நினைத்ததெல்லாம் நடப்பதில்லை அமைதியாய் இரு
அந்த அமைதிக்குள்ளே அர்தம் வைத்து செயலை செய்திடு
காலம்வரும் காத்திருந்து கனவை வென்றிடு
காலம்வரும் காத்திருந்து கனவை வென்றிடு அந்த
கனவுக்குள்ளே உயிரை வைத்து ஊக்கமாய் இரு
பழையதெல்லாம் நினைவை விட்டு போகட்டும் விடு அந்தப்
பாதையெல்லாம் மாற்றி வேறு பாதையில் செல்லு
இடையினிலே இடர்கள் வரும் எழுந்து நில்லடா நீயும்
ஏணிமேலே கால்கள் வைத்து கடந்து செல்லடா
திறனையெல்லாம் கையில் எடு வேலை பாரடா
தீவிரமாய் நீயிருந்தால் பகைமை யாரடா
சின்னச் சின்ன முயற்சிகூட உன்னை உயர்திடும் -அங்கு
சேர்ந்து நீயும் பயணம் செய்தல் உறுதி கூடிடும்
பயத்தினை நீ பனை மரத்தில் கட்டி வையடா- அந்த
பாதையிலே உன் பலத்தில் நடந்து செல்லடா
இனி உனக்குக் கவலை இல்லை இன்பமாய் இரு
ஏறு முகம் வாழ்வில்வரும் ஏற்றுக் கொள்ளடா
நினைத்ததெல்லாம் நடப்பதில்லை அமைதியாய் இரு
அந்த அமைதிக்குள்ளே அர்தம் வைத்து செயலை செய்திடு
காலம்வரும் காத்திருந்து கனவை வென்றிடு
காலம்வரும் காத்திருந்து கனவை வென்றிடு அந்த
கனவுக்குள்ளே உயிரை வைத்து ஊக்கமாய் இரு
0 comments:
Post a Comment