ஆனால் இன்று உலகில் சீனா தேசிய வறுமைக் கோட்டின் மூலம் பூஜ்ஜிய வறுமையை அடைந்ததன் மூலம் அதன் கடுமையான வறுமையை துல்லியமாக ஒழிக்க முடிந்தது. உண்மையில், சீனாவின் தேசிய வறுமைக் கோடு உலக வங்கியின் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் சர்வதேச வறுமைக் கோட்டின் ஒரு நாளைக்கு 1.90 டொலரைவிட அதிகமாக உள்ளது. உலக வங்கியின் நடுத்தர வருமானம் கொண்ட வறுமைக் கோடு ஒரு நாளைக்கு 3.20 டொலர் என்று நாம் பயன்படுத்தினால், இன்னும் 10வீதம் சீன மக்கள் ஏழைகளாகக் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
26 February 2022
இலங்கை வறுமையை இல்லாது செய்வதில் வெற்றிபெற்றுள்ளதா?
இந்த கட்டுரையில் ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ள சீனாவின் அணுகுமுறை எவ்வாறு தனது நாட்டின் கணிசமான வறுமை நிலையை இல்லாது செய்ய உதவியது என்பதனையும் இலங்கை கைக்கொள்ளும் நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு எவ்வாறு அதன் அடைவை எட்ட தடைக்கல்லாக இருக்கின்றது என்பன ஆராயப்பட்டுள்ளது. ஆசியாவில் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், சீனா ஒரு ஏழை நாடாக இருந்தது. தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் இலங்கையை விட அது ஒரு ஏழ்மையானது, அதே வேளையில் அந்த நாடு நீண்டகால வறுமை மற்றும் பட்டினியால் எதிர்கொள்ளும் மில்லியன் கணக்கான ஏழைகளைக் கொண்டிருந்தது.
19 February 2022
சூடுபோடும் இராப்பொழுதில்!
முள்ளுப் புதரருகே
முருங்கைக் கம்படித்து
நெல்லுப் பதரை அள்ளி
நெருப்பை மூட்டியாங்கே
நெழிந்த பானையிலே
நிறைய நீரெடுத்து
தேயிலைச் சாயமிட்டு
தேத்தண்ணி குடித்த ருசி
சூடுபோடும் இராப்பொழுதில்
கூடவே இரந்தோர் அறிவர்!
S.Thanigaseelan
14 February 2022
06 February 2022
திறனுள்ள இலங்கையைக் கட்டியெழுப்புவதே எதிர்கால வளர்சிக்கான முதற்தேவை.
இன்று நாட்டின் மீட்சிக்கு பல வழிகளை பலர் பரிந்துரைத்தாலும், திறனுள்ள இளைஞர்களின் தேவை அதிகமாக எதிர்பார்கப்படுகின்றது. நமது நாட்டின் முக்கிய துறைகளைக் கட்டியெழுப்ப திறனுள்ள தொழிற்படை (skilled labour forces) முக்கியமான கூறாக இருக்கின்றது. அதனை உணர்ந்து காலாகாலமாக நாட்டின் திறன் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டுரையில் திறன் அபிவிருத்தியின் தேவை, அதன் பரிநாம வளர்சி, நோக்கம் என்பன விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இன்று இந்த நாட்டின் மக்கள் எவற்றையெல்லாம் விருப்பம் இல்லாமல் வெறுக்கின்றனர்:
மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆதாரம் இன்றி அலுப்பில் இருக்கின்றனர். அரசாங்கமும் எதுவும் செய்யமுடியாத நிலையில் இயன்றளவு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையினை இயன்றளவு முன்னெடுத்து வருகின்றன. இருப்பினும் அநேகமான மக்கள் இந்த நாட்டில் நடந்தேறிவரும் பல வேண்டத்தகாத விடயங்களை வெறுக்கின்றனர். அந்தவகையில் இன்று இந்த நாட்டின் மக்கள் எவற்றையெல்லாம் விருப்பம்; இல்லாமல் வெறுக்கின்றனர் என கீழே பட்டியலிட்டுள்ளேன்.:
• நாட்டை சீரழிக்கும் கொரோணா தொற்றுநோய் அதற்கு பொறுப்பானவர்களின் விவேகமற்ற செயல்களால் மோசமடையும் பாதிப்பு,
• மற்றும் பால் மா, அரிசி, சீனி, மருந்துப் பொருட்கள், மண்ணெண்ணெய் போன்றவற்றை சேகரிக்க அல்லது பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டியுள்ளமை,
05 February 2022
இது பரிசோதனைக்கான தருணம் அல்ல. சரியான மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம்!
நாம் இந்த அரசாங்கம் அனைவரும் ஒரு தீர்க்கமான முடிவினை இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள எடுக்கவேண்டிய தருணம் இது. கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்டு, நமது பொருளாதாரப் பிரச்சினைகள் தீவிரமடைந்து, நாடு பொருளாதார ரீதியாக பின்னடைந்துவிட்டது. நமது நாடு மாத்திரமல்ல கோவிட் காரணமாக உலகப் பொருளாதாரமே பின்னடைவைச் சந்தித்தது. உலகில் பெரிய மற்றும் சிறிய எல்லா நாடுகளும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. கோவிட் தொற்றுநோயின் பரவல் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியின் அளவைப் பொறுத்து வௌ;வேறு நாடுகளின் பொருளாதாரத்தின் தாக்கமும் மாறுபட்டுக் காணப்பட்டது. இன்று நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய பொருளாதார சவால்களில் கோவிட் தொற்றுநோயின் விளைவுகள் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
04 February 2022
பெண் சமத்துவம் சார்ந்திருக்கும் நிலையில் இருந்து விடுபடுதலில் துவங்குகின்றது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான நுட்பமான அல்லது வெளிப்படையான பாகுபாடு இலங்கையின் சமூக பின்னடைவில்; ஒன்றாகும். இந்த நிலை பெரும்பாலும் வீட்டில் தொடங்குகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கணவர் வீட்டை நடத்துவதற்கு பணம் சம்பாதிப்பதால் ஒரு மேலாதிக்க அல்லது அதிகாரபூர்வமான பாத்திரத்தை வகிக்கிறார் மற்றும் முக்கிய முடிவுகளைத் தானே எடுக்கிறார். முடிவெடுப்பதிலும் மற்ற விடயங்களிலும் கணவனும் மனைவியும் சம பங்கு வகிக்க வேண்டும் என்று பொதுவாக ஆன்மிகம் சொல்கிறது. ஆகையால், எம்மிடையே ஆன்மீகத்தின் பற்றாக்குறை வீட்டில் தொடங்குகிறது, மேலும் அது வளர்ந்து லஞ்சம் மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கிறது.
நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோமா!
இலங்கை தனது 74வது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு கொண்டாடுகின்றது. மின்வெட்டு, எரிவாய்வுப் பிரச்சினை மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றால் நாட்டை குழப்பத்தில் ஆழ்த்திய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இந்த நாள் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இந்த மண்ணின் குடிமக்கள் தங்கள் சொந்த விதியின் எஜமானர்களாக மாறியுள்ளனர்.
இலங்கை தனது 74வது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு கொண்டாடுகின்றது. மின்வெட்டு, எரிவாய்வுப் பிரச்சினை மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றால் நாட்டை குழப்பத்தில் ஆழ்த்திய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இந்த நாள் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இந்த மண்ணின் குடிமக்கள் தங்கள் சொந்த விதியின் எஜமானர்களாக மாறியுள்ளனர்.