பொலிசில பிடிபட்டு துடிக்காதே
நீ போடுற கறல்கம்பி சீனியுடன்
பல கெடுதலைக் கொடுத்திடும் ஈஸ்டருடன்
நீ போடுற கறல்கம்பி சீனியுடன்
பல கெடுதலைக் கொடுத்திடும் ஈஸ்டருடன்
இன்னும் என்னென்ன இதயத்தைக் கெடுக்கும்
இறுதியிலே அது மரணத்தக் கொடுக்கும்
வடிக்காதே தம்பி வடிக்காதே நீயும்
உள்ள கழிவை எல்லாம் ஊத்தி ஊற வச்சி
நல்ல இதயங்களை நாளும் சுட்டாய்
சிலர் அல்லும் பகலும்
கள்ளச் சாராயம் காச்சி வித்து
அடுத்தவர் பணத்தினை சுரண்டிக்கொண்டார்
வடித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்
உன்போல் குடித்துவிட்டோர் எல்லாம் அழித்துக்கொண்டார்
ஓர் காலினை அடிப்பவன் காசை இழந்தான்
இரு நேரமும் குடிப்பவன் காலம் இழந்தான்
சுடச்சுடக் குடிப்பவன் சொந்தம் இழந்தான்
உள்ள சொத்துவித்துக் குடிப்பவன் எல்லாழ் இழந்தான்
இன்னும் துடிப்புள்ள இளைஞர்கள் குடிப்பதனால்ப
பல குடும்பங்கள் ஏழ்மையிலே வாடுதப்பா


0 comments:
Post a Comment