ADS 468x60

12 December 2020

விவசாயத்துறையில் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய மாற்றம்!

-S.Thanigaseelan-
இன்று கொவிட்-19 நாட்டில் விவசாயிகளை முன்னிறுத்தவேண்டியதன் அவசியத்தினை அரசாங்கத்துக்கு உணர்த்தியுள்ளது. அதனால் தான் அரசாங்கம் அதன் கொள்கையில் விவசாயத்தினை முதன்மைப்படுத்தும் வகையில் பல திட்டங்களை முன்மொழிந்து அதற்கான சலுகைகளையும்  பரிந்துரைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து உள்ழுர் உற்பத்தியினை ஊக்குவிக்க இறக்குமதிகளையும் கட்ப்படுத்தியுள்ளது. இருந்தபோதும், 2020 அதன் இறுதி நாளை நோக்கி நகரும்போது, அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் வழக்கமான அதிகரிப்பினை பொதுமக்கள் காண்கின்றனர், இது தற்போதுள்ள கொவிட்-19 ஆல் இன்னும் மோசமடையக்கூடும். இவ்வாறான நிலைமை வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த ஒரு மாற்று விநியோக முறையை வைக்க விவசாய அமைச்சகத்தைத் தூண்டியுள்ளது, எது எப்படி இருப்பினும் இவ்வாறான முயற்சிகள் தோல்வியை கண்டு வந்துள்ளமைதான் நிதர்சனம்.

வழமையாக விலைகள் அதிகரிக்கும் போது, எப்போதும்போல அரசாங்கத்தை குறை கூறுவிடுவோம்;. இது அரசாங்கத்தின் சந்தைசார் நடவடிக்கைகளில் அவர்களது தலையீட்டைத் தூண்டுகிறது, குறிப்பாக தேர்தல்கள் மற்றும் பண்டிகை காலங்களில் இவை பொருத்தமானதாகவே இருக்கும். இலங்கையைப் பொறுத்தவரை, எந்தவொரு அரசாங்கத்திற்கும் விவசாயத் துறை ஒரு முக்கிய வாக்குக்களைப் பெற்றெடுக்கும் ஒரு பெரிய தளமாக உள்ளது, ஏனெனில் இங்குதான் நாட்டின் மொத்த தொழிலாளர்களில்; 27% சதவீதமானவர்களைக் கொண்டுள்ளது மற்றும் கணக்கெடுப்பின்படி மொத்த சனத்தொகையில் அவர்கள் 70% வீதமானவர்மானவர்கள் விவசாயத்துடன் மறைமுக தொடர்பினைக்; கொண்டுள்ளனர்.

எது எப்படியே அரசின் சந்தைசார் தலையீடுகள் குறுகியகாலம் அல்லாமல் நீண்டகாலம் இருப்பது அந்த சந்தையின் இயல்பினைப் பாதிக்கக்கூடும். ஆனால் அரசாங்கம் பொருட்களின் விநியோகச் சங்கிலியினை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் எவ்வாறு இந்த விவசாயிகளின் குறைவான செயற்பாடுகளை வினைத்திறனாக மாற்றி இடர்களை சந்தையில் முறியடிப்பது என்பனவற்றில் அதிக கவனம் செலுத்துதல் முக்கியமாகும்.

இடைத்தரகர்களிடம் இடர்படும் உற்பத்திகள்

நாம் சாதாரணமாகப் பார்ப்போமானால் எம்மிடையே விவசாயிகள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளில் ஒன்று அவர்களது உற்பத்திக்கு நியாயமான விலையை அவர்களால் பெறமுடிவதில்லை. 

அதே நேரம் இந்தப்பொருட்களை கொள்வனவு செய்கின்ற நுகர்வோர் மறு புறத்தில் பொருட்களின் விலை அதிகமாக இருக்கின்றது என புகார் செய்தவண்ணம் உள்ளனர். ஆகவே இவர்களுக்கு இடையில் உள்ள இடைத்தரகர்கள்தான் இரண்டு பக்கத்துக்கும் பாதகமாக இருந்து கொள்ளை இலாபம் ஈட்டுகின்றார்கள். நாம் அன்றாடம் காணும் ஒன்று எமது விவசாயிகளின் காய்கறிகள், பழவகைகள் மற்றும் தேங்காய் போன்றவற்றை தரகர்கள் மிகக்குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து அதிக வலைக்கு விற்று இலாபத்தினை அவர்களது பொக்கட்டுள் நிரப்பி அடாது செய்வது. 

துரதிர்ஷ்டவசமாக எமது பல விவசாயிகளுக்கு சந்தைக்கு பொருட்களை விற்பனை செய்ய நேரடியாக அணுக எளிதான வழிகள் இல்லாததால், அதுபோல் தேவையான முதலீடு மற்றும் உற்பத்தியாளர்களிடம் வழக்கமாக அதனை சந்தைப்படுத்தும் பிற வளங்கள் மற்றும் அதுசார்ந்த அறிவு இல்லாமல் தங்கள் தயாரிப்புகளை இடைத்தரகர்களுக்கு விற்க வேண்டியுள்ளது.

அதனால் அவர்களுக்கும் சந்தைக்கும் இடையில் பெரிய இடைவெளி காணப்படுகின்றது. நெல் உற்பத்தியினை எடுத்துக்கொள்வோமானால் விவசாயிகள் அவற்றை அரிசாக்கி விற்க முடியாமல் இடைத்தரகர்களுக்கு மிகக்குறைந்த விலைக்கே விற்கின்றார்கள். அவர்களுக்கு அவற்றை களஞ்சியப்படுத்தவோ, காயப்போடவோ, அவற்றை அரிசாக்க ஆலைகளை தமக்கு தமக்கு உருவாக்கவோ முடியாமல் உள்ளதை தரகர்கள் சரியாகப்பயன்படுத்துவதைப் பார்க்கின்றோம். இந்தப்பொறியில் இருந்து மீள அவற்றை நியாயமான விலையில் சிறு ஆலைகளுக்கு கொடுத்து பயனடையும் முறையும் சாத்தியமாகாமல் உள்ளது. 

வேறு நாடுகளின் அபிவிருத்தி அனுபவம்

ஆகவே இவ்வாறான தொடர் சவால்களை தீர்த்துக்கொள்ள ஏனைய நாடுகளில் பல பல வழிவகைகளைக் கையாழுகின்றனர். அப்படிப் பார்ப்போமானால் இந்த விஷயங்களில் பலவற்றைத் தீர்க்க இலங்கை உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, பிற நாடுகள் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் ஆண்டு முழுவதும் தொடர்சியாக உற்பத்தி செய்வதற்கும் குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகள், புதிது புதிதாகக் கிடைக்கும் விவசாய சந்தைசார் தரவு தளங்கள், புதிய விதை வகைகள் மற்றும் உர வகைகளைப் பயன்படுத்துகின்றன. அதேபோல் தனியுரிமை கொண்டு போட்டித்தன்மையை தாங்கயே உருவாக்குவதனையும் அவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சீர்திருத்தங்களையும் அவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள்.

விவசாயத்துறை இலங்கையில் மழையைச் மழையை நம்பி இருப்பதே மிகப்பெரிய ஒன்றாக இருக்கின்றது, இவ்வாறான ஒரு நிலமை ஒட்டுமொத்த் விவசாயத்தினையும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப முகம்கொடுக்க முடியாத  அல்லது ஆளான மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்து வருகின்றது. 

உலகின் முன்னேற்றமடைந்த நாடுகள் புதிய நீர்ப்பாசன முறைகள், செங்குத்தான விவசாய முறைகள் மற்றும் சிறந்த போக்குவரத்து, களஞ்சிய, பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றின் விரிவாக்கம் விவசாயத்தின் உற்பத்தித்திறன் மற்றும் தொடர்ந்து பயிரிடக்கூடிய நிலைத்திருக்கும் தன்மையை அதிகரித்து வருகிறது. 

இந்த நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு எதை எப்போது பயிரிடல் செய்ய வேண்டும், சிறந்த சந்தை அணுகுமுறைகள் என்ன என்ன, மற்றும் விலை பாதுகாப்பை உறுதிசெய்தல் போன்றவற்றினை வழங்குகின்றன என்பதற்கான சிறந்த யோசனைகளை வழங்கின. இது ஒரு குறிப்பிட்ட பயிரை அனைவரும் விளைவித்து தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்து சந்தையில் அவற்றுக்கு கேள்வி இல்லாத நிலையை இல்லாது செய்கின்றது. 

விவசாயத்துறை கொள்கை சீர்திருத்தம் ஏற்றுமதியை அதிகரிப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும், ஏனெனில் அப்போதுதான் அது ஒவ்வொரு விவசாயிகளினதும் உற்பத்தியினை மேம்படுத்தி வருவாயை அதிகரிக்கும். இன்று விவசாயத் துறையை இளைஞர்கள் புறக்கணித்து வேறு கவர்சியான துறைகளில் வேலை தேடிச் செல்லும் நிலையி ல் இந்தத் துறை வயதான மக்களுடன் போராடி வருகிறது.  ஒரு கல்விகற்ற இளம் தலைமுறை பணியாளர்கள் இத்துறைக்கு கிடைக்கும் போது பதிய சீர்திருத்தங்களுடன் தொழில்நுட்பத்தினை காலத்தின் தேவைக்கேற்ப்ப உட்செலுத்தி சிறப்பாக அவர்களை பயிற்றுவித்து இதை மென்மேலும் வளர்தெடுக்கலாம்.

ஆகவே இவ்வாறான சவால்களை நாம் நிவர்த்தி செய்யப்படாவிட்டால், உணவு விலைகள் அதிகரிப்பதனை நாம் மாற்ற முடியாதுபோகும்.

உண்மையில் பாரம்பரியமாக, விவசாயத்தில் அரசாங்கத்தின் ஈடுபாடு விவசாயிகளுக்கு ஒருவருக்கு ஒருவர் ஏற்றத்தாழ்வான நன்மைகளையே உருவாக்கி வருகின்றது, பல விவசாயிகள் தங்களது சொந்த நிதியினைப் பயன்படுத்தியே அவர்கள் பெற்ற முறைசார் கல்வியைக்கொண்டும் அவர்களது நிலத்தில் பயிர்செய்து வருகின்றனர். பெரும்பான்மையான ஏழை விவசாயிகள் விவசாயத்திற்கான அரசின் உதவி கிடைக்காமலும், சிறுபான்மையினருக்கு பயனளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்புகள் வடிவமைக்கப்படாமலும் விலக்கப்பட்டுள்ளனர் என்பதனை அவதானித்திருக்கின்றோம்..

எனவே இந்தப் பின்னணிகளைக்கொண்டு அரசாங்கம் மற்றும் அங்கு கடமை புரிகின்ற அதிகாரிகள் அரசாங்கத்தின் உள்ழுர் உற்பத்தியைப் பலப்படுத்தும் கொள்கையை முடிந்தவரை அதிகமான மக்களைச் சென்றடைய பயன்படுத்தப்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும், மேலும் இது விவசாய நவீனமயமாக்கல், விநியோகச் சங்கிலி அபிவிருத்தி; மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றின் ஒரு பெரிய நீடித்த திட்டத்தின் தொடக்கமாக அமைகின்றது. 

0 comments:

Post a Comment