08 January 2013
மாற்றம் காணும் மட்டக்களப்பில் ஏற்றம் காணும் விவசாயம்.
06 January 2013
பருவம் கடந்து யோசிக்கிறேன்!
வயல் காடே என்னை
அணைத்துக் கொள்வாயா?
காற்றே உன்னை நேசிக்கிறேன்
மண்ணே உன்னை யாசிக்கிறேன்- உன்
அழகை தினமும் வாசிக்கிறேன்!
அதனால் இன்னும் வசிக்கிறேன்!
பருவம் கடந்து யோசிக்கிறேன்!
பச்சை நிலமே நேசிப்பாயா!!
01 January 2013
மட்டக்களப்பின் சுபீட்சமான பாதையை நோக்கிய ஏமாற்றங்களில்லாத ஆண்டாக மலர 2013ஐ வரவேற்கிறோம்
கடந்து வந்த கசப்பான பாதைகளின் பயணங்களை இன்னும் நாங்கள் ஒரு முன்னேற்றத்துக்கான வழிகளாக கொண்டு எங்களை நாங்கள் புதிதாக்கிக் கொள்ளவேண்டும்;. பரந்து கிடக்கும் வயல் நிலங்களும், மீன் பாடும் வாவி மகளும், கனிகள் கொட்டும் சோலைகளும், அலைகள் மோதும் ஆழ்கடலும் வருமானமும் வளர்ச்சியும் கொண்ட சமுகத்தை ஏற்ப்படுத்த போதுமான வளங்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இருந்தும் இன்னும் எம்மக்களை எடுத்தேத்தும் உணர்வுள்ள, தொண்டுள்ளம் கொண்ட, மனிதாபிமானமான ஒரு சமுதாயத்தினை உருவாக்கவேண்டும் என்கின்ற உறுதிமொழியே இன்று எம் சமுகத்தின் முன் நிற்க்கவேண்டும்.
இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
31 December 2012
எல்லாம் போனதுதான் மிச்சம்
போ போ
இந்த பிறப்பில்
என்னை விட்டு
எல்லாம்
போனதுதான் மிச்சம்
உயிரை விட..
அதுவும்
இப்போ போகிறது..
நீ வீசிய
சொல் அம்பு
சொருகுண்டு
22 December 2012
இறுதி மூச்சில் வாழும் சொந்தங்களை தேடி ஒரு மனிதாபிமானப் பயணம்

'நாங்கள் இன்றுடன் வந்து ரெண்டு நாளாகிட்டு, உடுக்க உடுதுணியோ, படுக்க பாயோ ஒன்றுமில்லாமல் 8 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ளோம். இஞ்ச 72 குடும்பம் (252பேர்) வேப்பவெட்டுவான், காரைக்காடு மற்றும் மாவடி ஓடை போன்ற ஊரில இருந்து வந்நிருக்கம், உம்மயா சந்தோசமா இருக்கு எங்கட புள்ளங்களுக்கு தேவையான பால்மா, சீனி, விஸ்கட்டு மற்றது தேயில அதோட கோதும மா, பருப்பு எல்லாம் அநாதரவா இருந்த எங்களுக்கு தந்து உதவி இருக்கிங்க நன்றி தம்பிமாரே' என்று குமாரி கனகசபை அழாக்குறையாகக் கூறினார்.
10 December 2012
08 December 2012
இலங்கைப் பட்டதாரிகள் படும் பாடு
03 December 2012
மட்டு மாநிலத்தின் பாரம்பரியத்தை காக்கும் வேட்கை - தீபத்திருநாள் களியாட்டம்.
இற்றைக்கு முப்பது வருடத்துக்கு முன்பு இந்த மட்டு நகரம் இப்படியாகத்தான் கலையில் களைகட்டி இருந்தது. அதன் பிறகு காற்று மட்டும் போய்வருகின்ற வேற்று வாசிகளின் இடம்போல் ஆகிவிட்டது. இருந்தும் இன்று மெது மெதுவாக பசுமை பூண வைக்கும் நடவடிக்கையை செய்யவேண்டிய பொறுப்பு எம்மையும் சார்ந்து நிற்க்கின்றதல்லவா!. மட்டு மாநிலத்தின் பண்பாடுகளை பிரதிபலிக்கும் தீபாவளித் திருநாள் பாரம்பரியத்தினை நிலைநாட்டும் கலை நிகழ்வுகளோடு தேத்தாத்தீவு திருவூரில் இனிதே நடந்தேறியது.