[Verse 1]
பச்சைவயல் பாயும்முயல்
முல்லை நில நாடோ
பச்சைவயல் பாயும்முயல்
முல்லை நில நாடோ
வாவி இன்னும் ஓடும் மகள்
மேவும் வண்ண நாடோ
பொன்னின் நிறம் நெல்லில் வரும் மண்ணில் விளை நாடோ....
இன்னும் தமிழ் வாழும் நிலம் எங்கள் மட்டு நாடோ..
பொன்னின் நிறம் நெல்லில் வரும் மண்ணில் விளை நாடோ....
இன்னும் தமிழ் வாழும் நிலம் எங்கள் மட்டு நாடோ..
[Verse 2]
வித்தை நூறு கூறும் தொன்மை பேசும் நாளும் இங்கு
சிந்தை தோறும் வந்தோர் வாழ வாழ்த்தும் நெஞ்சம் உண்டு
மெல்லப் பாடும் மீனின் கூட்டம் ஓடும் நீரின் அழகு
செல்லத் தோடு வயலுக் குள்ளே காதல் பாட்டும் பெருமை
மண்ணில் ஓடும் ஆற்றிலே மீன்கள் பாடுமே
மண்ணில் ஓடும் ஆற்றிலே மீன்கள் பாடுமே
தேனே மழை வானில் வரும் அழகிய இடமல்லவோ
பச்சைவயல் பாயும்முயல்
முல்லை நில நாடோ
வாவி இன்னும் ஓடும் மகள்
மேவும் வண்ண நாடோ
[Verse 3]
கூத்தைப் போல வாழும் எங்கள்
வாழ்க்கை அன்பில் கோடி
கோயில் நூறு வாழ்க்கையோடு
கூடும் அன்பில் சேரும்
பேச்சில் கூட பாயும் அன்பில்
பெருமை கொள்ளும் ஊரு
பேரும் போற்ற தமிழில் வாழும்
புலவர் இங்கு நூறு
இந்த ஊரில் வாழ்வதே சொர்கம் தானடா
இந்த ஊரில் வாழ்வதே சொர்கம் தானடா
காணாததும் கேளாததும் தேனகம் கொடுத்திடுமே
பச்சைவயல் பாயும்முயல்
முல்லை நில நாடோ
வாவி இன்னும் ஓடும் மகள்
மேவும் வண்ண நாடோ
பொன்னின் நிறம் நெல்லில் வரும் மண்ணில் விளை நாடோ....
இன்னும் தமிழ் வாழும் நிலம் எங்கள் மட்டு நாடோ..
பொன்னின் நிறம் நெல்லில் வரும் மண்ணில் விளை நாடோ....
இன்னும் தமிழ் வாழும் நிலம் எங்கள் மட்டு நாடோ..

0 comments:
Post a Comment