ADS 468x60

16 August 2026

வறட்சிப் பேரிடர்: நிவாரணங்களுக்கு அப்பால் தொலைநோக்குத் தீர்வுகள்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை, நாட்டின் பொதுச் சுகாதார மற்றும் விவசாயம் சார்ந்த கட்டமைப்பின் மீது பாரிய சவால்களைத் தோற்றுவித்துள்ளது. அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, நாடு முழுவதும் நிலவும் வறட்சியால் மூன்று மாவட்டங்களில் உள்ள ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் 12,182 குடும்பங்களைச் சேர்ந்த 39,019 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3,478 குடும்பங்களைச் சேர்ந்த 12,212 பேர் தற்போது குடிநீர் நெருக்கடியை [Acute Water Scarcity] எதிர்கொண்டு வருகின்றனர் என்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். அம்பாறை, மொனராகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் [Department of Meteorology] எச்சரித்துள்ளதைப் போல, எல் நினோ [El Niño] காலநிலை நிகழ்வின் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் என்பது, தற்போதைய நெருக்கடியானது ஒரு தற்காலிக நிகழ்வல்ல, மாறாக இது நீண்டகாலப் பாதிப்புகளைக் கொண்ட ஒரு பேரிடர் என்பதை உணர்த்துகிறது.

மட்டு மீன் மகள் படித்தால் அழகானது

மட்டு மீன் மகள் படித்தால் அழகானது

எட்டு தேசமும் புகழும் பண்பானது

இன்னும் தேன் தமிழ் வாழும் மண்ணானது

இன்னும் ஓடிக் கொண்டிருக்கும் ஆறானது

வயல் ஆடிக் கொண்டிருக்க நூறானது

எங்கள் போடிமார் உழைக்கும் பேரானது

மட்டு நாடோ

 [Verse 1]

பச்சைவயல் பாயும்முயல்

முல்லை நில நாடோ


பச்சைவயல் பாயும்முயல்

முல்லை நில நாடோ

வாவி இன்னும் ஓடும் மகள்

மேவும் வண்ண நாடோ

15 August 2026

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா

 முருகா முருகா முருகா முருகா அரகரோகரா

மருகா மருகா மருகா மருகா அரகரோகரா

ஏழு மலையானே கலியுக வரதா அரகரோகரா

என்குறை தீர்பாய் யாத்திரை வந்தேன் அரகரோகரா 

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா

மருகா மருகா மருகா மருகா அரகரோகரா 

கிழக்கு மாகாணத்தின் புதிய வளர்ச்சிப் பாதை

கிழக்கு மாகாணத்தின் புதிய வளர்ச்சிப் பாதை

தமிழ்–முஸ்லிம் சமூகங்களின் பகிரப்பட்ட வாழ்வியல், கலாச்சார பல்வகைமை மற்றும் பொருளாதார வாய்ப்புகளை எதிர்கால வளர்ச்சிக்கான சக்தியாக மாற்றுவதற்கான ஒரு புதிய சிந்தனை

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான கலாச்சாரம், அடையாளம், பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் தொடர்பான விவாதங்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் முக்கியமான பேசுபொருளாக மாறுகின்றன.

இத்தகைய விவாதங்கள் அவசியமற்றவை என்று கூற முடியாது. ஒரு சமூகத்தின் மொழி, மதம், உடை, உணவு, குடும்ப மரபுகள், திருமண நடைமுறைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் வரலாற்று நினைவுகள் அதன் அடையாளத்தின் முக்கிய கூறுகளாகும்.

ஆனால் ஒரு முக்கியமான கேள்வியை நாம் கேட்க வேண்டிய நேரம் இது:

“நமது கலாச்சார வேறுபாடுகளைப் பற்றி தொடர்ந்து விவாதிப்பதைத் தாண்டி, அந்த வேறுபாடுகளை கிழக்கு மாகாணத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான ஒரு வளமாக மாற்ற முடியாதா?”

வடக்கு, கிழக்கு மறுமலர்ச்சிக்கான புதிய பாதை: உலக வங்கியின் பாராட்டுக்குரிய முன்னெடுப்பு

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார ரீதியில் தேசிய சராசரிக்குப் பின்னடைந்த நிலையிலேயே தொடர்ந்து வருகின்றன. யுத்தத்தால் சிதைந்த உள்கட்டமைப்பு, தொழில் வாய்ப்புகளின் பற்றாக்குறை, மூலதனப் பற்றாக்குறை மற்றும் பிராந்திய இணைப்புக்குறைவு ஆகியன இப்பிராந்தியங்களின் அபிவிருத்தியை நீண்டகாலமாக முடக்கி வைத்திருந்தன. இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தை (Integrated Regional Development Programme) நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து (International Development Association – IDA) நூறு மில்லியன் அமெரிக்கன் டொடாலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு முடிவாக அமைந்துள்ளது. இந்த நிதியுதவி, ஒரு எண்ணிக்கை மட்டுமன்று; முப்பதாண்டு காலப் பொருளாதார இடிபாடுகளுக்கு மத்தியில் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப முயலும் லட்சக்கணக்கான மக்களுக்கான ஒரு நம்பிக்கைக் கீற்று.

14 August 2026

டெங்கு பேரிடர்: கூட்டுப் பொறுப்பும் அவசியமான மாற்றங்களும்

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பின் மீதான பெரும் சவாலாக டெங்கு நோய் உருவெடுத்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் நேற்று (13) வரை நாடளாவிய ரீதியில் 91,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 68 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக, வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாதத்தில் மாத்திரம் 29,968 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, ஆகஸ்ட் மாதம் முதல் 13 நாட்களில் 6,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அம்பாறைவில் பிள்ளையாரு

அம்பாறைவில் பிள்ளையாரு அவரை விட வேறு யாரு

அவர் அமர்ந்தார் கோட்டையூரு அகிலமெல்லாம் அவரின் பேரு

அவர் அமர்ந்தார் கோட்டையூரு அகிலமெல்லாம் அவரின் பேரு

அம்பாறைவில் பிள்ளையாரு அவரை விட வேறு யாரு

அவர் அமர்ந்தார் கோட்டையூரு அகிலமெல்லாம் அவரின் பேரு

அம்பாறைவில் பிள்ளையாரு அவரை விட வேறு யாரு