ADS 468x60

07 July 2022

பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள நாம் இன்று கருத்தில்கொள்ளவேண்டியவை!

நம்மில் பலர் இன்று நெருக்கடியென்றால் என்ன என சொல்லாமலே அனுபவித்து அறிந்துகொண்டிருக்கின்றார்கள். நான் உட்பட யாரும் கண்டிராத பதிய ஒரு இறுக்கத்துள் வாழ இன்று எமத மக்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றார்கள். அதனால் இன்று எமது தேசத்தில் பொருளாதார நெருக்கடி நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதி உச்சத்துக்கு வந்துள்ளது. அதிலிருந்து விடுபடுவது ஒரு சாதாரண விடயமல்ல. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒருபுறம். மறுபுறம், எரிபொருள் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அந்நியச் செலாவணி நம்மிடம் இல்லாத நிலை. இவ்வாறான இந்த அபாய சூழ்நிலையிலிருந்து வெளியேற வழி இல்லை. அதற்கு என்ன செய்யலாம்? இதை ஒரு பொருளாதார ஆய்வாளன் என்ற நிலையில் இருந்து நோக்க விரும்புகின்றேன்.

இலங்கை அதன் இரட்டைப் பற்றாக்குறைப் பொருளாதாரத்தின் விளைவாக ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இரட்டைப் பொருளாதாரம், அதன் உள்நாட்டுச் செலவினம் அதன் தேசிய வருமானத்தை விட அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது, இது வெளிநாட்டுக் கடன் மற்றும் வெளிநாட்டு மூலதனப் பாய்ச்சலில் தங்கியிருக்கும் (யுனுடீ 03ஃ2019; ஊhழறனாரசல யனெ ளுயடநா 2007). இவற்றுக்கு தற்போதைய நீண்டகால அரச மற்றும் நிர்வாகத் தவறுகள் மற்றும் பொது நிதி நிர்வாகத்தில் உள்ள திறமையின்மை மூலமாக இருக்கின்றது. 

இலங்கையின் வருமானம் மற்றும் செலவுகள், வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை, கடன் வாங்குதல், கடனைத் திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றுடன் தொடர்புடைய பொது நிதி நெருக்கடியின் நீட்சி காரணமாக கொடுப்பனவு சமநிலை நெருக்கடி அல்லது நாட்டின் பண நெருக்கடி ஆகியவை எழுந்துள்ளன.

ஆகவே, நமது ஒட்டுமொத்த பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிநாட்டுக் கடன் வாங்க வேண்டும். அவை போதுமானதாக இல்லாவிட்டால், இருப்புக்கள் பயன்படுத்தப்படவேண்டும். ஆனால் அந்த கையிருப்புக்கள்  வரம்பில்லாமல் பயன்படுத்தியதால், வெளிநாட்டுக் கடனை இன்று செலுத்த முடியவில்லை.

அநேகமாக, இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கோ அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கோ இந்த நெருக்கடி குறித்து பெரியளவில் புரிதல் இல்லாத நிலையினை சிலபலரின் அறிக்கைகளிலிருந்து தெளிவாகிறது.

நீண்ட காலமாய் பொருளியல் ஆய்வாளன் என்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் இந்த நெருக்கடியிலிருந்து விடுபட சில முக்கிய தீர்வுகள் உள்ளன என்பதனைச் சொல்ல வேண்டும்.

அதன்படி, முதலில் அரசின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இரண்டாவதாக, அரசின் செலவுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். அங்கு, உள்நாட்டு உற்பத்தியில் 25 வீதம் முதல் 30 வீதம் வரை அரசு செலவீனங்கள் பராமரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பட்ஜெட் இடைவெளியை நீடிக்காமல் 5 வீதம் அளவில் பராமரிக்க வேண்டும். அதன் மூலம் ஒட்டுமொத்த கடன் சுமையையும் நிவாரண நிலைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவற்றை மேற்கொண்டாலே பாதிப் பிரச்சினை பறந்துவிடும்.

இது தவிர, நாட்டிற்கு வரும் அன்னியச் செலாவணியின் வளர்ச்சியை உடனடியாக அதிகரிக்க வேண்டும். குறைந்த பட்சம் குறுகிய காலத்தில், பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியினை 20 அமெரிக்க டாலர்களால் தாண்ட வேண்டும். நாட்டிலிருந்து அத்தியாவசியமற்றவற்றிற்காய் வெளியேறும் அந்நியச் செலாவணியை முடிந்தவரை குறைக்க வேண்டும்.

இது இறுதியில் நாட்டின் வரவு செலவுத் திட்டத்தின் கொடுப்பனவுகளில் ஒரு உபரியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட மாற்றங்களுடன் இந்த இலக்குகளை 2029 வரை எட்டினால், நமது நாட்டில் விரைவான பொருளாதார வளர்சியினை அடைய முடியும் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க குறுகிய கால, இடைக்கால கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை முன்னிறுத்த வேண்டும். எவ்வாறாயினும், பொருளாதாரப் பிரச்சினையை விட இராஜதந்திர ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை இப்போது எங்களிடம் இருப்பதை நான் காண்கிறேன்.

எங்களுக்கு இப்போது டொலர் நெருக்கடி உள்ளது. இந்த பிரச்சினையினை நமது நாட்டின் தூதரக மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு நமது நட்பு நாடுகளின் ஆதரவைப் பெற வேண்டும். இது தொடர்பாக இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகளுடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும்; கலந்துரையாடி தீர்வு காண முனைவதற்கு சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றன.

இந்த நேரத்தில் எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும் எரிவாயு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் விவாதிக்கப்படுகிறது. அந்தவகையில் விலை நிர்ணயத்துடன் தொடர்சியாக எரிவாயு மற்றும் எரிபொருளைப் பெறுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அத்துடன் அவற்றை குறைவின்றி விநியோகிக்கவும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும்

எமது நாட்டிற்கு கணிசமான வருவாயை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்றான சுற்றுலா வருவாயை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில் அவற்றை சுமுகமாக்கையாளக்கூடிய அதற்கான தெளிவான திட்டம் இந்த அரசிடம் இல்லை. அதனால் இன்று பல நாடுகள் இந்த நாட்டுக்கு வரும் பயணிகளை எச்சரித்தவண்ணமுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதுபோல் இந்த நேரத்தில் விவசாயத்தினை  விவசாயிகள் மூலம் விரிவாக்குவதற்கு அவர்கள் எதிகொள்ளும் பாரிய பிரச்சினைகளை தீர்க அதிக கவன்செலுத்தவேண்டும். எரிபொருள், போக்குவரத்து, சந்தைப்படுத்தல், பதனிடல், இவை எல்லாவற்றுக்கும் மேலாக உரம் மற்றும் கிரிமிநாசினிகளின் தடை என்பன அகற்றப்படவேண்டும். இதன் மூலம் உற்பத்தியினைப் பெருக்கி இன்று வெளிநாடுகளில் அவற்றை இறக்குமதிசெய்ய பயன்படுத்தும் டொலர்களை பாரியளவில் மீதிப்படுத்தலாம்.

ஆகவேதான் வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளைக் கையாள்வதில் டொலர்களைச் சார்ந்து இருக்கும் வெளிப்புறப் பொருளாதாரம், நமது இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் முறையான கட்டுப்பாடுகள் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டதால் உருவாக்கப்பட்டது. இலகுவாகச் சொல்வதானால்;, ஒன்றை ஏற்றுமதி செய்யும்போது, இரண்டை இறக்குமதி செய்கிறோம். அதாவது ஒரு டொலர் நாட்டிற்குள் வரும்போது, இரண்டு டாலர்கள் நாட்டிலிருந்து இழக்கப்படுகின்றன.அதனால் இன்று மேலும், நாடு கடன் வாங்கி வாங்கி 51 பில்லியன் டொலர் கடன் சுமையில் சிக்கியுள்ளது.

சுற்றுலாபோல் இந்த நாட்டின் அந்நிய வருவாய் தரும் துறைகளில் வெளிநாட்டு வேலைசெய்வோரிடமிருந்து மாதத்திற்கு சுமார் 600 மில்லியன் டொலர்கள் கிடைத்து வந்தது. அந்த பெரிய வருமானம் இன்று குறைவடைந்து வெறும்ட 250 மில்லியன் டொலராக குறைந்துள்ளது. இது ஒரு நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பின்னடைவு எனலாம்.

இவ்வாறான ஒரு இக்கட்டான நேரத்தில் செய்ய வேண்டியது என்னவெனில் இந்தத் தொழிலாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி அவர்களை ஊக்குவிப்பதாகும். உதாரணமாக, குழந்தைகளை பாடசாலைகளில்; சேர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பது, குறைந்த வட்டியில் அல்லது வட்டியில்லா வீட்டுக் கடன் கொடுப்பது, நிலம் கொடுக்கும்போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்றவற்றைச் செய்வது கடினம் அல்ல.

மேலும் நம் நாட்டில் உள்ள மற்றைய பிரச்சனை பொதுச் சேவை. இந்தப் பொதுச்சேவை நாட்டின் பொருளாதாரத்தின் மொத்தச் சுமையாகும். குறிப்பாக நம்நாட்டில் இந்த சேவையினை செய்வதற்கு தேவையான எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாக அரசசேவையில் உள்ளனர். அந்த எண்ணிக்கையை 10 லட்சமாக குறைக்க வேண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அங்கு காணப்படும் வேலை வெற்றிடங்களுக்கு மறு ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில் அங்கு பெரும்பாலான பதவிகள் தேவையில்லை. இதற்கு சிபெட்கோவை சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். கோடிக்கணக்கான இழப்புகள் அங்கு. ஆனால் மாறாக ஐ.ஓ.சியின் வருமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல. அரச சேவையில் பாரிய அளவில் வெற்றிடங்கள் இல்லை ஆனால் பாரியளவில் திறமையின்மையே அதிகம் உள்ளது. திறமையின்மையையும் நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால் இது விரைவான தீர்க்கக்கூடியதொன்றல்ல.

ஆக மேற்கூறியவற்றை இன்று மக்களை வழிநடத்துபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதன்பின் மக்களுக்குப் புரியவைக்கவேண்டும. அத்துடன் இவற்றை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி அவசிய, இடைக்கால மற்றும் நீண்டகாலத் திட்டங்களை தேர்சிபெற்றவர்களின் உதவியுடன் அவற்றை தயார் செய்தல்வேண்டும். அதனை தயார்செய்து பூட்டிவைக்காமல் அவற்றை நடைமுறைப்படுத்தினால் மலேசியாவாக, சிங்கப்பூராக இல்லாவிடினும் பழய இலங்கையாகவாவது மாற்றமுடியும். சேய்வோமா!


0 comments:

Post a Comment