ADS 468x60

11 December 2020

மட்டக்களப்பின் மேய்சல் தரைப் பிரச்சினை பால் உற்பத்தியில் தன்னிறைவை தடைசெய்யுமா?

மட்டக்களப்பில் கால்நடை உற்பத்தியாளர்களின் பிரதான பிரச்சினைகளும் அதன் பின்னணியும்

இன்று நாட்டின் புதிய கொள்கையின் அடிப்படையில், 'சுயதன்னிறைவு' பற்றி அதிக அக்கறை செலுத்தப்பட்டுள்ளது. அதனால் இறக்குமதிகள் பல இறுக்கப்பட்டு உள்ழூர் உற்பத்தியின் முக்கியம் உணர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பல விவசாய மற்றும் கால்நடைப் பண்ணைப் பொருட்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மட்டக்களப்புக்கு இந்தக் கொள்கை அவசியமற்றதா என்ற கேள்வி பாராளுமன்றம் வரைக்கும் வலுப்பெற்றுள்ளது. காரணம் மேய்சல்தரையினை அத்துமீறி பயிர்செய்கைக்கு அடக்குமுறையின் கீழ் பயன்படுத்தத் துடிக்கும் சில வேறு மாவட்ட விவசாயிகள்;.

மட்டக்களப்பில் கால்நடை உற்பத்தியாளர்களின் பிரதான பிரச்சினை

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் கால்நடை வளர்ப்புக்கான உகந்த இடமாக காணப்படுவதற்குக் காரணம் பொருத்தமான காலநிலை அத்துடன் அங்கு இயற்கையாக அமையப்பெற்ற மேய்சல்தரைகள் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.

அந்தவகையில், மயில்ந்தமடு – மாதவணை பகுதி மட்டக்களப்பு – அம்பாறை எல்லையில் உள்ளது. கிழக்கு மாகாண மக்கள் தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக இதனை பல தலைமுறைகளாகப் பயன்படுத்திவருகின்றார்கள். சுமார் இரண்டு இலட்சம் வரையிலான கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக இது உள்ளது. கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பொருளாதாரத்தில் இதன் பங்கு முக்கியமானது.

இவ்வாறான பின்னணியில் மட்டக்களப்பில் 'மேய்ச்சல் தரை' என்றழைக்கப்படும் மயில்ந்தமடு – மாதவணை தமிழர் பிரதேசம் அண்மைக்காலத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பின்னணியில் வேறுமாவட்டத்தினரால்; ஆக்கிரமிக்கப்படுகின்றது என ஊடகங்கள் ஆதாரத்துடன் குற்றம் சுமத்தி வருகின்றது. இந்த ஆக்கிரமிப்பு தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டதால்தான்

இவற்றுக்கு மேலாக, இந்தப் பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாகவும், சிலர் அத்துமீறிக் குடியேறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களை அச்சமடைச் செய்திருக்கின்றது. அத்துடன் அவர்களுடைய பொருளாதாரத்தைக் கேள்விக்குறியாக்குகின்றது.

அரசாங்கத்தில், பிரதமர் மகிந்த ராஜபக்ச மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை நிறுத்த உள்ள நிலையில் இனி வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாடுகளை மேய்ப்பதற்கு மேலும் இடங்கள் தேவைப்படும் நிலையில் ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் காலம் காலமாக மேய்ச்சல் தரை நிலமாக பயன்படுத்தி வந்த காணிகளை விவசாயத்திற்கு வழங்கினால் பண்ணையாளர்கள் முழுமையாக பாதிக்கப்படுவர்.

எனவே அவர்கள் தங்களிடம் உள்ள மாடுகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு மாவட்டத்தின் பால் உற்பத்தி இல்லாமல் போவதுடன் அது அரசாங்கத்தின் சுய தொழில் திட்டங்களை வெகுவாக பாதிக்கும்.

எனவேதான் 'சுயதன்னிறைவு' என்ற கொள்கையை மையமாகக் கொண்டு நாட்டின் பால் உற்பத்தியை மேம்படுத்த பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்ற இந்த நிலையில்,; பால் உற்பத்தியில் பாரிய பங்களிப்பினை வழங்கிவரும் மட்டக்களப்பு மாவட்ட பூர்வீக மேய்சல்தரையை பயிர்செய்கைக்குப் பயன்படுத்தினால் அங்கு இதுவரை காலமும் மேய்சலுக்கு கொண்டு சென்ற மாடுகள் எங்கே சென்று மேய்வது? புhல் உற்பத்தியினை எவ்வாறு அதிகரிப்பது? ஏன பலரது மனதில் கேள்வி எழுந்தவண்ணமுள்ளது. 

இலங்கையின் பாலுக்கான மொத்த தேவை.

இலங்கையின் உள்ளூர் பால் உற்பத்தி, உள்நாட்டுத் தேவையின் அரைவாசிக்கும் குறைவாக உள்ளது. அது 2023 ஆம் ஆண்டில் தேசிய பால் தேவையின் 100 சதவீதம் படிப்படியாக பூர்த்தி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அடுத்த ஆண்டு இவ் உற்பத்தி இரட்டிப்பாக்கப்பட உள்ளது என்று அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். 

தற்போதைய உள்ளூர் பால் உற்பத்தி நாட்டின் தேவையின் 35 சதவீதத்தினை மாத்திரமே பூர்த்தி செய்ய போதுமானது என்றும் 2021 ஆம் ஆண்டில் இதை மேலும் 35 வீதம் அதிகரிக்கும் திட்டங்கள் நடந்து வருவதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது.

'இதன் பொருள், அடுத்த ஆண்டுக்குள், உள்ளூர் தேவையின் 70 வீதத்தினை நாங்கள் பூர்த்தி செய்ய முடியும். மீதமுள்ள 30 வீதத்தினை வழக்கம் போல் இறக்குமதி செய்யலாம்;, மேலும் வரும் ஆண்டுகளில் படிப்படியாக இறக்குமதியைக் குறைப்போம்,'என்று அரசாங்கம் கூறுகின்றது.

இலங்கையில் பசுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, பசுக்களை இறக்குமதி செய்வதற்கும், ஒரு பசுவின் சராசரி பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

விலங்குகளின் இனப்பெருக்கம், ஊட்டச்சத்து, சுகாதார நிலைமைகள் மற்றும் விலங்குகளின் கழிவு முகாமைத்துவம் மூலம் சூழல் நட்பு பண்ணைகளை உருவாக்குதல் ஆகியவை 'சௌபாக்யா' பால் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கிடையில், பால் அபிவிருத்தி மையத் திட்டம், செயற்கை கருவூட்டல் மையங்களை மேம்படுத்துதல், தேவையான உள்ளீடுகளை வழங்குதல் மற்றும் கால்நடை அலுவலகங்களை ஒருங்கிணைப்பு செய்வதன் மூலம் பால் பெறுமதிசேர்ப்புச் செயல்முறையை மேம்படுத்தி இந்த துறையில் தன்னிறைவை எட்டுவதனை திட்டமிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் 396.2 மில்லியன் லிட்டராக இருந்த பால் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்த பால் உற்பத்தி 19 வீதமாக அதிகரித்து அது 471.6 மில்லியன் லிட்டராக காணப்பட்டது என மத்திய வங்கி தரவு கூறுகிறது. 2017 இல் எருமைப்பால் உற்பத்தி 25.3 வீதமாக அதிகரித்திருந்தது இதனுடன் ஒப்பிடும்போது பசுப்பால் உற்பத்தி 17.7 வீதமாக அதிகரித்து அது 385.7 மில்லியன் லிட்டராக இருந்தது. எது எவ்வாறாக இருப்பினும் இன்னும் எமது உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்க வேண்டிய தேவை தரவு ரீதியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை முழுநாட்டுக்கும் பொருந்தும்.

முடிவுரை

எனவே மேலுள்ள நிலவரத்துடன் ஒப்பிடும்போது நாம் பால் உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அந்தத் தேவையை நிறைவேற்ற மேலும் உற்பத்தியை அதிகரிக்க நாட்டின் பண்ணையாளர்கள் அனைவரையும் சமமாக பாகுபாடின்றி உதவவேண்டுமே தவிர இனரீதியாக தட்டிக்கழிக்கக்கூடாது. அப்போதுதான் இந்த இலக்கினை இலகுவாக அடைந்துகொள்ள முடியும்.

உஷாத்துணை

0 comments:

Post a Comment