ADS 468x60

04 December 2020

அறிவியல் கொண்டு அளக்க முடியாது ஆன்மீகத்தை.


கடவுள் பக்தி மாத்திரமா நமது வாழ்வாதாரமும் இன்று நம்பிக்கை சம்மந்தப்பட்டது. ஆம் இன்று இந்த கொவிட்-19 பலரை நம்பிக்கை இழக்க வைத்திருக்கிறது. இதனால் கடவுளையே கைத்தடியாகப் பிடிக்க நாடியவர்களும் இருக்கின்றார்கள் கைவிட்ட கடவுளை வெறுத்து ஓடியவர்களும் இருக்கின்றார்கள். எது எவ்வாறிருப்பினும் இன்றய காலகட்டத்தில் ஆண்டவனை கூப்பிடுபவர்கள் அதிகமாயிட்டார்கள். அதேபோல் அறிவியலை அள்ளிப்பிடிப்போரும் கூடிப்போச்சி. காரணம் காலமாற்றம்தான். 

ஆகவே, முதலிலேயே ஒன்றைத் நான் தெளிவாக்கிவிடுகிறேன். நான் நாத்திகனும் அல்ல. பகுத்தறிவு பாசறை பக்கம் தலை, கால் வைத்துப் படுத்ததும் கிடையாது. படுக்கும் உத்தேசம் துளிக்கூட இல்லை. இதைக் கேட்டுவிட்டு 'கடவுளை நிந்திக்கிறாயா' என்று குடையாதீர்கள். மதத்தில் மண்வைக்கிறாயா என்று மிரட்டாதீர்கள். 'கடவுள் கண்ணை குத்தும்' என்று கவலை கொள்ளாதீர்கள்;. நம்மில் பலருக்கு பக்தி என்பது வேலைக்காரனைக் கூப்பிடும் அளவுக்கு வெரி; சிம்பிளாகப் போயிற்று.

நம்மில் பலர் இன்று, சாமி வந்து ஆடாத குறையாக சேர்ச்சுக்கு போய், மசூதியில் மன்றாடி, பன்சாலையில் பாதம் தொழுது, கோயிலில் குடியிருக்கும் ரேஞ்சிற்கு பலருக்கு பக்தி பரவசம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இந்தியாவில் மட்டும்; கடவுள் சம்பந்தமான பிசினஸ் மட்டும் வருடத்துக்கு 1.6 லட்சம் கோடிகள் ஷரூபாய் என்கிறது ஒரு புள்ளி விவரம். அதெல்லாம் சும்மா, அதை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு கூட அதிகமாக இருக்கும் என்கிறது இன்னொரு ஆய்வு. இதை கேட்டால் முருகனுக்கு ஆறு தலையும் சுற்றும். ஆச்சரியத்தில் சிவனின் நெற்றிக்கண் திறக்கும். சிலுவையிலிருக்கும் யேசுவின் கை திறந்த அவர் வாயை மூடும்!

ஏம்மிடையே எத்தனைபேர் வளிபாட்டிடங்களை வாழ்வில் மன அமைதிக்காய் ஷேபிக்கிறார்கள் சொல்லுங்கள்! அதிகம் பண அமைதிக்காகவே பாவிக்கிறார்கள். ஆக தேவையற்றவற்றை திணிக்காதீர்கள், அவையெல்லாம் மன அமைதி வேண்டுவோர்க்கு பிடிக்கும் எனக் கணிக்காதீர்கள். ஆடம்பரமும் அபிஷேகமும்தான் ஆண்டவனை அடையும் அட்ரஸ் என்று வறுமைக் கோட்டில் வாடும் மக்களின் வழிபாட்டுக்கு வஞ்சகம் செய்கிறார்கள் பலர். இவையெல்லாம் சொல்லப்பட்டவயா உருவாக்கப்பட்டவையா? தெரியவில்லை.

கடவுள் பக்தி என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. கண்ணை மூடி சில விஷயங்களை நம்புகிறோம். இதிகாசங்களை வணங்குகிறோம். கடவுளின் குறியீடுகளை கை கூப்பி கும்பிடுகிறோம். மதங்களும் கடவுள் நம்பிக்கையும் நம் அறிவுக்கு எட்டுவதை விட நம் இதயத்தைதான் அதிகம் எட்டுகிறது. நம் உணர்வுகளை சாஷ்டாங்கமாய் கட்டிப் போடுகிறது. கடவுளும் மதங்களும் ரேஷனல் சமாச்சாரங்கள் என்பதை விட இமோஷனல் மேட்டர் என்பதே உண்மை. ஆக அறிவியல் கொண்டு அளக்க முடியாது ஆன்மீகத்தை. ஏனெனில் அது ஆன்மா சம்பந்தப்பட்டது.


1 comments:

Unknown said...

Please check this video, this is a proof that Science can help ஆன்மீகம்
https://youtu.be/OD-iMZqZ4Bo

Post a Comment