ADS 468x60

06 April 2014

வாழ்க்கையில் விடி வெள்ளி

நீதானே வாழ்க்கையில் விடி வெள்ளி வாழ்த்திடும் ஒரு பள்ளி வானவில் கோலங்கள் போல் வசந்தங்கள் தரும் உறவு. கடலில் தவித்தேன் சிலநாள்- பெரும் இடரில் களைத்தேன் மறுநாள் எடுப்பார் கையில் பிள்ளை- அன்று எனக்கோர் துணையும் இல்லை காத்ததால் நீயொரு அன்னை களைப்புக்கு நீர்தரும் தென்னை ஏழைக்கும் இரங்கிடும் ஏழை ஏனக்குநீ மணம்தரும் சோலை கேட்டால் கிடைக்கும் உதவி- யாரும் போட்டால் வருமே பதவி பார்த்தால் அறியும் குணத்தால்- எனை பார்த்தாய் உயரும் மனத்தால் தமிழ்என்றால் நீயொரு சிங்கம் தருவதில் குறையாத தங்கம் இரக்கத்தில் நீதான் அரசி இரப்போர்க்கு பசிதீர்க்கும் அரிசி நீதானே வாழ்க்கையில் விடி வெள்ளி வாழ்த்திடும் ஒரு பள்ளி வானவில் கோலங்கள் போல் வசந்தங்கள் தரும் உறவு.

04 April 2014

பாராமல் நிற்பதுதான் நியாயமா!!!,

வறுமை ஒளிப்பதற்கு 
வாய்த்த வளம் இருந்தும்
திறமை உள்ளவர்கள்-வாய்
திறவாமல் உள்ளனரோ!

வாய்க்காலிலும் வயல்நிலத்திலும்
வள்ளம் ஓடும் வாவிகளிலும்
வானரங்கள் தாவும்
வனங்களிலும் மலையிலும்
வளர்ந்துவிட்ட நீங்கள்....

கறைபட்ட போரால்
கரையற்ற எம்மவரை
யாரோ என்பதுபோல்
பாராமல் நிற்பதுதான் நியாயமா!!!,?

30 March 2014

திறமை என்கிறது நமக்குள்ள எரியிற நெருப்பு

நம்ம மக்கள் தொகையில பெரும்பான்மையானவர்கள் நடுத்தர வர்க்கம். நிறையக் கனவுகள் நிறைய ஆசைகள், வாழ்க்கையில ஜெயிக்கனும் என்றுதான் வாழ்க்கைய ஆரம்பிக்கிறாங்க. ஆனா எங்கயோ சின்னச் சின்ன ஆசைகளுக்கு சின்ன சின்ன வெற்றிகளுக்கு திருப்தி அடைந்துவிடுவார்கள். ஆசைக்கும் தேவைக்கும் நடவில ஓடிட்டே இருப்பாங்கள். திடிர்எனப்பார்த்தால் அந்த வேகம் குறைந்திருக்கும். 

அந்த பயர் இல்லாம இருக்கும். பார்த்திருக்க தலையெல்லாம் நரைத்திருக்கும் ஒரு சின்னதா ஒரு வீடு, அங்க ஒரு கலர் ரீவி, ஒரு ஸ்கூட்டர் வைக்கு அதில முன்னாடி ஒரு குழந்தை பின்னாடி ஒரு குழந்தை அதற்கு பின்னால மனைவி. இந்த வசதி கிடைத்தா போதும் என்று முடங்கிப்போன எத்தனையோ திறமைசாலிகள நாளாந்தம் பார்க்க கிடைக்கிதுங்க. திறமை என்கிறது நமக்குள்ள எரியிற நெருப்பு அது அணையாம காப்பாத்தனும் பாத்துக்கனும்.

29 March 2014

இன்னும் காத்திருப்புகளுடன்

எத்தனையோ அன்னையர்
பிள்ளை இழந்தவர்களாய்
உறவை இழந்தவர்களாய்
அத்தனைபேர்க்கும் நான் பிள்ளை

09 March 2014

நேற்றய சிங்கப்பூரைப் பாருங்கள்!!


நேற்றய சிங்கப்பூரைப் பாருங்கள் அது 1950களில் இலங்கை மற்றும் இந்தியாவை விட ஏழை நாடாகத்தான் இருந்தது ஆனால் இன்றய சிங்கப்பூர் முற்றிலும் வேறுபட்டது, அதன் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 43 லெட்சம் மற்றும் கிட்டத்தட்ட 644 கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட குட்டித்தீவு இது. இந்தியாவின் வெங்குழூரை விட சிறிய நகரம். ஒரு சிங்கப்பூர் குடிமகனின் சராசரி வருமானம் நம்மை விட பன்மடங்கு அதிகம். 80 சதவீதம்பேர் தனி பிளட் வைத்திருக்கின்றார்கள். இது இருபத்தைந்தே ஆண்டுகளில் ஏற்ப்பட்ட முன்னேற்றம்.

இரண்டாம் தரப்பு

நீ எதை செய்யவில்லை
நீ எதை அடையவில்லை
ஐக்கிய நாடுகள் கோடுபோட்டுக்காட்ட
நீ ஒன்றும் இரண்டாம் தரப்பல்ல

27 February 2014

அத்தானுக்கு ஆசையெல்லாம் ஒன்மேல

அடியே பொண்ணு ஐயாரெட்டு
அம்பாரக் கரும்புக் கட்டு
அத்தானுக்கு ஆசையெல்லாம் ஒன்மேல
ஒன்னப் பாத்து பாத்து ஏங்கிறனே தன்னால

04 January 2014

கடவுளாப்பாத்து அனுப்பி இருக்கிறாரு

 கிளிநொச்சி அன்று யுத்தவேக்காடு மாறாத பூமியாக இருந்தது. அது மனிதர்களை மாத்திரமல்ல மரம் செடி கொடிகளையும் இழந்த பூமி. எனக்கு இந்த மக்களோடு பழக கிடைத்த நாட்கள் கடவுள் தந்த தருணங்கள் தான் என நினைக்கிறேன் . 

'என்னுடய கணவர் நித்தியானந்தராசா, என்னுடைய மகன் மார்களான ஜெயராசா, மகேந்திரன் மற்று என்னுடைய மகள் ஜெகலதா என்னுடைய அம்மா, தங்கச்சி, அவன்ட ரெண்டு பிள்ளைகள், என்ட மூத்த அண்ணா அசோக்குமார், என்னுடைய மருமகள் அருந்ததி எல்லாமாக பத்து உயிர்களை பறிகொடுத்து பரிதவிக்கிறன் தம்பி' என ஆரம்பித்தார் இராசலெட்சுமி. திருநகர் கிளிநொச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பின்தங்கிய கிராமமாகும். அங்குதான் இவர்கள் வாழ்ந்து வருகின்றர்கள்.