
கடமுட சடபுட முன்னே வா
அண்ணன் இருக்கன் பின்னே வா
தடைகளை உன் காலால் மிதி
தலைவனாய் நீ உன்னை மதி டேய்
ஓடினால் போகாது
வாடினால் அது ஆகாது
தம்பி நீயும் ஒரு நாள் முன்னே வா
நானும் வருவேன் பின்னே வா
கடமுட சடபுட முன்னே வா
அண்ணன் இருக்கன் பின்னே வா
வறுமை உனக்கென்ன சாபமடா
வளைந்து போவது பாவமடா
கனவு உனக்குள்ளே விரியட்டுமே
முயற்சி துளிர்விட்டு எரியட்டுமே
எவனையும் நம்பாதே
எமனவன் உன்னோடு
அந்த திடம் உன்னில் இறுகட்டும்
தீமைகள் உருகட்டும்
வாடா தம்பி வாடா கேய்
வழிகள் திறந்துபோடா நீ


0 comments:
Post a Comment