ADS 468x60

06 July 2022

இன்பமே சூழும் இன்பா நீ எங்கே!

ஒரு மாசத்தின் முன் நண்பர் இன்பராசனை சந்திக்கக் கிடைத்தது.
'சீலா எல்லாம் கடவுள் செயல், அவருடைய கையில் ஒப்படைத்துள்ளேன் என் பாரத்தை' என கவலையுடன் தெரிவித்தார். இருப்பினும் பழய நினைவுகளை நான் அவனுடன் இருந்து மீட்டும்போது அவன் அகமகிழ்ந்து, முகம் மலரக் கண்டேன். இறுதியாக ஒன்று சொன்னான், 'மற்றவர்கள் என்னைப் பார்த்து கஷ;டப்படுவதை நான் அனுமதிப்பதில்லை' என என்னிடம் கூறினான் அதனால் இவன் இவ்வாறு நோய்பட்டிருப்பதனைக்கூட பலர் அறிந்திருக்கவில்லை. வித்தியாசமான ஒரு மனிதன். பிறந்த ஒவ்வொருவரும் இறக்கவேண்டும் என்கின்ற சித்தாந்தத்தினை நன்குணர்ந்த இவர், தற்பெருமை இல்லாமல் பிறருடன் சகஜமாகப் பழகும் பாங்குதான் பலரை கவர்ந்த ஒரு முக்கிய விடயம்.


காலையில் இருந்து எனக்கு அழைப்புக்கள் வந்தவண்ணமுள்ளன இறந்த செய்தி உண்மையா என. அந்த அளவுக்கு நானும் அவனும் நண்பர்கள். அதைவிட அவன் பல மனிதர்களை சேர்த்துவைத்திருக்கின்றான். என்னைப்பொறுத்தமட்டில் அவன் இன்னும் இறக்கவில்லை, வாழுகின்றான் அவன் கலைப்படைப்புக்கள் ஊடாக. 

இரண்டு மாபெரும் கலைச்சிகரம் சரிந்தது இந்த தேனூர் மண்ணில். ஓன்று அமரர் ஆறுமுகம் ஐயா மற்றது அமரர் இன்பராஜன். இந்த ஊரில் கலை இலைவிட்டு துளிர்விட்டு தளைத்தோங்க உரம்விட்ட இரு பொக்கிஷங்கள் இன்று எம்மோடு இல்லை! ஆனால் அவர்கள் தாலாட்டி சீராட்டி வளத்தெடுத்த கலை இன்னும் கம்பீரமாக நின்று கலைஞர்களுக்கு அழிவில்லை என்பதனையே காட்டுகின்றது.

இன்பராஜன் என்றும் மக்கள் மனதில் மாசிலா இடம்பிடித்தவர்!





சுருக்கமாகச் சொல்லப்போனால், 

தேத்தாத்தீவு மகா வித்தியாலய முதல் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி வழிகாட்டிய கலங்கரை விளக்கு!

பொருளாதார முதுமானி,

பணிப்பாளர் பதவிவரை புகழ்பெற்ற நிர்வாகி!

கழுகுமலைப் பத்து, பால் மணல் பத்து, கண்ணகியம்மன் காவியம், வசந்தன்கூத்து என கலைகளுக்கு உயிர்கொடுத்து என்றும் உயிரோடு வாழும் சிறந்த கலைச்சிற்பி.

பஜனை நிகழ்வுகளை ஒழுங்கமைத்து பல பிரதேசங்களுக்கும் சென்று ஆண்மீக அமைதி பரப்பிய குட்டி விவேகானந்தர்

கணீர் என்ற குரலில் கருத்தாளமாய் பேசும் சிறந்த பேச்சாளன்

சிறந்த நகைச்சுவையாளன்

இனிமையான குரலில் பாடும் காந்தக்குரலோன்!

சிறந்த நாட்டுப்புறக் கலைஞன்!

இசைக்கருவிகளை இசைக்கும் வல்லாளன்!

சிறந்த அரசியல் ஆய்வாளன்

என எம் ஊருக்கே உரித்தான அந்த பண்புகளையும் சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்ட தன்னடக்கமானவன் ஊருக்கு ஒரு முன்னோடி.

நான் இழக்கக்கூடாது என ஏங்கும் உயிர்களில் நீயும் ஒன்று. நீயில்லாத கோயில், நீ இல்லாத பஜனை நிகழ்வு, நீ இல்லாத ஆலய வர்ணனை நினைத்துப் பார்க்க முடியவில்லை டா.

அன்னாரின் படைப்புக்கள் சில

https://www.youtube.com/watch?v=8oFZnrAz0_I

https://www.youtube.com/watch?v=y-g64Rz8BCk

https://www.youtube.com/watch?v=yIGXPYPhhp8&t=143s

https://www.youtube.com/watch?v=jpQs-9Eu5kU&t=84s

https://www.youtube.com/watch?v=jfJOAWG19vE&t=8s

https://www.youtube.com/watch?v=avb18QpzHX4


0 comments:

Post a Comment