ADS 468x60

09 December 2020

உழைக்கும் வர்க்கத்தினை உருவாக்கும் கல்விக்கான தேவை இன்று உணரப்படுகின்றதா!

'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழிக்கு ஏற்ப கல்வி கற்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் இக்காலத்து எமது கல்விமுறை, படித்து வேலைக்கு செல்லவோ அல்லது தொழில் செய்ய ஏதுவாகவோ, பொருள் சாம்பாதிக்க ஏதுவாகவோ போடப்படும் முதலீடு. ஆனால் உண்மையில் கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களும் கல்வியின் நோக்கத்தினை இவ்வாறு சொல்லுகின்றார்கள் 'கல்வி ஒரு மனிதனின் அறிவுத்திறனை வளர்த்து சுதந்திரமான மற்றும் சுயாதீனமான முடிவுகளை எடுக்கத் தேவையான அறிவைக் கொண்டு மக்களைச் சித்தப்படுத்துவதே' என்று கூறுகின்றனர்.

ஒரு மாணவனின் தனிப்பட்ட கல்வித் தேர்வுகளுக்கு ஒரு பொருளாதார அடிப்படை உள்ளது, அதுபோல் அரசியல் சூழல், பொருளாதாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கைச் சூழலின் சமூக மற்றும் கலாச்சார விதிமுறைகள் போன்ற பல்வேறு காரணிகளை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்வி கொள்கையானது நாடுகளுக்கிடையே அவற்றின் அரசியல் நிலப்பரப்பிற்புக்கு ஏற்ப  வேறுபடலாம் என்றாலும், குறிப்பாக உலகமயமாக்கல் சூழலில் பல பொதுவான தன்மைகளைக் காணலாம்.

இன்று சந்தை சார்ந்த பொருளாதாரங்களின் கட்டமைப்பில், கொள்கை வகுப்பாளர்கள் நடத்திய கலந்துரையாடல்களில் உயர் கல்வியின் நோக்கம் குறித்த விவாதம் மிக முக்கியமான அங்கமாகிவிட்டது. சமூக விஞ்ஞானிகள் உயர்கல்வியில் பங்கேற்பை அதிகரிப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும் அங்கு சமூக ஏற்றத்தாழ்வுகளின் அதிகரிப்பை எடுத்துக்காட்டுகின்றனர்.

ஊழியச் சந்தையின் உந்துதல், புதிய புதிய உயர் கல்வி கொள்கைகள், அவற்றைப் பெறுபவர்களிடையே போட்டியை அதிகரித்துள்ளன மற்றும் இவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் தொழிலாளர் சந்தை மதிப்பாக மாற்றக்கூடிய சொத்துகளாக மாறியுள்ளன.

பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாகத் தவிர, மனித வளர்ச்சிக்கான அவசியமாக கல்வி இனி கருதப்படுப்போவதில்லை. கல்வியில் சிறந்த வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இந்த செயல்முறையை முடிந்தவரை வாடிக்கையாளர் நட்பாக மாற்றுவதற்கான முயற்சிகளில் கல்வி நிறுவனங்கள் தானியங்கி பட்டம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைப் போலவே மாறிவிட்டன.

மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல்

இதே நிறுவனங்கள், 'மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல்' மற்றும் 'வாய்ப்புக்களை கருத்தில்கொண்ட திட்டம்' போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துகின்றன, அவை பட்டம் வழங்கும் முறை ஒன்றுக்கொன்று முரணானவையாகவே இருக்கின்றன.

பொருளாதார முன்னேற்றத்தைத் தக்கவைக்க சந்தை தேவைப்படும் இளைஞர்களை உற்பத்தி செய்யும் பணியில் இந்த கல்வித் தொழிற்சாலைகளுக்கு மாணவர்களை மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கான இந்த கருத்தை உலகம் ஏற்றுக்கொண்டது.

இன்று தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் எந்த நேரத்திலும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை சென்றடைவதை மிகவும் எளிதாக்கியுள்ளது.

ஐரோப்பாவில் முதன்முதலில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் போலோக்னா பல்கலைக்கழகம், 'சுதந்திரமான கல்வி' (‘academic freedom’) என்ற கருத்தை அதன் கலாச்சாரத்தின் மூலமாக அறிமுகப்படுத்தியது.

விஞ்ஞான வளர்சி  ஆரம்பிக்கப்பட்டு உலகளாவிய இறையியல் கோட்பாட்டுக்கு சவால் விடுக்கும்வரை, மதரீதியான கருத்தியல்புகளே அறிவாகக் கொள்ளப்பட்டன. இதன் பயனாகவே ஒருவரின் புலமை இவற்றை தீர்பதற்கான ஆய்வுகளை செய்வதில் முன்னிறுத்தப்பட்டன. 

தாராளவாத கலை மரபுகளின் அறிமுகமே பல்கலைக்கழகங்களாக பரிநமித்து அதையே இன்று உலகில் பெரும்பாலானோர் உயர் கல்வி நிறுவனங்களாக அடையாளப்படுத்துகின்றனர். இந்த தாராளவாத கலை மரபுகள் சமூக அறிவியலில் இடைநிலைக் கல்வியின் ஒரு செயல்முறையாக பரிணமித்திருந்தாலும், அதன் உண்மையான கருத்து மாணவர்களின் மனதை அடிமைத்தனம், தீய பழக்கவழக்கங்கள் மற்றும் தேவையற்ற கோட்பாடுகளின் பழக்கங்களிலிருந்து விடுவிப்பதாகும், ஏனெனில் அவை சுய உணர்திறன் மற்றும் விழிப்புணர்வுள்ள குடிமக்களாக கொண்டுவர உதவியிருக்கின்றன.

தொழில்துறை புரட்சிகளுடன், முதலாளித்துவ பொருளாதார முறைமைகள் தொழில்நுட்ப கற்கை நிறுவனங்களுக்குள் கொண்டு சேர்க்கப்பட்டன. இக்கருத்தின் அடிப்படையில் முறைசார் கல்வியினூடாக தொழில்துறை திறன்களைப் பெற வேண்டும் என்ற கருத்து வலுப்பெறத்துவங்கியது.

ஆகவே தற்போது இந்த புதிய மாதிரிகளின் கலவையை உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் காண்கிறோம். உயர்கல்வியின் மற்றொரு அம்சம் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக்குதல். அதற்கு அடுத்த அம்சம் சமூகத்தின் மேலாதிக்க வர்க்கத்தின் இளைஞர்களை மாத்திரம் இந்த உயர்கல்வியில் தயார்படுத்தல்.

இந்த இரு அம்சங்களுக்கும் மேலாக பொதுவாக இன்று இன்னொரு வடிவம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுதான் ஊழியச் சந்தையில் உள்ள திறன் மற்றும் அறிவுத் தேவைக்கு அல்லது கேள்விக்கு ஏற்ப்ப அவர்களின் தேவையைப் புர்த்திசெய்ய மாணவர்களை தயார்படுத்தலைக் குறிக்கும். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் சமூக மாற்றங்களுடன் தம்மைத் தயார்படுத்தலைக் குறிக்கும்.

ஒருவருக்கான கல்வி நிச்சயமாக ஊழியச்சந்தைக்கு அவரை ஈர்க்கவேண்டும் என சில தொழிற்துறையில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் அதோடு தொடர்புடைய பங்குதாரர்கள்( stakeholders) நினைக்கின்றார்கள். மற்றவர்கள் இந்தக் உயர்கல்வி சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து சுதந்திரமானதாக அறிpவை கொடுப்பதாக இருக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் வெளிப்படுத்துவது என்னவெனில் மேலுள்ள இரண்டு கருத்துகளின் கலப்பாக (hybrid of the two concepts)  இருந்து ஒன்று அறிவை உற்பத்தி செய்து அதனை மக்களிடையே பரப்பும் ஒரு நிறுவனமாக இருப்பதே நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான வழி என்பதனைக் காட்டுகின்றது.

ஊழியச் சந்தை அடிக்கடி ஏற்படும் விரைவான மாற்றங்களுக்கு ஏற்ப, புதிய திறன்களை விரைவாகக் கற்றுக் கொள்ளும் அதுபோல் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்பவர்களைத்; தேடுகிறது என்பது தெளிவாகிறது. எனவே, எவ்வாறு எதைக் கற்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வது உயர் கல்வியின் மிக முக்கியமான பகுதியாக மாறிவிட்டது. யுத்தம் நடைபெற்றுவந்த காலங்களில் இத்தகைய ஒரு மாற்றம் அவசியமாகத் தேவைப்பட்டது.

இதேபோல்தான் கொவிட் -19 தொற்றுநோய்கு பின்னர் அதனால் ஏற்பட்ட் மாற்றத்துக்கேற்ப திறனை தேடுதலின் முக்கியத்துவத்தையும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான நெகிழ்வுத் தன்மையையும், அதேபோல் புதிய முறையில் தமது செயற்பாடுகளைக் கொண்டு செல்பவர்களினதும் தேவையை நமக்கு உணர்தியுள்ளது. சமீபத்திய ஆய்வுகள் மூலம் முதலாளிகளில் பெரும்பாலோர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திறன் (( problem-solving ), ஒத்துழைப்பு (Collobration), தகவல் தொடர்பு, இயைந்துபோதல், நேர்மை (integrity), எதிர்கொள்ளும் திறன், பச்சாத்தாபம் (empathy) , ஒருமைப்பாடு, மற்றும் தலைமைத்துவம் போன்றவற்றினை மதிப்புமிக்க திறன்களாக பட்டியலிடுகின்றன. 

இந்த டிஜிட்டல் யுகத்தில், செயற்கை அறிவாற்றல் ((artificial intelligence) ) என்பது ஒரு மெசினால் செய்ய முடியாதவற்றை புத்தியினைப் பாவித்து தொழில்நுட்பத் துணையுடன் செய்தல். இது ஊழியச் சந்தையில் பெரிதும் வரவேற்கப்படும். உலகப் பொருளாதார மன்றம் (The world Economic Forum)  தனது 2016 ஆம் ஆண்டின் அறிக்கையில், வேலைகளின் எதிர்காலம், இன்று ஆரம்பப் பாடசாலைகளில்; நுழையும் குழந்தைகளில் 65 சதவீதம் குழந்தைகள் இதுவரை இல்லாத வேலைகளில் பணியாற்றப்படுவார்கள் என்று கூறுகிறது.

வேலைவாய்ப்பு என்பது கல்விக்குப் பிறகு ஒருவர் தேடும் ஒன்றாக இருக்காது. ஆனால் அறிவை மையமாகக்கொண்ட பொருளாதாரத்தில் நிகழும் மாற்றங்களைப் பொறுத்து இரண்டும்; முன்னும் பின்னுமாக மாற்றமடையும்

எவ்வாறாயினும், ஒரு நாட்டின் கல்வி முறை அதன் குடிமக்களை பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்நாள் முழுவதும் கற்றல் செயல்முறையைத் தொடரும் அதே வேளையில் சமூகத்தின் நெறிமுறை மற்றும் தார்மீக மதிப்பீடுகளை மேம்படுத்துவதிலும் மிக முக்கியமான செயல்முறையாக கருதப்பட வேண்டும். .

ஒரு கல்வி முறையின் இறுதி குறிக்கோள், அதனைப் பெறுபவர்களுக்கு உலகைப் புரிந்து கொள்ளும் திறனையும், அவர்கள் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான நோக்கத்தையும் வளர்க்க உதவுவதாக இருக்க வேண்டும். பின்லாந்து என்பது அத்தகைய கட்டமைப்பின் மூலம் கல்வியை அணுகிய ஒரு நாடு, அங்கு மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் அந்த சொற்றொடரின் உண்மையான அர்த்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் தொழிற் சந்தைக்கு ஏற்ப கல்வி இன்று அனைவரலாலும் வரவேற்கப்படும் அதேவேளை ஒழுக்கம், தர்மம், விழுமியம், அனுட்டானங்களை ஒரு மனிதனுக்கு கற்றுக்கொடுக்கும் ஒன்றாகவும் கல்வி அமையவேண்டும். அப்போதுதான் கௌரவமான குடிமக்களைக் கொண்ட நாடாக சட்டம், நீதி மற்றும் ஒழுக்கத்துக்கு மதிப்பளிக்கும் மக்களைக்கொண்டு ஒரு சிறந்த வளர்சிக்கு வித்திடும் நிலை உருவாகும்.


0 comments:

Post a Comment