ADS 468x60

14 December 2020

இடம்பெயர்தோரை திருப்பி அழைத்துவருவது 'நாட்டிற்கு உழைத்தவர்களை கௌரவிப்பதாகும்'

பல சிரமங்களுக்கும் மத்தியில் தமது  விருப்பு வெறுப்புக்களை எல்லாம் தியாகம் செய்து பலர் திரைகடலோடி அல்லும் பகலும் நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைத்து வருகின்றனர். 

ஆவர்களை பாதுகாத்து இக்கட்டான சூழலில் அவர்களை அரவணைக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். ஆகவேதான், இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நமது பொருளாதாரத்தின் ஒரு அங்கமாகக் கொள்ளப்படுகின்றனர், ஏனெனில் அவர்கள் அனுப்பும் பணம் வளமையாக நாட்டின் அந்நிய செலாவணி வருமானத்தில்; (2019 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதம்) இது வர்த்தக ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய்க்குப் பிறகு நாட்டிற்கு இரண்டாவது பெரிய பங்களிப்பைக் கொண்டுள்ளது.

ஆனால் இப்பொழுது, கொவிட்-19 தொற்று மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு, வெளிநாடுகளில் உள்ளவர்களில் கணிசமான பகுதியினர் பாதுகாப்பாக வீடு திரும்புவதை எதிர்பார்கின்னர். ஆகவே இந்த ஆய்வுக்கட்டுரை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை திருப்பி கொண்டுவரும் பணியில் உள்ள பாரிய அனுபவங்களையும் சவால்களையும் ஆராய்ந்து, அந்தச் சவால்களையெல்லாம் முறியடித்து செல்லும் பரிந்துரைகளை வழங்குகிறது.

திரும்பி அழைத்துவருவதில் எதிர்கொள்ளும் சவால்

வெளிநாட்டுப் பயணங்களுக்காக சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டதிலிருந்து ஏராளமான இலங்கையர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்துவருவதற்கான செயல்முறையை இலங்கை கண்டறிந்துள்ளது. மாணவர்கள், யாத்ரீகர்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு வகையான புலம்பெயர்ந்தோரை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் பெரிய அளவிலான திருப்பி அழைத்துவரும் பணிகளை ஒருங்கிணைத்தது.

2020 அக்டோபர் நடுப்பகுதியில், 54,000 க்கும் மேற்பட்ட குடிமக்களை வீட்டிற்கு அழைத்து வந்த பின்னர், குறைந்தது இன்னும் 43,000 புலம்பெயர்ந்தோர் திருப்பி அழைத்துவரப்பட உள்ளனர். ஆகவே தற்போதைய திருப்பி அழைத்துவருவோர் பணியில் ஈடுபட்டுவரும் அதிகாரிகளின் திறனை பாராட்டாமல் இருக்க முடியாது.

விமானப் பயணங்களுக்கான செலவின் வெளிப்படைத்தன்மை

பிப்ரவரி 2020 இல் சீனாவின் வுஹானில் இருந்து 33 இலங்கை மாணவர்கள் திரும்பியதே முதல் கொவிட்-19 பரவலுக்குப்பின்னர் திருப்பி அழைத்துவரப்பட்டமையாகும். இந்த ஆரம்ப திருப்பி அழைத்துவரல் அரச செலவில் இருந்தது. இதேபோல், குவைத் நாட்டில சிக்கித்தவித்தவர்களை அழைத்துவர குவைத் மற்றும் இலங்கை அரசாங்கங்களால் வசதி செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அழைத்துவரப்பட்ட அநேகம் பேர் தமது செலவில் அழைத்துவரவேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்பி அழைத்துவரப்படுவதன்; கீழ் விமானப் பயணத்திற்கான செலவு மிக அதிகமாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. உதாரணமாக, ஏப்ரல் 2020 இல் இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பும் விமானத்தில் (ஒரு வழி) விமான டிக்கெட் செலவு ரூ .58,650 ஆக இருந்தது, இது சாதாரண நாட்களில் விமான பயண செலவு சுமார் ரூ 25,074 ஆகவே இருக்கும். ஜூன் 2020 இல் சிகாகோவிலிருந்து ஒரு விமான டிக்கெட்டின் விலை சுமார் ரூ 520,430 ஆகவும், ஜூலை 2020 இல் துபாயிலிருந்து சுமார் ரூ .81,000 ஆகவும் இருந்தது.

ஆகஸ்டில் குவைத்திலிருந்து திருப்பி கொண்டுவரப்பட்ட குழந்தைகளுக்கும் முழு வயதுவந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருந்தது. எனவே திருப்பி நாட்டுக்கு அழைத்துவரப்பட விரும்பும் பல இலங்கையர்களுக்கு, இத்தகைய கட்டணங்கள் உண்மையில் இந்த கொரோணா பாதிப்புக்குள் கட்டுப்படியாகாது என்பதை முன்வைக்கின்றனர்.

ஆயினும்கூட, இத்தகைய அதிக கட்டணங்கள் அரசாங்கத்தின் அதிகரித்த செலவு காரணிகளின் அடிப்படையில் அறவிடப்படுகின்றன, அவற்றில் விமானங்களுக்கான வசதிகளைக் கட்டியெழுப்புதல், இலங்கையர்களைத் அழைத்துவரும்; வழியில் யாருமில்லாமலே விமானங்களை அவர்களை அழைத்துவர பறக்க விடுதல், விமான நிலையங்கள் முழுமையாக செயல்படாத நேரத்திலும் பராமரிப்பு பாதுகாப்பு செலவகளின் அதிகரிப்பு மற்றும் பிறநாடுகளில் ஒப்பந்தம் இல்லாத நிலையிலான விமானத் தரையிறக்கம், ஆகியவற்றுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுதலை கையாள வேண்டியுள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.

மேலும், கொவிட்டுக்கென பிரத்தியேக பாதுகாப்புடன் சிறப்பு கொவிட்-19 விமான செயல்பாட்டு நடைமுறைகள் கொண்டுள்ள செலவுக்கும் குறைவாகவே பயனிகளிடம் கட்டணம் அறவிடப்படுவதனால் அரசின் செலவு அதிகரித்துக் காணப்படுகின்றது என்பதனை நாம் உணரவேண்டும்.

நிர்கதியானவர்களை திருப்பி கொண்டுவருவதற்கான அடையாளம் காணுதல்;

விமான நிலையங்களின் நுழைவாயில் நீண்ட காலமாக மூடப்பட்ட நிலையில், திருப்பி அழைத்துவர விரும்பும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. அதற்கான அதிக தேவை இருந்தபோதிலும், திருப்பி அழைத்துவரும் நேரம், மருத்துவ மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குவதற்கான எல்லா வசதிகளையும் சரியான முறையில் அமைத்து அவற்றை முறையாக செயற்படுத்த வேண்டியிருந்தது, அத்தோடு ஏற்கனவே இலங்கையில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் இங்கு அழைத்து வருபவர்களுக்கும் இடங்களை ஒதுக்குவதில் அவதானம் செலுத்தவேண்டியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே, மே மாதக் நடுப்பகுதியளவில் குவைத் நாட்டில் இருந்து திருப்பி அழைத்து வருகின்றவர்களிடையே அதிகரித்த தொற்றாளர்களின் சம்பவங்களால் அவர்களை திருப்பி அழைத்துவருவதற்கான பல முயற்சிகள் தற்காலிகமாக முடங்கின. அதனுடன் தொடர்ந்து ஜூலை மாதத்தில் கந்தக்காடு போதைவஸ்த்து புனர்வாழ்வு மையம் தனிமைப்படுத்தல் நிலையத்தின் கொத்தணியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒக்டோபரில் மினுவாங்கொட மற்றும் பெலியகோடா கிளஸ்டர்களின் தோற்றம் இடம்பெற்றமையும் நாம் அறிந்ததே.

இந்த அனுபவங்களை வைத்துக்கொண்டு திருப்பி அழைத்து வருகின்றவர்களிடையே தொற்றுநோய்களின் அச்சுறுத்தலைக் குறைக்க அரசாங்கம் திருப்பி அழைத்து வருபவர்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுப்பதில் 'அதிக தொற்றாபத்து மற்றும் குறைந்த தொற்றாபத்துக்களை' வரையறுத்து அதற்கான இடங்களை வௌ;வேறாக அடையாளங் கண்டது. எமது நாட்டுக்கு திருப்பி அழைத்துவரவும் மற்றும் திருப்பி அனுப்பி வைப்பதற்குமான அடையாளம் காணப்பட்ட நாடுகளுக்குள், ஆவணமற்ற தொழிலாளர்கள், புதிதாக வேலையில்லாதவர்கள் மற்றும் சம்பளம் இழந்தவர்கள் போன்ற காரணங்கள், அவர்களின் நலிவுறு தன்மை மற்றும் பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் புலம்பெயர்ந்தோர் தேர்ந்தெடுக்கப்பட்டமை ஒரு சிறந்த அரசின் கட்டமைப்பு அணுகுமுறையாகவே நோக்கப்படுகின்றது.

தனியார் துறையினரின் பங்களிப்பை இணைத்துக்கொள்ளல்

படிப்படியாக பணம் செலுத்துவதற்கான இயலுமை, திரும்பி வருவதற்கான ஆர்வம் மற்றும் பிறவும் எமது நாட்டுக்காக உழகை;கச் சென்றவர்களை, கல்வி கற்கச் சென்றவர்களை திரும்ப அழைத்துவர அரசாங்கத்தினை தூண்டும் காரணங்களாக அமைந்தன. இப்போது திரும்ப வருபவர்கள் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் உதவிகளும் இருக்கத்தக்கதாக விருப்பமானவர்கள் தனிமைப்படுத்தலை அவரவர்  வசதிக்கேற்ப பிசிஆர் பரிசோதனைகள் இரண்டு உட்பட அவர்களது உள்ழூர் பிரயாணச் செலவு உள்ளடங்கலாக ஒரு நாளைக்கு 7500 ரூபாக்களைச் செலுத்தி 14 நாட்கள் தனிமையில் இருக்க வௌ;வேறு பக்னேஜ்கள் தனியார் சுற்றுலா விடுதி உரிமையாளர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றன.   ஆக இந்த இரண்டு வகையான தனிமைப்படுத்தப்பட்ட சேவைகளும் அரசாங்க மேற்பார்வையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தக் கேள்வி அதிகரித்ததன் காரணமாக ஓகஸ்ட் 2020 இல், குவைட்டில் இருந்து கொண்டுவருவோர்கு செலுத்தப்பட்ட முழு தொகை சுமார் ரூ .250,000 ஆகவும், சவுதி அரேபியாவிலிருந்து ரூ .220,000 ஆகவும் இருந்தது. எனவே, பிரபலமான தேர்வுகள் இரண்டு இருந்தது ஒன்று அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் சேவையைப் பெறுதல் மற்றது தனியார்கள் கொட்டேல் உரிமையாளர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் கட்டனம் செலுத்தப்பட்ட தனிமைப்படுத்தலாகும்.

பரிந்துரைகள்

இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் அரசாங்கத்துடன் இணைந்தான தனியார் துறையின் உதவியானது அவர்களது சுமையை எளிதாக்கும் ஒன்றாகப் பார்க்கப்படும் அது சரியான நேரத்தில் அரசால் வழங்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் திறனை மேம்படுத்தியுள்ளது. இதேபோல், அர்பணிப்புள்ள அரச பணியாளர்களினால் மிக வினைத்திறனான அர்பணிப்பான சேவையை வழங்கி பல இடர்களை அரசாங்கம் கட்டுப்படுத்த ஏதுவாக இருந்தது.

இந்தக்காலத்தில் திருப்பி நாட்டுக்கு வர இருக்கும் இலங்கை புலம்பெயர்ந்தோருக்கான நிதி மற்றும் அவர்களது உணர்வுக்கான செலவைக் குறைக்க மிகவும் பொருத்தமான மற்றும் வெளிப்படையான அணுகுமுறை தேவை. ஆவற்றை செய்ய கீழே சில பரிந்துரைகள்:

திருப்பி அழைத்துவரும் விமானங்களுக்கான செலவு கட்டமைப்பை வெளிப்படையானதாக ஆக்குதல்

விமான கட்டணங்களை குறைப்பதற்கான வழிகளை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாராய்தல்

திருப்பி அழைத்துவருவதற்கான தேர்வு செயல்முறையை வெளிப்படையானதாக்குங்கள்

திருப்பி அழைத்துவருதல் மற்றும் தனிமைப்படுத்துதல் என்பனவற்றில் அவற்றை அடைந்துகொள்ளக்கூடிய மற்றும் முடியாதவர்களுக்கென இரு பட்டியலை தயாரித்துக்கொள்ளவேண்டும்.

இவற்றை கருத்தில்கொண்டு பல நடைமுறைகளை மாற்றியமைத்தால் நிச்சயம் பாரிய மாற்றத்தினை நாம் ஏற்படுத்தலாம்.


0 comments:

Post a Comment