாரத்துவ அரசியலாகத் தலைதூக்க ஆரம்பிக்கும். இதனால், நீண்டகால நோக்கில் அந்த அதிகாரத்துவ அரசியலும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளாமல் அழிவை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். இந்த அரசியலானது அதிகாரத்துவம் என்று அழைக்கப்படுகிறது. கடந்த நூற்றாண்டில், சோசலிசம் ஒரு கொடிய அரசியல் ஆயுதம் என்று உலகம் நினைத்தது. ஆனால் தற்போதைய அனுபவத்தின் படி இந்த உலகில் மிகவும் ஆபத்தான அரசியல் ஜனநாயக அரசியல் என்பதனை நாம் நம் நாட்டில் இருந்தே கற்றுக்கொள்ளலாம்.

மக்களாட்சி என்பது மக்களுடன் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசியல். சோசலிசத்தில் சில வரம்புகள் உள்ளன ஆனால் அவ்வாறு ஜனநாயகத்தில் எந்த வரம்புகளும் இல்லை. சோசலிசம் ஒரு இரும்புக் கரம். ஆனால் ஜனநாயகம் என்பது ஒரு கை மட்டுமே. ஜனநாயகத்தின் கீழ் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான கைகளை மட்டுமே திரட்ட முடியும். ஆனால் இது சோசலிசத்தின் இரும்புக் கரத்தை விட வலிமையானது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனநாயகத்தின் 'வெறும் கைகளால்' மாத்திரம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேற்றப்படுகிறார். 'போராட்டம்' என்பது வெறும் கைகளின் புனைப்பெயராக பயன்படுத்தப்பட்டது. இந்த நாட்டில் தற்போது நடைபெற்று வரும் போராட்டம் முழுக்க முழுக்க மக்கள் போராட்டம். அதை அடக்க முயன்ற அரசியல்வாதிகள் வெளியேற்றப்பட்டனர். 

இன்றய உள்நாட்டுப் போராட்டத்தில் அரசியல் இல்லை. ஒட்டுமொத்த மக்களின் இலக்கை அடைவது மட்டுமே உள்நாட்டுப் போராட்டத்தின் தேவையாக இருந்தது. 

இங்கு அனைத்து அரசியல் கட்சிகளின் அனைத்துக் கருத்துக்களையும் உருவாக்குபவர்கள் ஒன்றிணைந்து பொதுவான நிகழ்ச்சி நிரலின்படி ஒரு இலக்கை அடைய முயற்சிக்கின்றனர். அதில் கோட்டாபாய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதே இன்றைய மக்கள் போராட்டத்தின் பொதுவான இலக்காக இருந்தது. 

இந்தப் போராளிகளின் இரண்டாவது நோக்கம் ரணிலை வீட்டுக்கு அனுப்புவது. அவர்களின் மூன்றாவது நோக்கம், அடுத்த அரசாங்கத்தில் இந்நாட்டு ஆட்சியில் தங்கள் பங்களிப்பை வழங்குவதாகும். இந்த நோக்கங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா இல்லையா என்று இன்னும் சொல்ல முடியாது. எது எப்படியோ, சோசலிசத்தால் செய்ய முடியாததை ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் சாதிக்க முடியும் என்பதுதான் கடைசியில் சொல்லமுடியும்.



பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றார். இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்த குடிவரவு அதிகாரிகள் உடனடியாக கடமையிலிருந்து வெளியேறி பசிலின் பயணத்தை தடுத்தனர். இதன் காரணமாக பசில் ராஜபக்ச நாட்டுக்கு செல்ல முடியாமல் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட்டைக் கொண்ட ஒரு நபர் தனது விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குக்கு பயணிக்க உரிமை உண்டு. அந்த உரிமையை யாராவது மீறினால், அது சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் மற்றும் விமான டிக்கெட் வைத்திருப்பவரின் அடிப்படை உரிமையை மீறுவதாகிவிடும். 

ஆனால் மக்கள் வெகுஜனப் போராட்டம் நடக்கும் இது போன்ற நேரத்தில், அடிப்படை உரிமைகளுக்கு இடமில்லை. அதன்படி, சம்பந்தப்பட்ட நபர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்று குடிவரவு அதிகாரிகள் நினைத்தால், அந்த எண்ணம் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகி நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் இது நடந்திருந்தால் குடிவரவு அதிகாரிகள் கழுத்தை தொங்கவிட்டு உடலை வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருந்திருக்கும்;. பிரேமதாச காலத்தில் இது நடந்திருந்தால், சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு கழுத்து, தண்டு இரண்டுமே இருந்திருக்காது. ஆனால் இன்று, ஜனநாயகம் மேலும் வளர்ச்சியடைந்து வலுப்பெற்றுள்ள நிலையில், பசில் ராஜபக்ச, மூக்குடைந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக இலங்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. சோசலிசத்தின் சக்திக்கு எல்லை உண்டு, ஆனால் ஜனநாயகத்தின் சக்திக்கு எல்லையே இல்லை. இந்த நிலையை கவனமாகப் பயன்படுத்தாவிட்டால், விளைவு மிகவும் ஆபத்தானது.


0 comments:

Post a Comment