வாறாயோ திருட்டுக் கழுத
கேளாயோ எந்தன் கதயே
முகப் புத்தகததினில் போலி
முதுகெலும் பில்லாத சோலி
வரவரக் கூடிடும் சட்டம் - உனக்கு
வளமாய் வைத்திடும் பூட்டு
உனக்குரிமை இல்லை பிறரை
மனக்கவலை தூண்டி எழுத
உலகமே உனக்கென்றும் ஏசும் - தெரு
கற்களை எடுத்துன்னில் வீசும்
பிறர்தூண்டி எழுதும் உனக்கு
சுயபுத்தி எங்கு போச்சு
முகமூடி போட்டு வாழும் - உன்னை
நாய்கள் கண்டாலும் சிரிக்கும்
ஆழுமைகள் நெஞ்சில் ஏற்றி
அறிவால் உயர்ந்திடு போற்றி
எதுவான போதும் நேரில் - வந்து
கேள்விகள் கேட்டிடு பாரில்
0 comments:
Post a Comment