ADS 468x60

29 December 2020

புதிதாகப் பிறக்கும் 2021 ஆம் ஆண்டில் 'தொற்று புதிய வடிவில் எம்மை தாக்குமா!'

2020 இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய இருக்கும இத்தறுவாயில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு 2021 என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். இதனை சாதகமாகப் பயன்படுத்தி அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதனைக் காணலாம். அதே போல் மக்கள் ஆரம்பத்தில் இருந்த ஜாக்கிரதை மெது மெதுவாகக் குறைந்து எந்தவித அச்சமும் இன்றி அஜாக்கிரதயாக திரிவதனையும் பண்டிகைக்காலத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான ஒரு ஆபத்தான பின்னணியில், இந்த நோய்த்தொற்று எமது நாட்டிற்கு மாத்திரம் பரவுவவில்லை இது உலகின் பிற பகுதிகளிலும் ஒரே மாதிரியாக பரவி வருகின்றது. ஆனால் அவை நாட்டுக்கு நாடு மாறுபட்ட அளவுகளில் பரவி வருவதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, மேலும் இதனால் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் போயுள்ளனர். 

தொற்றுப் பரவலின் தற்போதய நிலவரம்.

இந்தப்படத்தில் திடீரென டிசம்பர் மாசத்தில் அதிகரித்த தொறறாளர்களின் எண்ணிக்கையினை இந்த வரைவில் நீங்கள் துல்லியமாக அவதானிக்கலாம்.

பல்வேறு பகுதிகள் இப்போது வேறு வேறு நேரங்களில் அவை முடக்கப்படும் நிலைக்கு வருகின்றன, அவை எவ்வாறு ஏற்படுகின்றன என்பது குறித்த தகவல்களுடன். உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, டிசம்பர் 1 முதல் 28 வரை, கொவிட்-19 இன் 17,600 பேருக்கு மேல் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டன. ஆக, தினசரி அடையாளங் காணப்படும் தொற்றாளர்களின் சராசரி நாளுக்கு 628 ஆக உள்ளது. 

இப்பொழுது பரவ இரும்பித்திருக்கும் மொத்த நேர்மறை பதிவுகளின்; எண்ணிக்கை 41,000 ஐ விட அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கையில், டிசம்பரில் மட்டும் 17,600 க்கு அதிகமான நேர்மறை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இலங்கையில் பதிவான அனைத்து தொற்றாளர்களின் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்காகும். அவை பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் சோதனைகள் மூலம் நாளுக்கு நாள் வெளிவருகின்றன. இருப்பினும் இதில் எத்தனை பேர் சோதிக்கப்படாமல் இருக்கிறார்கள், இதனால் மற்றவர்களில் எத்தனை பேருக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது என்பது குறித்து சுகாதார வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது. ஆகவே, வரவிருக்கும் புத்தாண்டில் இலங்கையர்களின் முக்கிய கருசனை என்னவென்றால், நேர்மறையான (பொசிட்டிவ்) கேஸ்கள்; எவ்வளவு அதிகமாக சுழலும், இன்னும் எத்தனை பேர் இறந்துவிடுவார்கள், எப்போது விஷயங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதே.

புதிய வைரஸ் தொடர்பான அச்சம்

இது இவ்வாறு இருக்க இன்னொரு பெரி அணுகுண்டைப்போல்;, பிரிட்டன் வழியாக பரவும் வைரஸ் பற்றிய செய்தி உலகம் முழுவதும் மேலும் கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த மாறுபாடு அறியப்பட்டதிலிருந்து, பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு விமானங்களை நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், அந்த நேரத்தில், விமானங்கள் லண்டனில் இருந்து கொழும்புக்கு வந்திருந்தன என சொல்லப்படுகின்றன. இவை இன்னும் மக்களை அச்சமடைய வைத்துள்ளது. இது இவ்வாறு இருக்கத்தக்கதாக,  எவ்வாறாயினும், ஜனவரி 3 ம் தேதி கொழும்பில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வருகையில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆதற்கான முன்னாயத்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

கொவிட்-19, இப்போது உலகம் முழுவதிலும் 76 மில்லியனைப் பாதித்து, கிட்டத்தட்ட 1.7 மில்லியன் மக்களைக் கொன்றது (ஜோன்ஸ் ஹாப்கின்ஸ்( Johns Hopkins data) தரவு). கொரோனா வைரஸ் குடும்ப வைரஸ்கள், இது SARS மற்றும் மெர்ஸ் -MERS பேன்ற பிற நோய்களுக்கும் காரணமாகிறது காய்ச்சல் வைரஸைப் போலவே, COVID-19 வைரஸும் ஒன்றில் இருந்து இன்னொன்றாக பிறழ்வு திறன் கொண்டது என்பதனை அது காட்டியுள்ளது. 

உண்மையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிகின்றனர் (அதாவது தற்செயலாக வரவிருக்கும் அஸ்ட்ரா ஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியை --the developer of the upcoming Astra Zeneca COVID-19 vaccine) இலங்கையில் 'இரண்டாவது அலை' வேறுபட்ட அதன் பிறழ்வு அல்லது மாற்றம் காரணமாக ஏற்பட்டது என்பதை அடையாளம் கண்டுள்ளது. இதனால் இது மிக விரைவாக பரவுகிறது என்று நம்பப்படுகிறது. ஆதனால்தான் பொசிட்டிவ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிக அண்மைக்காலத்தில் அதிக உயர்வு ஏற்பட்டது.

ஆகவே இவ்வாறான புதிய அச்சுறுத்தல் அச்சத்தை தந்தாலும் ஏற்கனவே உள்ள பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் தீவிரமாக கடைப்பிடிக்கவேண்டும். அதுபோல் அரசாங்கம் இந்த புதிய தொற்று இல்லங்கைக்கும் வீரியமடையாமல் இருக்க தீவிரம் காட்டவேண்டும். அதற்காக வெளிநாட்டு தொடர்புகளை மிகக் கவனமாகக் கையாள்தல் வேண்டும். அதுபோல் வர்த்தக மையங்கள் பொதுச் சேவை மற்றும் போக்குவரத்துக்கள் ஆகியன மிக நெருக்கமாகக் கண்காணிப்பதனை உறுதிசெய்தால் நிச்சயம் ஒரு பாரிய அனர்தத்தினை பரவாமல் தடுக்கலாம்.


0 comments:

Post a Comment