ADS 468x60

20 December 2024

சிஸ்டம் சேஞ்ச் ஆகுமென்றார் யேசு பிரானே!- படுர கஸ்டம் சேஞ்ச் ஆகவில்லை யேசு பிரானே!

 சிஸ்டம் சேஞ்ச் ஆகுமென்றார் யேசு பிரானே!- படுர

கஸ்டம் சேஞ்ச் ஆகவில்லை யேசு பிரானே!


ஊத்தும் மழை குறையவேண்டும் யேசு பிரானே

உப்பளங்கள் பெருக வேண்டும் யேசு பிரானே

தென்னை செழித்து ஓங்கவேண்டும் யேசு பிரானே

தேங்காய் விலை குறையவேண்டும் யேசு பிரானே


காக்கை குருவி வாழவேண்டும் யேசு பிரானே!

காடழிப்போர் ஒழிய வேண்டும் யேசு பிரானே!

நெல்லுமணி விழைய வேண்டும் யேசு பிரானே!

நெனச்சவிலையில் அரிசி வேண்டும் யேசு பிரானே!

18 December 2024

இந்திய-இலங்கை உறவுகள்: பொருளாதார முன்னேற்றத்தின் புதிய பாதை

இந்தியாவுடனான உறவு இலங்கையின் வரலாற்றில் நீண்டகாலமாய் தொடர்ந்துள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணமாக புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா அவர்கள் இந்தியாவுக்கு தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் இந்திய-இலங்கை உறவுகளுக்கு புதிய உற்சாகத்தை உருவாக்கி, இரு நாடுகளுக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கு வாய்ப்புகளைத் திறந்துவிடும்.

இந்திய பயணத்தின் முக்கியத்துவம்

ஜனாதிபதி அனுர, இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் இருநாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மேலும், இந்த பயணத்தின் ஒரு பாகமாக, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அசோகமரம் நடுகை செய்தது, இந்திய-இலங்கை பாரம்பரியத்தை நினைவூட்டும் ஒரு முக்கிய சம்பவமாக அமைந்தது.

17 December 2024

நாட்டின் முன்னேற்றத்தில் சமூக விஞ்ஞான ஆய்வாளர்களின் வகிபாகம்- ஆய்வுக்கட்டுரை

இலங்கையில் சமூக விஞ்ஞான ஆய்வாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் மற்றும் உள்ளூர் அபிவிருத்தித் தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் உலக அரங்கில் சமூக விஞ்ஞான ஆராய்ச்சியில் இலங்கையை முன்னணியில் நிலைநிறுத்துவதற்கும் மேலும் சாதகமான ஆராய்ச்சி சூழலை உருவாக்குவதற்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கு அவர்கள் எவ்வாறு ஆதரவளிக்க முடியும். என நாம் இவ்வாய்வுக் கட்டுரையில் பார்க்கப்போகின்றோம். நாம் பல்கலைகழகங்கள், மற்றும் ஆய்வு நிறுவனங்களினால் செய்யப்படும் ஆய்வின் தரத்தை நிர்ணயித்தல், அதனை கொள்கை வகுப்பாளர்கள் வரை எடுத்துச் செல்லுதல் என்கின்ற நோக்கத்தினை இன்னும் முழுதாக செயற்படுத்துவதற்கான ஆயத்தப்படிகளை ஸ்திரப்படுத்தவேண்டியுள்ளது.

தொழில்முனைவோர் ஆராயக்கூடிய பல லாபகரமான சிறு வணிக வாய்ப்புகள்

தொழில்முனைவோர் ஆராயக்கூடிய பல லாபகரமான சிறு வணிக வாய்ப்புகளை இலங்கை வழங்குகிறது மிகவும் இலாபகரமான துறைகளில் ஒன்று உயர்தர மசாலா மற்றும் தேநீர் ஏற்றுமதி செய்வது ஆகும், இது இந்த தயாரிப்புகளுக்கான நாட்டின் உலகளாவிய நற்பெயரைப் பயன்படுத்துகிறது [1]

கூடுதலாக, இலங்கையின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு காரணமாக சுற்றுலாத் துறை வளர்ந்து வருகிறது, வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள் மற்றும் தங்குமிடம் சேவைகள் [2] போன்ற வணிகங்களுக்கு வழிகளை வழங்குகிறது. 

மற்றொரு வளர்ந்து வரும் முக்கிய இடம் சுகாதார மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவாகும், அங்கு தொழில்முனைவோர் சுகாதார உணர்வுள்ள பயணிகளை ஈர்க்க யோகா பின்னடைவு மற்றும் ஆயுர்வேத ரிசார்ட்டுகளை மேலும், ஈ-காமர்ஸின் உயர்வு ஆன்லைன் சந்தைகள் மற்றும் டிஜிட்டல் கட்டண தீர்வுகளுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது, இது இணைய ஊடுருவலை அதிகரித்ததன் மூலம் இயக்கப்படுகிறது [4]

15 December 2024

கல்விக் கலப்படத்தால் ஏற்படும் "கலாநிதிக் காய்சல்" அபாயம்- உஷார் மக்களே!

இன்று பார்கும் இடமெல்லாம் இந்த "கலாநிதிக் காச்சல்தான்" பரவிவருது. இன்றைக்கு அததுக்கு ஒரு மதிப்பு மரியாத இல்லாமல் போயிற்று. காரணம் இந்தப் போலித்தன 'கல்விக் கலப்படம்'. எவன் புத்தகம் நோக்கி தலை குனிகின்றானோ அவன் உலகில் தலை நிமிர்ந்து வாழ்வான். ஆனால் அது பலருக்கு மாறி நடக்கின்றது. ஒளவையார் 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறார். அதாவது பிச்சை எடுத்தேனும் கல்வி கற்க வேண்டும் என அவர் கூறுகின்றார். ஆனால் பிச்சை கொடுத்து குறுக்குவழியில் கற்றவர் என உலாவருவோர்களால் இந்தச் சமுகத்தின் அபாயம் ஆரம்பமாகிறது.  ன்பது பற்றியே இக்கட்டுரை எழுதப்படுகின்றது. இக்கட்டுரை போலி கல்லாநிதிகளையும் பேருக்கு ஆசிரியர்களாய் இருக்கும் பேராசிரியர்களுக்கும் எழுதப்படுவது உண்மையானவர்களுக்கு அல்ல.

ஒரு காலத்தில் சாதாரண தரம் மற்றும் உயர்தர சித்திபெற 'குதிரை ஓடி' பாசு பண்ணிய பலர், இன்று பல பல பெரிய உத்தியோகத்தில் உலாவருகின்றனர். அதுவும் நம்மள ஒரு மாதிரி ஏளனமா வேற பாக்குதுகள், அவருடைய 'ரை' என்ன? புள் ஸ்லிப் சேட் என்ன, சூ என்ன... அப்பப்பா? 

09 December 2024

பாதித்தேங்காய் சந்தைக்கு அறிமுகம்- பரிதவிக்கும் மக்கள்

"முதல் முதலாக சந்தையில் பாதித்தேங்காய்கள் விற்கப்படுவதனைப் பார்த்தேன்." ஒரு பாதி 90 ரூபாய்களாகக் காணப்பட்டது. இது இப்படி இருக்க, இலங்கை மக்களிடையே, சுடுகாடு தொடங்கி சுவையூட்டிவரைக்கும் தேங்காய் ஒரு முக்கியமாகிவிட்டது. இதனால்தான் "பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு தென்னையைப் பெற்றால் இளநீரு' என்று கண்ணதாசன் சொல்லி இருக்கின்றார்.

ஆனால் இன்று அது எண்ணிப்பார்க்க முடிஎயாத ஒன்றாய் மாறி வருகின்றது அரிசைப்போல். தேங்காய்களின் உயர்ந்த விலைகளுக்கு இடையேயான நிவாரணம் எதுவும் எட்டாக்கண்ணியாக உள்ளது, எனவே, இன்று தேங்காய்களின் முக்கியமான குறைப்புகளை அடைய, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என தொழில்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர.

04 December 2024

புதையுண்ட பூலாக்காட்டு மக்கள்- மட்டக்களப்பு வெள்ள நிவாரணம்

நன்றாக விடிந்து விட்டது, பரபரப்பாக தொலைபேசி உரையாடல்கள், ஒழுங்குபடுத்தல்கள், இதனிடையே பொருட்களெல்லாம் இரவிரவாய் பக் பண்ணி காலையில் கடகட என ஏத்தி எடுத்தாச்சி. பூலாக்காடு நோக்கி புறப்படலானோம் . அது ஒரு நிவாரண யாத்திரை, நீண்ட யாத்திரை. வல்லவனின் வாகனம் வளைந்து நெழிந்து ஒரு மாதிரி கிரான் சந்தியை கிட்ட நெருங்கியது, அதன் பின்னர் புலிபாய்ந்தகல்லை நோக்கி போகத்துவங்கியது. ஆனால் அந்தப்பாதையை குறுக்கறுத்துக் குழிதோண்டி பீறிட்டுக்கொண்டிருந்தது வெள்ளம். அச்சத்தில் அசைந்து அசைந்து பெரிய லோட்டோடு ஒரு மாதிரியாய் பூலாக்காடு போகும் பாதையை அண்மித்தோம்.

பூலாக்காடு என்பது பக்கத்தில் உள்ள கிராமம் அல்ல, அது மிகத் தொலைவில் தனித்தீவுகளாக அமைந்துள்ள, 280 குடும்பங்களைக் கொண்ட பல சிறிய சிறிய குக்கிராமங்களைக்கொண்ட கிராம சேவகர் பிரிவாகும். இது கிட்டத்தட்ட கிரான் பிரதான வீதியில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. இங்கு வயல், காடு, குளம், ஆறு மற்றும் காட்டுவிலங்குகளின் அச்சுறுத்தல் என அனைத்தையும் கடந்தே செல்லவேண்டும்.

01 December 2024

இன்னும் நாங்கள் சரியான தொடர்பாடலை அனர்தகாலத்தில் பேணவில்லை

 
சுனாமி வருகின்றது என பரபரப்பான கதைகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேவையில்லாமல் அழைப்பெடுத்து வாந்திகள், வீண் பதட்டம், பீதி காரணம் சரியான தொடர்பாடல் அல்லது நம்பகமான செய்தியினை செவிமடுத்தல் என்பன இன்று எம்மத்தியில் பழக்கப்படவில்லை. எத்தனை மொக் றில், எத்தனை கிராமிய ரீதியான முன்னாயத்த தயார்படுத்தல்கள்! இருந்தும் எங்கே பிழை நடக்கின்றது? என ஆராய்தல் வேண்டும்.