ADS 468x60

17 November 2026

வரவு செலவுத் திட்டம் 2027- நிதி மீட்சியைப் பொருளாதார வளர்ச்சியாக மாற்றுமா அரசாங்கம்?

இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (Budget 2027), அண்மைக்கால வரவு செலவுத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நிதிச் சந்தை ஆய்வு நிறுவனமான JB Securities இன் Murtaza Jafferjee, இதனைத் தனது நினைவிலுள்ள சிறந்த வரவு செலவுத் திட்டங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மதிப்பீடு, வெறுமனே அரசாங்கத்தின் அரசியல் வெற்றியாகப் பார்க்கப்பட முடியாது. மாறாக, 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அரச கடன் தவணை செலுத்தத் தவறிய நிலை (Sovereign Default), சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் பின்னணியில் மதிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

16 November 2026

2016-ஐ விட இன்று இலங்கைச் குடும்பங்கள் வளமாக உள்ளனவா?

 ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புகின்றது என்பதை மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்க வீதம், ஏற்றுமதி வருமானம், அரச வருவாய் போன்ற தேசியப் பொருளாதாரக் குறிகாட்டிகள் மூலம் மதிப்பிட முடியும். ஆனால், அந்த வளர்ச்சி மக்களின் அன்றாட வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதே பொருளாதார முன்னேற்றத்தின் உண்மையான அளவுகோலாக அமைகின்றது. குறிப்பாக, குடும்பங்களின் வருமானம் உயர்ந்துள்ளதா, அந்த வருமானத்தால் முன்னரை விட அதிகமான பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்ய முடிகின்றதா, வறிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதா என்பன முக்கியமான கேள்விகளாகும்.

15 November 2026

எதிர்காலச் சந்ததியினருக்காக இன்று எத்தகைய பொருளாதார அடித்தளத்தை உருவாக்குகின்றோம்?

2027 ஜனவரியில் முதன்முறையாகப் பாடசாலைக்குள் காலடி எடுத்து வைக்கவிருக்கும் ஒரு சிறுமியை நினைத்துப் பார்ப்போம். புதிய சீருடை, புத்தகங்கள், பாடசாலைச் சூழல், எதிர்காலக் கனவுகள் என அவளது உலகம் நம்பிக்கையால் நிரம்பியிருக்கலாம். ஆனால், சர்வதேசக் கடன்கள், கடன் மறுசீரமைப்பு, வெளிநாட்டுச் செலாவணி பொறுப்புகள் போன்றவற்றைப் பற்றி அவளுக்கு எதுவும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றைத் தீர்மானிப்பதில் அவளுக்குப் பங்கும் இல்லை. எனினும், இன்று எடுக்கப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் அவளது எதிர்கால வாய்ப்புகளையும், இன்னும் பிறக்காத தலைமுறைகளின் வாழ்க்கைத் தரத்தையும் தீர்மானிக்கப் போகின்றன. எதிர்காலச் சந்ததியினருக்காக இன்று எத்தகைய பொருளாதார அடித்தளத்தை உருவாக்குகின்றோம்? என்ற கேள்வி இலங்கையின் 2027 வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் முக்கிய இடம் பெற வேண்டும்.

14 November 2026

சேவை என்பது காத்திருப்பவர்களிடம் செல்வதல்ல; தேவைப்படுபவர்களைத் தேடிச் செல்வது!

 
சமூகத்தில் வளங்கள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது ஒரு உண்மை அடிக்கடி மனதில் தோன்றுகிறது. ஒரு பிராந்தியத்தில் நகரங்கள் இருக்கும்; வளர்ச்சியடைந்த கிராமங்கள் இருக்கும்; அதேவேளை அடிப்படை வசதிகளுக்காகவும் அரச சேவைகளுக்காகவும் இன்னும் காத்திருக்கும் பின்தங்கிய கிராமங்களும் இருக்கும். ஆனால், அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் வளங்களும், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சேவைகளும் எல்லா இடங்களையும் ஒரே அளவில் சென்றடைகின்றனவா என்ற கேள்விக்கு நேர்மையான பதில் வழங்குவது அவ்வளவு எளிதானதல்ல.

பொதுவாக, ஒரு நகரத்தில் கிடைக்கின்ற கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் அரச சேவைகளுக்கான வாய்ப்புகள், அதிலிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தில் வாழும் மக்களுக்குக் கிடைப்பதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். போக்குவரத்துப் பாதைகள் முறையாக இல்லாமை, போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, தகவல் தொடர்பில் காணப்படும் இடைவெளிகள் எனப் பல தடைகள் இருக்கின்றன. ஆனால் இவற்றுடன் இன்னொரு முக்கியமான காரணத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அந்த மக்களைத் தேடிச் சென்று பணியாற்றுவதற்கான மனப்பாங்கும் சமூகப் பொறுப்புணர்வும் நம்மிடையே போதியளவில் வளர்ந்திருக்கின்றனவா என்பதே அது.

2027 வரவுசெலவுத் திட்டம்: பொருளாதார மீட்சியிலிருந்து நிலையான மாற்றத்தை நோக்கி!

2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னமும் முழுமையாக மீண்டுவராத இலங்கை, 2028ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டுக் கடன் மீளச் செலுத்தும் சவாலையும் எதிர்கொள்ளவிருக்கின்றது. இத்தகைய சூழலில், மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமைகளைக் குறைப்பதுடன், நாட்டின் நிதி ஒழுங்கையும் பாதுகாத்து, நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்கும் வரவுசெலவுத் திட்டத்தை முன்வைப்பது எளிதான பணியல்ல. எனினும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பல்வேறு துறைகளுக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை நோக்கும்போது, அது வெறுமனே நிதி ஒதுக்கீடுகளை அறிவிக்கும் ஆவணமாக அல்லாமல், பொருளாதார மாற்றத்திற்கான ஒரு முயற்சியாக அமைந்துள்ளது எனக் கருத முடிகின்றது.

12 November 2026

சம்பள உயர்வுக்கு அப்பால் - மக்களின் வாழ்க்கையை மாற்றுமா 2027 வரவுசெலவுத் திட்டம்?

இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்புகளும் விவாதங்களும் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. 2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டுவரும் இலங்கை, தற்போது பொருளாதார உறுதிப்படுத்தல், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற பல்வேறு சவால்களை ஒரே நேரத்தில் எதிர்கொண்டுள்ளது.

இந்தப் பின்னணியில், அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் வரவுசெலவுத் திட்ட விவாதங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வாழ்க்கைச் செலவு, வரிச்சுமை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும். இருப்பினும், ஒரு நாட்டின் பொருளாதார மீட்சியை அரச ஊழியர்களின் சம்பள உயர்வினால் மாத்திரம் அளவிட முடியுமா? என்பதே இன்றைய முக்கியமான கேள்வியாகும்.

மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்குமா 2027 வரவுசெலவுத் திட்டம்?

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் இன்றைய தருணத்தில், இலங்கை எதிர்கொள்ளும் மிக முக்கியமான பொருளாதாரக் கேள்வி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைகின்றதா என்பதல்ல; அந்த வளர்ச்சியின் பயன்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையைச் சென்றடைகின்றனவா என்பதாகும். பொருளாதார வளர்ச்சி, பணவீக்கக் கட்டுப்பாடு, கடன் மறுசீரமைப்பு மற்றும் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு போன்ற தேசியப் பொருளாதாரக் குறிகாட்டிகள் முன்னேற்றமடைவது வரவேற்கத்தக்கது. எனினும், ஒரு குடும்பத்தின் மாதாந்த வருமானம் அதன் அடிப்படைச் செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிலையில், இத்தகைய புள்ளிவிபரங்களின் வெற்றி மக்களின் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகின்றது.

11 November 2026

நூறு ரூபாவில் முப்பத்தேழு ரூபா கடந்த காலத்துக்கே: வரவுசெலவுத் திட்டத்தின் மறைந்த கணக்கு

நூறு ரூபாவை உள்ளங்கையில் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முப்பத்தேழு ரூபா பாடசாலைக்கோ மருத்துவமனைக்கோ வீதிக்கோ போகாமல், நேராகக் கடன் கொடுத்தவர்களிடம் போகிறது என்று அறிந்தால் என்ன தோன்றும்?

இது கற்பனைக் கணக்கு அல்ல. 2026 வரவுசெலவுத் திட்டம் ஒதுக்கிய தொகையைப் பிரித்துப் பார்த்தால் இதுவே கிடைக்கிறது. நிதி அமைச்சின் குடிமக்கள் வரவுசெலவுத் திட்ட ஆவணம் (Citizens Budget – பொதுமக்களுக்கான எளிமைப்படுத்திய வரவுசெலவு விளக்கம்) இந்த உண்மையை எண்களுடன் காட்டுகிறது.