ADS 468x60

27 July 2020

மட்டக்களப்பு வாக்காளர்களின் 2020 பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு அறிக்கை வெளியிட்டு வைப்பு.

கிழக்குப் பல்கலைக்கழகங்கள் பழைய மாணவர் ஒன்றியத்தின் '2020 பொதுத் தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம், மட்டக்கக்களப்பு மாவட்டம்' எனும் கருத்துக்கணிப்பு ஆய்வறிக்கை இன்று ஒன்றியத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாய்வானது 08.07.2020 தொடக்கம் 19.07.2020 வரையான காலப்பகுதியில் இணையம் (Online Survey) மூலமாக நடாத்தப்பட்டதாகும். இது பக்கச்சார்பற்ற முறையில் நடுநிலையாகவும்  மற்றும் வெளிப்படைத்தன்மையுடனும் நடாத்தப்பட்ட வரலாற்றில் மட்டக்களப்பின் முதலாவது ஆய்வாகும்.

இதில் பல அரசியல் மாற்றத்துக்கான விடயங்கள் இக் கருத்துக்கணிப்பு ஆய்வில் கோடிட்டுக் காட்ப்பட்டுள்ளது. இம்முறை எந்தக் கட்சிக்கு அதிக வாக்குக் கிடைக்க இருக்கின்றது என்பதும் இதில் கண்டறியப்பட்டிருப்பது முக்கியமாக "மக்களின் மனதில்" ஏற்பட்டிருக்கும் மாற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

முழு அறிக்கையின் விபரத்தினைப் பார்க்க கீழுள்ள இணைப்பை அழத்தவும்.

https://drive.google.com/file/d/1SuZAT8n3Hve43EvFiB_Q9XWhajE8HB6A/view?usp=sharing


05 July 2020

ஏன் இலங்கையினை நவீன வியட்நாமாக மாற்ற முடியாது?.

நாம் இன்று நம்மை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஜப்பானுக்கு அடுத்ததாக சுதந்திரம் பெற்ற நேரத்தில் நமது பொருளாதாரம் இரண்டாவது சிறந்த நாடாக இருந்தது என்பதையும், லீ குவான் யூ சிங்கப்பூரை இலங்கையைப் போல உருவாக்க விரும்பினார் என்ற கதையைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கவில்லையா? அதையே எத்தனை நாட்களுக்கு சொல்லிக்கொண்டு திரிவது, அதன் பின் எத்தனை தசாப்தங்கள் கடந்தும் வேறு ன்றை சொல்ல வைக்க நாம் ஏன் முயற்சிக்கவில்லை என்கின்ற கேள்வி எழாமல் இல்லை.

04 July 2020

கொவிட்-19 இக்கு பின்னான பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் நிலை

இன்று இலங்கையில் மாத்திரமல்ல, அது கடந்து உலகம் பூராகவும் பாரிய பொருளாதாரச் சரிவினை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தத்தாக்கம் இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு விழுந்த பேரிடியாகவே பார்க்கப்படுகின்றது. ஆகவே கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால் இன்று இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக உலகப் பொருளாதாரம் ஸ்தம்பித்து நிற்கிறது. பொருட்களுக்கான தேவை குறைதல், சர்வதேச போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளை நிறுத்துதல் உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு பங்களித்திருக்கின்றன.

26 May 2020

கோவிட் 19ம் பாரம்பரிய வைத்திய மீள்சிந்தனைகளும்

ஆரம்ப காலங்களில் இலங்கையில் உள்ளவர்கள் கிராமத்தில் உள்ள நாட்டு வைத்தியர்களை நம்பியே  எந்த விதமான மருத்துவ சிகிச்சைக்காகவும் சென்றனர். அன்றய நாட்டு வைத்தியரிடம் இன்றய ஆங்கில வைத்தியர்கள் வைத்திருப்பதுபோல் விதவிதமான மருத்துவ உபகரணங்கள் அல்லது இயந்திரங்கள் இருந்திருக்கவில்லை. அவர் உடலின் உள் பிரச்சினைகளை அவரவர் நாடிபிடித்து அவரை தொட்டுப்பார்த்து ஏனைய அவையவங்களை கவனிப்பதன் மூலம் அவரது நோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டு சிகிச்சையை தீர்மானிப்பார்.

17 May 2020

ஏதும் இருக்குதா இழந்தோர்கு பதிலுரை

முடிந்தது எங்கள் தலையில் போர்
முறிந்தது எங்கள் நிலத்தில் ஏர்
மடிந்தது கருகி ஆயிரம் பேர்
விடிந்தது குருதி மழையில் ஊர்

08 May 2020

கோவிட்-19 தொற்றும் அது மனநலம் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கமும்.

Pic by Shehan Gunasekara
மிகப் பயங்கரமாக உருவெடுத்திருக்கும் முன்னெப்பொழுதும் அறியாத ஒரு உலகலாவிய தொற்றுநோயாக கோவிட்-19 அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்திருக்கின்றது. இந்த நோய் பற்றி அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கிடையாது என நினைக்கின்றேன். 

இவ்வாறு அச்சத்தை மாத்திரம் ஏற்படுத்தாமல், பல கோடி மக்களை இயங்கவிடாமல் பல மாசங்களாக வீட்டினுள் அடைத்து வைத்திருக்கும் இந்த ஆபத்தான நோயில் சிக்குண்ட பலர் மானசீக அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றமை நாம் அறிந்ததே.

இந்த நிலையில் பலர் தங்களது தொழில்களை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அன்றாட வருமானம் இழந்த நிலையில் அவர்களது நுகர்வு, ஏனைய சக்திகள் பின்னடைந்த நிலையிலும் கண்ணுக்கு முன்னே தத்தமது பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள் அல்லல்படும் போது அவற்றை நேரே பார்த்து மனமுறிவுக்கு உள்ளாகி வருகின்றனர்.

06 May 2020

கிராமமட்டத்திலான மக்களை மையப்படுத்திய பல்தேவைக் கம்பனிகளின் இன்றய தேவை.

நாம் தூக்கி ஓதிக்கியவற்றினை இன்று தூக்கி நிறுத்தும் ஒரு உன்னத உணர்வை இன்றய நிலை தோற்றுவித்துள்ளது. இந்த உணர்வுடனே நாம் பல மாற்றங்களைக் கொண்டுவர ஒவ்வொரு புத்திஜீவிகளும் சிந்தித்து முன்மொழிய வேண்டிய நேரமிது. 

விவசாயத் துறைக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் உற்பத்தி செய்யும் விவசாயப்; பொருட்களை கொள்வனவு செய்யவும்;, சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் ஒரு பொறிமுறையை இயக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அண்மையில் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்தவகையில்; மாவட்ட அளவில் உள்நாட்டு தொழில்கள் மற்றும் பிற உற்பத்தித் துறைகளை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

05 May 2020

சுதேசிய வழிமுறைகளினூடான தன்னிறைவை முதன்மைப்படுத்தும் கொவிட்-19

விவசாயமும் மருத்துவமும்.

இன்று கொவிட்- 19 வைரஸ் அனைத்து நாடுகளையும், முக்கியமாக விவசாயம் மற்றும் மருத்துவ அறிவியலில் அதன் தன்னிறைவை ஆய்வு செய்ய அழைத்து வந்துள்ளது. இந்த இரண்டு துறைகளும் நமது பண்டைய பாரம்பரியத்தில் கைகோர்த்துக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டது. இவை நமது மக்களின் நல்வாழ்வோடு மட்டுமல்லாமல் மண்ணின் நல்வாழ்வையும் அதனோடு தொடர்புடைய மரங்கள் மற்றும் பிற உயிரினங்களின் பாதுகாப்பினையும் தொடர்புபடுத்தின.