ADS 468x60

24 July 2022

நாட்டை மீட்டெடுக்க நல்ல மூன்று முன்மொழிவுகள்

இன்று நம்மில் பலர் புத்திஜீவிகள், படித்தவர்கள், அரசியல்வாதிகள் எனச் சொல்லிக்கொண்டாலும் ஒழுங்கான தெழிவான எந்த நல்ல கருத்துக்களையும் இந்த நாட்டை மீட்டெடுக்க அவர்களால் முன்வைக்கமுடியாத ஒரு நிலைமைதனை காணலாம். உண்மையில் அந்த வகையில் இன்றய நெருக்கடிக்கு பல ஆக்கபூர்வமாக கருத்துக்களை தொகுத்து தர விரும்புகின்றேன். இக்கட்டுரையில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கான சிறந்த வழிகளை இங்கு பரிந்துரைகளாகத் தர விரும்புகின்றேன். 

அறிமுகம்

இலங்கைத் இதுவரை கண்டிராத மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளது. அது சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அதன் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, மேலும் நாட்டின் 22 மில்லியன் மக்கள் பல மணிநேர மின்வெட்டு மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற பிற அத்தியாவசியப் பொருட்களின் தீவிர பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள்.

பணவீக்கம் எப்போதும் இல்லாத அளவிற்கு 49.3 வீதம் உள்ளது, ஆகவே, 'இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு மனிதாபிமான அமைப்புக்களிடம் மட்டுமல்ல, சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குபவர்கள் மற்றும் நாட்டின் நட்பு நாடுகளிடமும் சேர்த்து உடனடி உலகளாவிய கவனம் தேவை' என்று ஐ.நா.ச அறிக்கையில் தெரிவித்தனர்.

வரலாறு காணாத அரசியல் கொந்தளிப்புடன் நாடு திணறிக்கொண்டிருக்கும் வேளையில், உயர்ந்த பணவீக்கம், பொருட்களின் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, முடங்கும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சரிவு காரணமாக நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் மோசமடைந்துள்ளன. ஆனால், பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும் ஒன்றுக்கொன்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு பின்னிப்பிணைந்துள்ளன. இந்த நெருக்கடிகளை உருவாக்கியவர்கள் வேறு யாருமல்ல தற்போதுள்ள அரசுகளின் தலைவர்களும், அரசு அதிகாரிகளும்தான்.

இந்த நாட்டில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடு இவ்வாறானதொரு நிலையை நோக்கி நகர்வதை பல புத்திஜீவிகள், வர்த்தக சமூகத்தினர் சுட்டிக்காட்டி அப்போதிருந்து, இலங்கை தனது வெளிநாட்டு கடனை செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும் மற்றும் தற்போதுள்ள வெளிநாட்டு நாணய கையிருப்பில் இருந்து மக்களுக்கு அத்தியாவசிய உணவு, மருந்து மற்றும் எரிபொருளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டக்கொண்டனர்;. ஆனால், அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கைகள் எல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காக விரையாமானது.

இந்த குறித்த பயனற்ற அதிகாரிகள் பின்பற்றிய நடைமுறையால் முன்னாள் நிதியமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த விதியை அவர்களே ஆக்கிக்கொண்டார்கள்; என்பது நாடறிந்த உண்மை. ஆகவே வர்த்தக சமூகம், பொருளியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சொன்னதைச் செய்திருந்தால், அவர்களுக்கு அந்த கதி வந்திருக்காது. இருந்த போதிலும், தற்போதைய நெருக்கடி சரியான முறையில் நிர்வகிக்கப்படாமல் இருளில் தத்தளித்துக் கொண்டிருப்பதை நாம் இன்னும் பார்க்கிறோம்.

மக்கள் கஷ;;டப்படுவதும் அதன் விரக்தியால் போராட்டங்களில் கலந்துகொள்ளுவதும்; வேலை இல்லாத காரணத்தினாலோ அல்லது வீட்டில் இருக்க முடியாமலோ அல்ல. தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிப்பதைக் கண்டு அவர்கள் வீதியில் இறங்குகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது உண்மையே. ஆனால் அந்த நெருக்கடிகள் சரியாக நிர்வகிக்கப்படுவதை நாம் இன்னும் பார்க்கவில்லை. 

நாட்டை மீட்டெடுக்க மூன்று முன்மெரிவுகள்

ஒரு பொருளியலாளன் என்ற வகையில், நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக நான் மூன்று முன்மொழிவுகளை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது. ஆனால் அதை உடனடியாக செய்ய முடியாது, எனவே ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். எமது இரண்டாவது வேண்டுகோள். மக்கள் விரும்பும் ஆட்சியைத் தேர்ந்தெடுக்க, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நடத்துவது. எங்களுடைய மூன்றாவது கோரிக்கை, பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை நாட்டில் சர்வகட்சி அரசாங்கமே ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான். அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் நாடு ஓரளவுக்கு அரசியல் ஸ்திரத்தன்மையுடன் இருக்கும் என்பதே எனது கணிப்பு.

தற்போதைய ஜனாதிபதி ஒரு புத்திஜீவி என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வெற்றிகரமான அரசியல் முகாமையாளராகவும் அங்கீகரிக்கப்பட்டவர். எனவே, அவர் சரியான முடிவை எடுக்க வேண்டும். அந்த முடிவுகளை எடுப்பதன் நோக்கம் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையாக இருக்க வேண்டும். அந்த முடிவுகள் பிரபலமாக இல்லாமல் இருக்கலாம்.

1948ஆம் ஆண்டு முதல் வரலாற்றில் காணப்படாத ஒரு தீவிபத்தில் நாடு உள்ளது. அந்த தீயை அணைக்; சரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான முடிவுகளில் இருந்து நாடு மீண்டு வருமாயின் அதன் பெருமை தற்போதைய ஜனாதிபதியையே சேரும்.

அதன் மூலம் அவரும் சரித்திரம் படைக்கலாம். மக்களாலும் மதிக்கப்படுபவார், போற்றப்படுபவார். எனவே அந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால், போராட்டக்காரர்கள் நிம்மதி அடைவார்கள். காரணம் இந்தக் கோரிக்கைகள் போராளிகளின் கோரிக்கைகளுடன் ஒத்துப்போவதால் தான்.

வெளிநாடுகளின் ஆதரவினைப் பெருக்கிக்கொள்ளல்

தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை இல்லை. அத்துடன் தற்போதைய பாராளுமன்றம் நாட்டின் உண்மையான கருத்தை பிரதிபலிக்கவும் இல்லை. எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால், தற்போதுள்ள நிலைமையை ஓரளவுக்கு தணிக்க முடியும். உலகின் பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த ஏழு நாடுகளின் அமைப்பான ஜி-7, மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி நிற்கின்றது.

ஆவ்வாறான ஒரு நாளில் இலங்கைக்கு உதவுவோம் என்று அந்த நாடுகள் கூறுகின்றன. தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க டொலர்கள் அவசியம். அதற்கு வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் நாடுகளின் ஆதரவைப் பெற வேண்டும். சர்வதேச நாணய நிதியம் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனாலும் அவர்கள் சொல்வதற்காக சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது.

உதாரணமாக, தற்போது நாட்டுக்கும் மக்களுக்கும் சுமையாக இருக்கும் எயார் லங்கா, பெற்றோலியக்; கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை போன்ற அரச வர்த்தக நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் அல்லது தனியார்மயமாக்கப்பட வேண்டும், இது நிதியீட்டம் போதாது எனக் கூறுவதால் அல்ல. தேவைக்கதிமான வினைத்திறனற்ற அரச தொழில்களால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து, மக்கள் அவதிப்படுவதே இதற்கு காரணம்.

சர்வதேச நாணயநிதியத்தின் வேண்டுதல்

சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு போதுமான டொலர்களை வழங்கவில்லை. ஆனால் அவர்கள் கூறுவதற்கிணங்க நாம் சீர்திருத்தங்களை செய்தால் அவர்கள் உதவ முன்வருவர், அதனால் மற்ற அமைப்புகளும், உலக நாடுகளும் நிச்சயம் நமக்கு உதவ முன்வரும். இதற்காக லஞ்சம், ஊழல், வீண் செலவுகளை குறைக்க வேண்டும், தேவையற்ற மற்றும் வீணான பொதுச் செலவுகளை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறுவதால் மாத்திரம் அல்ல. ஏனெனில் அது நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் அழிக்கிறது அதனால்.

வாங்கிய கடன்கள் பொதுப் பயன்பாட்டுக்குச் செல்ல வேண்டும், தனியார்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்லக்கூடாது என்று சர்வதேச நாணய நிதியம் சொல்வதால் அல்ல. ஏனெனில் அவ்வாறு செய்வது நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் சர்வதேச சமூகம், நிதி நிறுவனங்கள் மற்றும் நாடுகள் எதிர்பார்க்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தங்களை தற்போதைய ஜனாதிபதியால் மட்டுமே கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஏனென்றால் அவர் நிறைவேற்று ஜனாதிபதி. குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டைப் பற்றிச் சிந்தித்து சரியான முடிவுகளை எடுத்தால், அவரும் நாட்டில் முன்னேறலாம். தற்போதைய ஜனாதிபதியின் மாமாவான ஜே.ஆர். திரு.ஜெயவர்தன அவர்கள் செல்வாக்கற்றவர்களாக இருந்தாலும் சரியான முடிவுகளை எடுத்து நாட்டை அபிவிருத்தி செய்ய இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஏற்படுத்தினார்.

தற்போதய ஜனாதிபதிக்குள்ள சந்தர்பங்கள்

ஆனால், தலைவர் பதவியைப் பெற்ற சிலர் இந்த நாட்டிற்கு செய்ய வேண்டியதைச் செய்யாமல், தமக்கான மற்றும் கட்சியின் அதிகாரத்தை வளர்த்துக் கொள்ளவே அதனைப் பயன்படுத்தினர்;. அந்த கேவலமான வரலாற்றை மாற்றும் அறிவும், புத்திசாலித்தனமும், திறமையும் தற்போதைய ஜனாதிபதிக்கு உண்டு என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அந்த அறிவு, புத்திசாலித்தனம் மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நெகிழ்வாக வேலை செய்வதற்குத் தேவையான பணிவு தற்போதைய ஜனாதிபதியிடம் இருப்பதாக பலராலும் நம்பப்படுகிறது.

ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின்; குரலுக்கு செவிசாய்த்து, ஏற்றுக்கொள்ளக்கூடிய, நடைமுறைக்கு ஏற்றவாறு அவர்கள் கூறும் விடயங்களை நடைமுறைப்படுத்தினால் தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது உறுதி. அப்படிச் செய்தாலும்; நாம் அரசியல் ஸ்திரமாக இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. தேசிய மற்றும் சர்வதேச ஆதரவு கிடைக்காம் போய்விடும் என்பதுதான் உண்மை.

அரசியல் ஸ்திரத்தன்மையை உண்டுபண்ணல்

அரசியல் ஸ்திரத்தன்மையை அடைந்த பின்னர், பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அங்கு மக்களுக்கு அத்தியாவசிய உணவு, மருந்து, எரிபொருள்; வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். தற்போது அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவர்கள் பௌதீக மற்றும் நிதி வளங்களைக் கொண்டவர்கள் மாத்திரமே. ஆனால், நாட்டின் ஏழை, எளிய மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

அத்தியாவசிய உணவு, மருந்து, எரிபொருள் ஆகியவற்றைத் தேவையான அளவுக்குப் பெற முடியாமல் மக்கள் வீதியில் இறங்கி மோதுகிறார்கள். எனவே, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முறையான, தெளிவான மற்றும் திட்டமிடப்பட்ட பணிக்கான உத்தரவு அமுல்படுத்தப்பட வேண்டும். அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமின்றி தனியார் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமும் இவை எளிதாக முடியும். அந்த பேச்சுக்களுக்குப் பிறகு எடுக்கப்படும் முடிவுகளை முறையாகச் செயல்படுத்துவது அரசு அதிகாரிகளின் பொறுப்பு.

சர்வதேசத்திடம் நம்பிக்கையினை ஏற்படுத்தல்

பொருளாதாரக் கொள்கைகளில் பெரிய மாற்றங்களைச் செய்வதும் நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு அவசியமான நிபந்தனையாகும். இலங்கைக்கு கடன் மற்றும் உதவிகளை வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் இடையில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அந்த நபர்கள், நாடுகள் மற்றும் நிறுவனங்களால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் கடன்கள் சில தனிநபர்களின் தனிப்பட்ட கணக்குகளில் வந்துசேர்ந்துவிடும் என்ற சந்தேகம்; இன்றுள்ள சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையாக உள்ளது. நாட்டின் நலனுக்காகப் பெறப்படும் கடன்களும் உதவிகளும் அரசியல பலமுடைய ஒரு குழுவினரின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவது இன்று சர்வதேச அங்கீகாரத்தினை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதனால் வெளிப்படைத் தன்மையைக் கையாள்வதன் மூலம் சர்வதேச சமூகத்தில் நாட்டின் மோசமான மற்றும் பாதகமான பிம்பத்தை இழக்க நேரிடும். அதற்கான புதிய கொள்கைகள் தயாரிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். மேலும், சட்டம் அனைவருக்கும் சமமாக நல்லெண்ணத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும்.

வரிக்கொள்கை சீர்திருத்தம்

வரிக் கொள்கை திருத்தமும் அவசியமான நடவடிக்கையாகும். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய பதவியேற்றவுடன் பெருநிறுவன வரிகளை குறைத்தார். அந்த நேரத்தில் வர்த்தக சமூகத்தில் யாரும் இப்படி வரி குறைப்பு கேட்டிருக்கவில்லை. எதிர்பார்க்கவும் இல்;லை நிறுவன வரி மட்டுமல்லஇ வற் வரியும் 15 வீதத்திலிருந்து லிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டது. அவர்கள் சம்பாதித்தபடி ஏராளமான மக்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தனர். இது எல்லாம் தவறான கொள்கை. அந்த தவறான வரிக் கொள்கையால் அரசுக்கு ஆண்டுக்கு 500 பில்லியன் ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இழந்த வரிகளை திரும்ப பெற தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அரசாங்கத்தின் வருமானத்தைக் குறைத்து ஆட்சியமைக்க முடியாது. எனவே, அரசின் வருவாயை அதிகரிக்க தேவையான வரிக் கொள்கைகள் மற்றும் வரி விகிதங்கள் திருத்தப்பட வேண்டும்.

வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தல்

வெளிநாட்டு முதலீட்டினால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. கடந்த காலங்களில் அதற்கான ஏற்பாட்டுக் குழு செயற்பட்டது. ஆனால் இப்போது அதன் முதுகெலும்பு உடைந்துவிட்டது. முதலீட்டு சபையிடம்; ஒப்புதல் பெற்ற பிறகும், ஏனைய இடங்களிலிருந்து அனுமதி பெற பல மாதங்கள், ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இனி வரிச் சலுகை தேவையில்லை. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புதான் தேவை. ஆனால் இப்போது பல அரசு நிறுவனங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. வேண்டுமென்றே அவர்களை தாமதப்படுத்துகிறது. இந்த தாமதங்கள், இழுத்தடி;புகளே உலக வங்கியின் மதிப்பீட்டின்படி இலங்கை வர்த்தகம் செய்வதற்கு எளிதான நாடு அல்ல என மதிப்பிட்பட்டுள்ளமை;கான காரணமாகும்.

உலக வங்கியால் தொகுக்கப்பட்ட வர்தகம் செய்வதற்கான எளிதான குறியீட்டில். (எளிதாக தொழில் செய்யக்கூடிய சுட்டெண்) இலங்கை தற்போது 99வது இடத்தில் உள்ளது. இது 190 நாடுகளில் ஒன்றாகும். 2012ல் 83வது இடத்தில் இருந்தோம். இலங்கையில் வர்த்தகம் செய்வது மேலும் மேலும் கடினமாகி வருவதை இது வெளிப்படுத்துகிறது. சர்வதேச சமூகத்தில் இலங்கை தொடர்பில் இவ்வாறான கருத்து நிலவும் போது வெளிநாட்டவர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வரமாட்டார்கள். எனவே, முதலீட்டைத் தடுக்கும் தற்போதைய சுங்கம் மற்றும் தொழிலாளர், வர்pகள் தொடர்பான சட்டங்கள் போன்றவை திருத்தப்பட வேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதில் இலங்கையை விட வியட்நாம் இப்போது முன்னணியில் உள்ளது. வியட்நாம் 1995 இலேயே ஆசிய சுதந்திர வர்த்தகப் பகுதியில் இணைந்தது. 2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வியட்நாம், 2007 இல் உலக வர்த்தக அமைப்பில் இணைந்தது. ஆனால் இலங்கை ஜனவரி 1, 1995 இல் உலக வர்த்தக அமைப்பில் அங்கத்துவம் பெற்றது. 

இன்று வியட்நாம் சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. 1991 இல், வியட்நாமில் அன்னிய நேரடி முதலீடு 0.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் 2021ல் அது 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ந்தது. 1991ஆம் ஆண்டு இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு 0.05 பில்லியன் அமெரிக்க டொலர்கள். 2021ல் இது 0.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரு கம்யூனிச நாடாக இருந்த வியட்நாமுடன் ஒப்பிடும்போது, வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதில் இலங்கை எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளது என்பதை தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

ஏற்றுமதி வருவாயை அதிகரித்தல்

ஏற்றுமதி வருமானத்தைப் பொறுத்தவரையில் இலங்கை வியட்நாமைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 1991 இல் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. அது 2021ல் இது 15 பில்லியன் டொலராக இருந்தது. 1991 இல், வியட்நாமின் ஏற்றுமதி வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் 2021 ஆம் ஆண்டில், வியட்நாம் அதை 332 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க முடிந்திருக்கின்றது.

அதன்படி, தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து அல்ல, வியட்நாமில் இருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் ஏராளம். அந்த படிப்பினைகளின் அடிப்படையில் முதலீட்டு சபையினை மறுசீரமைப்பது காலத்தின் தேவை. பெரும்பாலான நேரங்களில் இற்றை வர்த்தக சமுகத்துடன் கலந்தாலோசித்து பரிந்துரைகளைப் பெறுகின்றார்கள், ஆனால் அவற்றைச் செயல்படுத்துவது மிகக் குறைவு. எனவே இந்த பெறுமதியான முன்மொழிவுகளை செயல்படுத்த பணம் செலவாகாது. கொள்கை முடிவு, சுற்றறிக்கைகள் மற்றும் சட்டத் திருத்தங்கள் மூலம் அவற்றைச் செய்ய முடியும்.

பொதுப் போக்குவரத்தினை விரிவுபடுத்தல்

பொது போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவது மற்றொரு அவசரத் தேவை. இன்று, பொதுப் போக்குவரத்து சேவையில் நம்பிக்கையில்லாமல் பலர் தனியார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே, நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்ய நிறைய டொலர்கள் தேவைப்படுகிறது. நாட்டிற்கு வெளியே செல்லும் டொலர்களின் அளவைக் குறைப்பதற்கான ஒரு வழி பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதாகும். அங்கு ரெயில்வே சேவையை மேம்படுத்த வேண்டும். ஆனால் நாம் செய்யக்கூடாதவற்றைச் செய்கிறோம்.

ஜப்பானிய கடனில் உயர்த்தப்பட இருந்த இலகு ரெயில் திட்டம் தவறான ஆலோசனையால் ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக, எங்களுக்கு ஆதரவாக இருந்த எங்கள் நீண்டகால நண்பரான ஜப்பானுக்கும் கோபம் வந்தது. இதனால் நாட்டுக்கு ஏகப்பட்ட கேடு ஏற்பட்டது. சமூக ஊடகங்களின் பலம் காரணமாக, உலகில் இலங்கையின் இடத்தைப் பற்றி எமது பெரும்பாலான இளைஞர்கள் நன்கு அறிந்துள்ளனர். எனவே, அந்த இளைஞர்களை நாம் மிகவும் கவனமாகவும் சரியான மதிப்பீட்டுடனும் கையாள வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆகவே இவற்றை கருத்தில் கொள்ளுவார்களானால் ஏனைய நாடுகளை உதாரணங் காட்டுவதுபோல இலங்கையும் அந்த பட்டியலில் இடம்பிடித்து ஒரு நல்ல மக்கள் தொகயைக் கொண்ட நாடாக மிழிரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை


1 comments:

sarva said...

சரியான தெளிவும் விழிப்பும் ஆய்வாளரின் கவனத்தில் வெளிப்பாடாக வந்திருக்கின்றது. மக்கள் தெளிவு பெற வேண்டும் மற்றைய மக்களையும் தெளிவுபடுத்த வேண்டும் என்பது தமிழ் பேசும் மக்களின் கடமையாகிறது. கால சந்தர்ப்பம் மக்களே பேசுங்கள் தெளிவு பெறுங்கள் செயற்பாடுகளில் முன்னேறுங்கள்

Post a Comment