ADS 468x60

18 March 2025

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இடம் மற்றும் அதன் பெயர் தரவரிசையில் காணவே காணம்..

மட்டக்களப்பு பகுதியின் கல்வி வளர்ச்சியில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகம், ஏன் சர்வதேச தரவரிசையில் இடம்பிடிக்க முடியவில்லை? இது தகுதியான விரிவுரையாளர்களின் பற்றாக்குறை, திறமையான நிர்வாகமின்மை, அரசியல் நியமனங்கள், சர்வதேச இணைப்புகளின் ககுறைபாடு, ஆராய்ச்சி பங்களிப்பு குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம்.

இலங்கையில் உயர்கல்வி தரம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கிழக்குப் பல்கலைக்கழகம் உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசையில் (Global University Rankings) QS World University Rankings, Times Higher Education (THE) Rankings, AD Scientific Index போன்ற எந்தப் பட்டியலிலும் சிறந்த இடத்தைப் பிடிக்காதது ஆழ்ந்த கவலையளிக்கிறது. நாம் கற்ற பல்கலைக்கழகம், பாடசாலை, வாழ்ந்துகொண்டிருக்கும் இடம் சார்ந்து முன்னேற்றம் கிடையாவிடின் அதில் கோபம் கொள்பவன் உன்மையான அந்த மக்களின் தோழன், அந்த வகையறாவுக்கும் அடங்கும் ஒருவன் என்றவகையில் நான் இதில் கவலைகொள்ளவேண்டியிருக்கின்றது.

நான் இங்கு கல்வி கற்றவன் என்பதால், இதற்கான காரணங்களை அலசுவதும், அதற்குரிய மாற்றங்களை பரிந்துரைப்பதும் மிகுந்த அக்கறையை ஏற்படுத்துகிறது.

உபவேந்தர் தெரிவும், தரமற்ற நிர்வாகமும்: பல்கலைக்கழக தரவரிசையில் தாக்கம்

கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு உயர்நிலை கல்வி நிறுவனமாகும். ஆனால், இது உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான பல்கலைக்கழக தரவரிசைகளில் (University Rankings) இடம்பெறாததற்கு முக்கிய காரணம் நிர்வாகமும், இதனை வழிநடத்தும் உபவேந்தரின் தலைமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஒரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தரமான கல்வி, ஆராய்ச்சி மேம்பாடு, சர்வதேச இணைப்புகள், தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். ஆனால், உபவேந்தர் தெரிவுப் போட்டி ஒரு தனிப்பட்ட அதிகாரப் போட்டியாகவும், பல்வேறு அரசியல் உட்கோள்களால் பாதிக்கப்படும் ஒரு நிலையாகவும் மாறியுள்ளது.

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் உபவேந்தர் தெரிவு மிகக் கடுமையான மாணவர் கருத்து, விரிவுரையாளர்களின் ஒப்புதல், சர்வதேச கல்வி நிபுணர்களின் மதிப்பீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும். ஆனால், இலங்கையில், குறிப்பாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இது மிகப்பெரிய அரசியல் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.

சில பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள்கூட திட்டமிட்டு மாற்றப்படுவதும், திட்டமிட்டு நியமிக்கப்படுவதும் இந்தப் பல்கலைக்கழகத்தின் எதிர்காலத்தை பட்டியலில் மாத்திரமல்ல இந்த மாவட்டத்தில் இருந்தே விரட்டியடிக்கப்படுமோ என்ற அச்சம் தொற்றியுள்ளது. எமக்கான மொழி, கலாசாரம், திறன் என்பனவற்றை இறுகப் பற்றிக்கொண்டு அதனை வளர்த்தெடுக்கப் பாவிக்கப்படும் ஒரு கல்வி நிறுவனமாக கொண்டுசெல்ல தவறியே வருவது மிகக் கவலையளிக்கின்றது, அதுபோல சமுக இடைவெளியும் அதிகரித்துக்காணப்படுகின்றது. என்னைப் பொறுத்தளவில் இக்குறைபாடுகள் ஒரு சிலரது காலப்பகுதியில் நன்கு நிவர்த்திக்கப்பட்டு அது சரிசெய்யப்பட்டது, முன்னைநாள் உபவேந்தர் பேராசிரியர் கிட்ணன் கோவிந்தராஜ் அவர்களின் காலத்தை உதாரணமாகச் சொல்லலாம். 

கல்வியின் தரம் குறைவதற்கான காரணங்கள்

1. சர்வதேச விரிவுரையாளர்களின் பற்றாக்குறை

உலகளாவிய தரவரிசையில் முதலிடம் பெறும் பல்கலைக்கழகங்களில் சர்வதேச விரிவுரையாளர்கள் 30% முதல் 50% வரை உள்ளனர். ஆனால், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான விரிவுரையாளர்கள் உள்ளூரிலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள். சர்வதேச பேராசிரியர்கள், மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் அனுபவம் பெற்ற விரிவுரையாளர்கள் அதிகம் அமையவில்லை.

அவ்வாறு துறைதேர்ந்தவர்கள் இங்கு அழைக்கப்படவில்லை என்பதே நாம் சுட்டிக்காட்டவேண்டும். நான் நன்கவதானித்ததன்படி பல சர்வதே கலந்துரையாடல்கள் என்ற பேரில் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வுகள், forums, மாநாடுகள் இந்தியாவின் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனை அவதானித்திருக்கின்றோம், இதனை சர்வதேச என்ற நாமத்துடன் அழைப்பது எந்தவகையில் பொருந்தும்? அத்துடன் பல விரிவுரையாளர்கள் இந்தியாவில் எங்கோ ஒரு தமிழ் பல்கலைகழகத்தில் தமது மேற்படிப்பை முடித்து மாணவர்களுக்கு எதனை சர்வதேச அனுபவ, அறிவுப் பகிர்வாக கொண்டு சேர்க்க முடியும் என்பது எனது கேள்வி.

2. ஆராய்ச்சி பங்களிப்பு மிகக் குறைவு

ஒரு பல்கலைக்கழகம் உயர்நிலையான தரவரிசையைப் பெற வேண்டும் என்றால், அந்த பல்கலைக்கழகத்திலிருந்து வெளியான ஆராய்ச்சிப் பணி மிக அதிகமான அளவில் இருக்க வேண்டும். Google Scholar, Scopus, Web of Science போன்ற சர்வதேச ஆய்வு தரவுத்தளங்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து பங்களிப்புகள் மிகக் குறைவாக உள்ளன.

ஆரம்பத்தில் குறைந்தது விவசாய ஆராய்சியாவது இருந்தது சில பல கண்டுபிடிப்புக்களைச் செய்திருந்தனர் ஆனால் இன்று எத்தனையோ பிரச்சனைகள் இங்கு காணப்பட்டாலும் பல பேராசிரியர்களைக் கொண்டு நிறைத்திருக்கும் இப்பல்கலைக்கழகத்தினால் இச்சமுகம் உய்வுற அதன் அபிவிருத்திப்பங்காளராக தன்னைக் காட்டிக்கொண்ட எந்த இடத்தையும் பெரிதாகப் பதிவுசெய்யவில்லை. தனிப்பட்ட திட்ட வேலைகளுக்கு ஆலோசகர்களாகச் செல்லுவதற்கு இந்தப் பல்கலைக்கழக விரிவுரையாளரை பயன்படுத்துவது எவ்வளவு சிறுமைத்தனமாக இருக்கின்றது.

எனவே ஆயிரக்கணக்கான மாணவர் படையைக்கொண்ட வளமார்ந்த நிறுவகம் அதன் முன்னேற்றத்தில் மாணவர்களை பயன்படுத்தி ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்த முடியாமை எதன் இயலாமையைக் காட்டுகின்றது?

3. சர்வதேச மாணவர் சேர்க்கை இல்லை

உலகளாவிய தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்கள் அதிகமாக சேர்க்கப்படுகிறார்கள். ஆனால், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் உள்ளூர் மாணவர்களே. இதனால், சர்வதேச மாணவர் தொடர்புகள், பரிமாற்ற திட்டங்கள் (Exchange Programs), மற்றும் பல்கலைக்கழக இடையேயான ஒத்துழைப்புகள் (International Collaborations) இல்லை.

4. தொழில்துறை மற்றும் தனியார் நிறுவனம் தொடர்பான அபாயங்கள்

பல்கலைக்கழகங்களை ஒரு உயர்தர நிறுவனமாக உருவாக்க தொழில்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். இது ஆராய்ச்சி நிதியுதவிகள் (Research Grants), தொழில்நுட்ப வளர்ச்சி, பணி வாய்ப்புகள் போன்றவற்றை அதிகரிக்க உதவும். இலங்கையின் பல்கலைக்கழகங்களில் தனியார் மற்றும் தொழில்துறையின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.

மாற்றத்திற்கான பரிந்துரைகள்

1. உபவேந்தர் தெரிவின் முறையை மாற்றுதல்

உபவேந்தர் தேர்வு முறையை அரசியல்மயமாகாமல், கல்வியாளர்களின் தேர்வுகளின் அடிப்படையில் நடத்த வேண்டும். திறமையான நிர்வாகத்திறன் கொண்ட ஒரு உபவேந்தர் மற்றும் நிர்வாக குழுவே ஒரு பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்லும்.

2. சர்வதேச விரிவுரையாளர்களை இணைத்தல்

கழகத்திற்கு வெளிநாடுகளில் பணியாற்றிய விரிவுரையாளர்களை இணைத்து, புதிய கல்வி நுட்பங்களை கொண்டு வர வேண்டும். இப்போதைக்கு, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு விரிவுரையாளர்கள் குறைவாக உள்ளனர்.

3. ஆராய்ச்சி நிதியுதவிகளை அதிகரித்தல்

பல்கலைக்கழகத்தின் பெயர் உயர்வதற்கு, ஆராய்ச்சி பங்களிப்புகள் மிக முக்கியம். தனியார் மற்றும் சர்வதேச நிதியுதவிகளை (Research Grants) அதிகரித்து, விரிவுரையாளர்களுக்கு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான மானியங்களை (Research Allowances) அதிகரிக்க வேண்டும்.

4. சர்வதேச மாணவர் சேர்க்கையை அதிகரித்தல்

கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களை ஈர்க்கவும், பல்கலைக்கழக இடையேயான ஒத்துழைப்புகளை (University Partnerships) அதிகரிக்கவும் வேண்டும். பன்னாட்டு மாணவர்களுக்கு நவீன வசதிகளை வழங்கி, அவர்களை சேர்க்க ஊக்குவிக்க வேண்டும்.

5. தொழில்துறையுடன் இணைந்து கல்வியை மேம்படுத்துதல்

பல்கலைக்கழகங்களை தொழில்துறையுடன் இணைத்து (Industry Collaboration), மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். Google, Microsoft, IBM போன்ற நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, மாணவர்களுக்கு உலகளாவிய தொழில்நுட்ப அனுபவங்களை வழங்க வேண்டும்.

முடிவுரை

ஒரு முன்னாள் மாணவனாக, கிழக்குப் பல்கலைக்கழகம் எந்த தரவரிசையிலும் இடம்பிடிக்காதது மிகுந்த வேதனை தருகிறது. இது நிர்வாகத்திற்கும், உபவேந்தர் தெரிவு முறைக்கும், குறைந்த ஆராய்ச்சி பங்களிப்புகளுக்கும், சர்வதேச இணைப்புகளின் பற்றாக்குறைக்கும் காரணமாக இருக்கலாம்.

இது சரியாக செய்யப்படாத பட்சத்தில், இலங்கையின் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருக்க நேரிடும். சரியான நிர்வாக மாற்றங்கள், ஆராய்ச்சி மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை மேற்கொள்ளப்படுவதாக இருந்தால், கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கையின் உயர்ந்த கல்வி நிறுவனமாக வளர முடியும்.

இப்போது, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது மாணவர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் கல்வியாளர்கள் என்பதையே அனைவரும் உணரவேண்டும். கல்வியில் உயர்ந்த நிலையை அடைய, உபவேந்தர் மட்டும் மாற்றம் கொண்டால் போதாது, முழுவதுமாக கல்வி கட்டமைப்பு மாறவேண்டும்.

மேலதிக வாசிப்புக்கு https://vellisaram.blogspot.com/2025/03/blog-post_18.html

 

0 comments:

Post a Comment