ADS 468x60

19 December 2020

புதிய ஆண்டில் புதிய தொழிலுக்கு காத்திருக்கின்றீர்களா!

கொவிட் -19 தனது ஒரு வருட தாண்டவத்தினை கடந்துவிட ஒரு சில நாட்கள் மீதமுள்ள இந்த பொழுதுகளில் உலகம் எல்லாவகையிலும் இஸ்தம்பிதமடைந்துள்ளது. அந்த வகையில் பல அடிகளில் இருந்து மெதுவாக மீண்டுகொண்டிருந்த இலங்கை 'மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல்' இன்னும் ஒரு படி பின்னோக்கிச் சென்றுள்ளது. சுற்றுலாத்துறை, கட்டுமானத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு என முன்னேறிக்கொண்டிருந்த துறைகள் ஒரே அடியில் முடங்கிவிட்டது. கொவிட் பல பல வடிவங்களில் அதன் வீரியத்தைத் தொடர்ந்த வண்ணமுள்ள இந்த நிலையில் மலர இருக்கும் 2021 இல் எமது பொருளாதாரத்தில் 'வேலைவாய்ப்பு' அனைத்து சவால்களுக்குள்ளும் ஒரு பெரிய சவாலாக இருக்கப்போகின்றது.

வடகிழக்கு மாகாணங்களிலும் இருக்கின்ற வளங்களைக் கொண்டு நவினமயமான விவசாயப் புரட்சிகளை மேற்கொண்டு எமது இளைஞர்களை ஏற்றுமதி சார் விவசாய உற்பத்தி நோக்கி தொழில் வழிகாட்டல்களை மேற்கொண்டால் நிச்சயமாக காணி அபகரிப்பு, மற்றும் வளச் சுரண்டல்களை முற்றாகப் பாதுகாக்கலாம். அத்துடன் இந்த நெருக்கடியான நிலைமை மாறி இளைஞர்கள் உளவலிமை பெறவும் உதவியாக இருக்கும். அதுவே பல புதிய கொள்கைப் பிரகடனம் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் வந்திருக்கின்ற நிலையில், பிறக்க இருக்கும் 2021 இன் தொழில் மாற்றத்தினை அனுசரிப்பதாகவும் இருக்கும்.

இவ்வாறான ஒரு பின்னணியில், கைத்தொழில் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளில் வேலைகள் நிச்சயம் குறைவடையும்போது, வேறு வழியின்றி பலர் விவசாயத் துறையில் வேலை தேடுகிறார்கள், இருப்பினும்; எமது நாட்டில் 27 வீதமானவர்கள் ஈடுபடும் இந்த விவசாயத்துறையில் உற்பத்தித் திறனற்ற அவர்களது செயற்பாடு காரணமாக வெறும் 7 சதவீத பங்களிப்பினையே மொத்த உள்நாட்டு உற்பத்திக்காக கொடுத்துவருவது வருத்தத்துக்குரியது.

2020 இல் , ஏப்ரல் தொடக்கம் யூன் (2 வது காலாண்டு) காலகட்டத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளவும்;, தொற்றுநோயால் ஆட்டங்கண்டுள்ள பொருளாதாரத்திற்கு முடிந்தவரை அந்நிய செலாவணியைக் பெற்றுக்கொடுப்பதற்குமாக அவசர தேவைக்கு மத்தியில், இலங்கை விவசாயத் துறையில் அதிக தொழிலாளர்களைச் இக்காலப் பகுதிகளில் சேர்த்ததுக் கொண்டிருந்ததை தகல் சொல்லுகின்றது. 2020 இன் நான்காவது காலாண்டில் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியாத நிலை (வேலை நிறுத்தம்) மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அது இன்னும் மோசமடைந்து காணப்பட்டது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, வனத்துறை மற்றும் மீன்வளத்தை உள்ளடக்கிய பரந்த விவசாயத் துறையில் 32,397 புதிய வேலைகள் சேர்க்கப்பட்டுள்ளன, ஆக மொத்தமாக இரண்டாவது காலாண்டு காலத்தில், இந்தத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 2,159,609 அல்லது இலங்கையில் வேலை செய்யும் மொத்த ஊழியர்களில்; 27.1 வீதமாக உள்ளது கணிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் மறுபுறத்தில், 2020 இன் இரண்டாவது காலாண்டின் வேலைவாய்ப்பானது விவசாயத் துறையில் பணியாற்றும் மொத்தம் ஊழியர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட சுமார் 168,717 பேரினால் அதிகரித்துள்ளனர், ஆகவே இந்த கொரோணா தொற்றுக்கு முன்னராக முந்தய வருடத்தில் இந்தத் துறையில் மொத்தமாக பணியாற்றியவர்கள் சுமார் 1,990,892 பேராகவும், அது மொத்த வேலைவாய்ப்பில் 24.2% வீதமான பங்கினை மாத்திரமே கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விவசாயத் துறையில் ஏற்பட்ட வேலைவாய்பு அதிகரிப்பானது எமது பொருளாதாரத்தின் மற்ற இரண்டு துறைகளான தொழில்துறை மற்றும் சேவைகள் துறையில் ஏற்பட்ட வேலை இழப்பை ஓரளவு ஈடுசெய்ய உதவியது குறிப்பிடத்தக்கது. 2020 இல் இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த வேலையின்மை விகிதத்தை மார்ச் மாத இறுதியில் இருந்த 5.7% வீதத்தினை யூன் மாத இறுதிக்குள் 5.4% வீதமாக குறைத்து. இந்த மாற்றத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக இருந்திருக்கலாம், ஏனெனில் குறிப்பாக மேற்கு மாகாணத்தில் இருந்து முடக்கம் காரணமாக பலர் வெளியே தங்கள் வீடுகளுக்குத் திரும்ப காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இரண்டாவது காலாண்டில் தொழில்துறை துறையில் 27,286 வேலை வாய்ப்புக்களையும், சேவைகள் துறையில் அது 48,558 வேலைகளையும் இந்தக் கொரோணா தொற்றுக் காரணமாக இழக்க நேரிட்டது. ஆனால் விவசாயத் துறையில் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கக் காரணங்களாக, அரசினால் வழங்கப்பட்ட மானியங்கள், நிதி உதவி, திறன் மற்றும் அறிவு வளர்சி;க்கான எற்பாடுகள், சந்தைவாய்ப்புக்கான இணைப்புகள் மற்றும் உத்தரவாத விலைகள் ஆகியவற்றின் மூலம் அரசாங்கத்தின் வலுவான ஆதரவு வழங்கப்பட்டிருந்தமையானது வேலை இழந்து வீடு திரும்பிய தொழிலாளர்களுக் ஒரு ஆர்வத்தினையும் ஈர்பினையும் வழங்கியது.

நாட்டிற்குள் ஒரு வலுவான உணவுத் பாதுகாப்பு கட்டமைப்பினை கட்டியெழுப்புவதோடு, அதிகப்படியான விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதிலிருந்து அதிக அந்நிய செலாவணி வருமானத்தை ஈட்டுவதனூடாக கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எண்ணத்துடன் விவசாய உற்பத்தியினை வலுப்படுத்த அரசாங்கமும் அதன் பங்கிற்று புதிய கொள்கைகளை உருவாக்கி வைத்திருக்கின்றது.

ஆனால் வேலையின்மை எண்ணிக்கையானது 2019 டிசம்பரில் இருந்து 411,318 பேர் வேலையில்லாமல் அதிகரித்து இருந்தபோது வேலையின்மை விகிதம் 4.8 வீதமாக உயர்ந்துள்ளது. 4 வீதம் அல்லது அதற்கும் குறைவான வேலையின்மை விகிதம் பொதுவாக உச்ச வேலைவாய்ப்பு அல்லது பொருளாதாரத்தில் முழு வேலைவாய்ப்புக்கு சமமாக இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இலங்கையின் மொத்த வேலைவாய்ப்பு கடந்த ஆண்டின் இறுதியில் காணப்பட்ட அளவை விட இன்னும் குறைவடைந்தே உள்ளது.

பொருளாதாரத்தின் மூன்று துறைகளிலும் மொத்தமாக பணியாற்றும் ஊழியர்கள்; யூன் 2020 இறுதிக்குள் 7,977,000 ஆக இருந்தனர், இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 8,181,442 ஆக இருந்தது, ஒரு வருடத்திற்கு முன்பு 2019 இல் அது 8,203,018 ஆக இருந்தது. ஆனால் இது ஒரு பெரிய வித்தியாசமாகத் தெரியவில்லை, இருப்பினும் கொள்கை வகுப்பாளர்கள் விவசாயத்தின் ஒப்பீட்டளவில் குறைந்த உற்பத்தித்திறன் காரணமாகவே உற்பத்தியில் பாரிய சரிவை ஏற்படுத்தியுள்ளதனையும், மற்றும் விவசாயிகளிடையே காணப்படும் வருமான சமத்துவமின்மை ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டுவரவேண்டிய தேவையினையும்  அறிந்திருக்கவேண்டும். 

ஒரு நவீனத்துவமான விவசாய முறையில்லாமல் விவசாயத்தில் குறைந்த தொழில்நுட்ப பாவனையுடன்;, அதனால் சம்பாதிக்கக்கூடிய வெளிநாட்டு அந்நிய செலாவணியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை நாம் அறிவோம், மேலும் இலங்கைக்கு இன்று இருக்கும் கடன் நெருக்கடிக்குள் அதனை திருப்பிச் செலுத்தி பொருளாதாரத்தினை மீட்டெடுக்க வலுவான ஏற்றுமதி சார் அபிவிருத்தியினை திட்டமிட்டு வளர்தெக்க வேண்டும். ஆகவே இவ்வாறான ஒரு இக்கட்டான நிலை நீடித்து வருவதனால் இடர்பாடில் இருந்து மீட்டெடுக்க அவர்களுக்கு மானியங்கள் மற்றும் நிதியுதவி வளங்க வேண்டிய தேவையும் இருக்கின்றது. அத்துடன் எமது விவசாயத்துறையில் இருந்து கைத்தொழில் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைக்கான நகர்வுதான் எமது பொருளாதாரததினை முன்னகர்த்த வல்லது என பல பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்..


0 comments:

Post a Comment