ADS 468x60

05 December 2020

கொரோணாவில் வறுமைக்கு உட்பட்டவர்களை மீட்டெடுக்கும் மூன்று வழிகள்.

கோவிட் -19 நாட்டிற்குள் மாத்திரமல்ல உலகத்தினையே ஆட்டங்காணச் செய்துள்ளது. இது ஒருவருக்கு ஒருவர் உதவ முடியாத ஒரு அவபாக்கிய நிலமையை உருவாக்கியுள்ளது. அதனால் எம்ரைமப் போன்ற வளர்ந்து வருகின்ற நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளை மையமாக்கொண்ட நிறுவனங்களின் எல்லாவிதமான உதவிகளையும் பெறமுடியாத நிலையில் உள்ளது. இதனால் சொந்தக் காலில் எழுந்து நிற்க்க பல போராட்டங்களை வலிந்து செய்ய வேண்டியுள்ளோம். இருப்பினும் உலக வங்கியின் மீட்புக்கான பலதரப்பட்ட உதவியானது இந்த இக்கட்டான நேரத்தில் பாரிய உந்துசக்தியாகவே பார்க்கப்படுகின்றது. எனவே சமகாலத்தில் இந்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமானதாகும்.

இவ்வாறான உதவிகள்; இந்த நாட்டில் மிக முக்கியமாக வடகிழக்கில் பிரயோகிக்கப்படவேண்டும். ஏனெனில் இங்கு பல கால பின்னடைவுகளால் மக்கள் வறுமையில் வாடும் நிலை உருவாகி, பன்னெநுங்காலமாக வறுமையில் முன்னிற்கும் மாவட்டங்கள் இப்பிராந்தியத்தில் இருப்பது தரவுகள் சொல்லும் உண்மை இதற்கு பாகுபாடற்ற அற்பணிப்பான மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பும் அதிகாரிகளின் ஈடுபாடும் அதிகம் தேவைப்படுகின்றது.

குறிப்பாக நாம் அவதானிப்போமானால், கோவிட்-19 தொற்றுநோயால் 20 ஆண்டுகளில் உலக வறுமை முதன்முறையாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் 115 மில்லியன் மக்கள் வரை இந்த ஆண்டு கடுமையான வறுமையில் அகப்படுவார்கள் என்று அஞ்சப்படுகின்றது.

எனவே, இந்த குறிப்பிட்ட 'வறுமையை இல்லாது முடிவுக்குக் கொண்டுவருதல்' கடந்த ஆண்டுகளைப் போலவே சாதாரண கொண்டாட்டங்களுடன் கிடையாது, மாறாக புதிய வைரஸ் தொற்றுடன் போராடி அவற்றை மறுசீரமைப்புடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

உண்மையில், பல தசாப்த காலமாக எமது இலங்கை இப்பிராந்தியத்தில் பல விடயங்களில் ஒரு சிறப்பு இடத்தை உருவாக்கியுள்ளது. அதன் பொருளாதாரம் வளர்சியடைந்து முக்கியமான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. உலக வங்கியின் மனித மூலதன குறியீட்டில் தெற்காசியா பிராந்தியத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இலங்கை முதலிடத்தில் உள்ளது அதற்கு சான்றாக உள்ளது.

இலங்கையிலும், மற்ற நாடுகளைப் போலவே, தொற்றுநோயால் ஏற்பட்ட வேலையின்மை மற்றும் வருமானங்கள் இழப்பு கடுமையாக உள்ளது. ஏறக்குறைய ஒவ்வொரு துறையிலும் உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 70 சதவீத முறைசாராத் தொழிலாளர்கள் மற்றும் சிறு வர்த்தகம் போன்ற குறைந்த அளவிலான சேவைகளில் ஈடுபடும் முறைசாரா தொழிலாளர்களில் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுள்ளார்கள்.

சுமார் அரை மில்லியன் தொழிலாளர்கள் பணியாற்றும் ஆடைத் தொழில் சாலைகளில், கணிசமான எண்ணிக்கையிலான வேலைகளை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பேரழிவுகரமான ஏப்ரல் 2019 தாக்குதல்களின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்தபோது, சமீபத்திய ஆண்டுகளில் வளர்ந்து அதிகரித்து வந்த கட்டுமான மற்றும் சுற்றுலாத்துறை வேலைவாய்ப்புக்கள் என்பன வீழ்சி சடுதியாக கண்டுள்ளது.

இதன் விளைவாக, எமது நாட்டினுடைய வறுமை நிலை (உலக வங்கியின் 2011 அமெரிக்க டாலர் 3.20 வறுமைக் கோட்டால் அளவிடப்படுகிறது) 2011 ஆம் ஆண்டில் 8.9 சதவீதத்திலிருந்து இவ்வாண்டில் 13 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுமார் 890,000 மக்கள் புதிதாக ஏழைகளாக மாறும் ஒரு நிலையை இது குறிக்கிறது அவர்களில் பலர் இலங்கையின் ஏழ்மையான பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆகNவு எமது நாட்டுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகும், இது மக்களின் நலனை மேம்படுத்துவதில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான மதிப்புள்ள முன்னேற்றத்தை தள்ளிப்போட்டுள்ளதனைக் குறிக்கும்.

மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை மாற்றியமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு பல விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால் இந்தத் தொற்றுக் காரணமாக இப்போது, முன்னோக்கி நகரும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. இருப்பினும் இந்த சவால்களையெல்லாம் தாண்டி நாட்டை மீளக் கட்டியெழுப்பி மக்களின் வாழ்வை இயல்பு நிலைக்கு கொண்டுவர எமது அரசாங்கமானது கவனம் செலுத்தி வருகின்றது.

உலகவங்கியின் மூன்று பிரதான பணிகள்

உலக வங்கியானது இந்த நாட்டின் மக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால பங்காளியாகும். நூட்டின் பின்னடைவில் இருந்து விடுபட்டு; திரும்புவதற்கு உதவம், கொவிட்-19 நெருக்கடியால் அதிகரித்து வரும் வறுமையின் அலைகளைத் குறைப்பதற்குமாக என மூன்று வழிகளில் இது அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றது.

1. முதலில், ஏழைகளையும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் பாதுகாப்பதன் மூலம். தொற்றுநோயால் தூண்டப்பட்ட பொருளாதாரச் சுமை சமமாகச் சுமக்கப்படுவதில்லை, மேலும் ஏழ்மையானவர்களையும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் அதிக கஷ்டங்களுக்குள் வராமல் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. சரியான நேரத்தில் தலையீடு மேற்கொள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் சந்தையில் நெருக்கடியின் தாக்கத்தை தொடர்ந்து கண்காணிக்க முயற்சிகள் தேவையாக இருக்கின்றன. அதற்கான ஆய்வுகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதில் குறிப்பாக தெற்காசிய நாடுகளில் தொலைபேசி ஊடாக இந்த நெருக்கடி காரணமாக தொழில்வாய்ப்பு மற்றும் வருமானம் என்ன நிலையில் இருக்கின்றது என்பதனைக் கண்காணிப்பு ஆய்வு ஒன்றின் மூலமாக செய்து அவற்றுக்கு எவ்வாறு தீர்வினை முன்வைப்பது என்பதனையும் செய்து வருகின்றது. ஆகவே இவற்றின் மூலமாக இந்த நிறுவனம் அரசின் நீண்டகால பாதுகாப்பு நடைமுறைகளுக்கான மூலோபாயங்களை கொடுப்பதிலும மற்றும் அவர்களை மீளக் கட்டியெழுப்புவதிலும் உதவி வருகின்றது.

அவற்றின்னூடே, நாட்டின் எல்லாப் பாகங்களையும் ஒன்றிணைத்து நலன்புரிச் செயற்பாடுகளைச் செய்ய 'வண் ஸ்டொப் சொப்'என்ற திட்டத்தினை பரிந்துரைத்துள்ளது. அவற்றின் மூலம் இலகுவாக நலிவுற்ற குடும்பங்களை அடையாளங்காணவும், தேவைக்கதிகமாக குறித்த ஒருவர் நலன்பெறுவதை கண்டறியவும் செயற்பாடுகளின் ஓட்டைகளை நிவர்த்திசெய்யவும் உறுதுணையாக இருக்கும்.

2. இரண்டாவதாக, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் முதலீடு செய்தல். தொற்றுநோய்களின் போது விவசாயம் ஒரு சீரான கேள்வியைக் கொண்டிருந்தது. இருப்பினும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான குறைந்த டிமான்ணட் (தேவை) சில துறைகளில் ஊதியத்தை பாதிக்கும் ஒன்றாகக் காணப்படுகின்றது.

இலங்கையின் விவசாய நிலத்தில் 80 சதவீதம் சிறு விவசாயிகளால் பயிரிடப்படுகிறது. அவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக, வியாபார ரீதியாக அதிக லாபம் ஈட்டக்கூடிய பயிர்களாக பல்வகைப்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றவும், சந்தைப்படுத்தல் மேம்படுத்தவும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்பவும் உலக வங்கி அவர்களுக்கு உதவுகிறது. தேவையான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதும், தேவையான நிதி மற்றும் தீர்வுகளை கொண்டுவருவதற்கு தனியார் துறைக்கு அடித்தளத்தை அமைப்பதும் உலக வங்கியின் பங்கு என்பதை அங்கீகரிப்பதற்காக பொதுத்துறை நிறுவனங்களின் மனநிலையை மாற்றுவதும் இந்த பணியில் அடங்கும்.

3. மூன்றாவது, மனிதவளத்தில்; முதலீடு செய்வதன் மூலம். மனித மூலதனம் இலங்கையின் உண்மையான செல்வமாகவும், திறன் அபிவிருத்திக்கான சிறந்த ஆதாரமாகவும் இருந்து வருகிறது. தொற்றுநோய்களின் போது பாடசாலைகளும்; பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டாலும், தொலைக்காட்சி மற்றும் வானொலி மற்றும் இணையவழி கற்றல் உள்ளிட்ட கற்றல் வழிமுறைகளினூடாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு ஆதரவளித்து ஊக்குவிப்பது..

எனவே இம் மூன்றுவளிகளினூடாக பின்னடைவில் இருந்து மீட்சிபெற பாரிய பங்களிப்பினை எமது நாட்டுக்கு அளித்து வருகின்றது. அந்த வகையில் பல தசாப்தங்களாக, உலக வங்கி சுகாதார மற்றும் கல்வியில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறது, மேலும் தொழிலாளர்கள் அதிக ஊதியம் பெறும் வேலைகளைப் பெறவும் மற்றும் வறுமையிலிருந்து விடுபட்டு வாழவும் அவர்களுக்கு உதவுவதுடன் உற்பத்தித்திறனை மேம்படுத்த இந்த இரண்டு பகுதிகளையும் அவர்கள் தொடர்ந்து ஆதரித்து வருகின்றார்கள்.

உலக வங்கி உதவியானது விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம் மற்றும் காலநிலை சார் நலத்திட்டங்கள், புதிய நீர்ப்பாசன விவசாய திட்டம் ஆகியவற்றுடன் மா பழத்தோட்டங்களுக்குள் ஒன்றிணைந்தவாறான பெரிய வெங்காயங்களை பயிர் செய்வதன் மூலமும், கிராமக் கொத்தணிகளில் முந்திரிகை வளர்ப்பதன் மூலமும், கைவிரிட்; கலப்பின மிளகாய்போன்ற பயிரின விதைகளை உருவாக்கி செய்கை பண்ணுவதனூடாகவும் விவசாயத்தை புதுமைப்படுத்த உதவுகின்றன. இலங்கையின் 11 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் காலநிலை-ஸ்மார்ட் விவசாயத்தில் திறன் மற்றும் அறிவு உட்பட ஆதரவைப் பெற்று வருகின்றனர்

கொவிட்-19 தொற்றுநோய் புதிய அச்சுறுத்தல் உலகளாவிய பாதிப்பைக் காட்டுகிறது. இலங்கையில், இது வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட காலநிலை அதிர்ச்சிகளுக்குள் தற்போதுள்ள பாதிப்புகளுக்கு மேலதிகமாக உள்ளது, இது ஏழைகளின் வாழ்க்கையை மீணடடும் மீண்டும் மோசமாக பாதிக்கிறது. ஆகவே வெள்ளப் பாதுகாப்பு, நிலச்சரிவு தடுப்பு மற்றும் வானிலை முன்னறிவிப்பு சேவைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட உலக வங்கி ஏற்கனவே அதிக நெகிழ்ச்சியான வாழ்வாதாரங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளமை பாராட்டத்தக்கது.

தொற்றுநோயிலிருந்து மீள்வதை உறுதி செய்வதற்கான கருவிகள் மற்றும் அணுகுமுறைகளை நாம் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்பதை கொவிட்-19 நமக்குக் கற்பிக்கிறது. பசுமை மீட்புக்கான வாய்ப்புகள் உள்ளன, நாட்டின் நிலங்கள், காடுகள், வனவிலங்குகள் மற்றும் பெருங்கடல்களில் ஏராளமான இயற்கை வளங்களின் நிலைபேற்றுத் தன்மையை மேம்படுத்துதல், தூய்மையான எரிசக்தி மற்றும் பசுமையான உள்கட்டமைப்புடன் முன்னேறவும், தொழில்நுட்பம் மற்றும் காப்பீடு போன்ற நிதி கருவிகளை இலங்கையை உருவாக்கவும் அபாயங்களைக் குறைக்கவும் அதிர்ச்சிகளைத் தாங்கவும் மிக முக்கியமானதாகும்.

ஆகவே உலக வங்கியின் உதவி பல பின்னடைந்த துறைகளை முன்னேற்றுவதற்கான எல்லா வகையிலுமான ஆதாரமாக இருக்கின்றது. இவர்களது முதலீட்டை முறிவடைந்த எமது பொருளாதார வாழ்வாதார நிலைமையை சீராக்க நன்கு பயன்படுத்த அரசியல் தளத்தில் மாத்திரமல்லாமல் நிருவாகத்தளத்திலும் நாம் பாடுபட்டு வேலைசெய்ய வேண்டும். அப்போது நிச்சயம் அவர்களது பேருதவி எம்மை இந்த இடரில் இருந்து மீட்க்கும் ஒரு ஆதாரமாக இருக்கும். உணர்ந்து செயற்படுவோம்.


0 comments:

Post a Comment