ADS 468x60

31 October 2012

நினைக்க வேண்டுமென

அரைவாசியில் விழுங்கிய
உன்
ஞாபகத்தின் மறதியை
இப்பொழுது
வாந்தி எடுக்கிறேன்
நினைக்க வேண்டுமென.

பரதேசியாய்
இன்னும்
எத்தனை ஆண்டுகளடி-
உன்
காலடிச் சுகத்துக்காய்
காத்துக் கிடப்பது??

27 October 2012

எமது சமுக ஆர்வலர்களால் தும்பங்கேணி, திக்கோடை பகுதிகளில் புதிய சோளம் விதைகள் இலவசமாக வழங்கி வைப்பு


எமது மட்டக்களப்பின் நலன் விரும்பிகள் ஆர்வலர்கள் இம்மக்களின் வறுமையயை களையும் முதற்ப்படியாக இதுவரை பாவனையில் இல்லாமல் கிடந்த நிலங்களை அடையாளங் கண்டு அவற்றை பயன்மிக்கதா மாற்றி, சுமார் 100 ஏக்கர் சோளச் செய்கையாளர்களை இனங்கண்டு புதிய முறையிலான இச்செயற்த்திட்டத்தினை அறிமுகம் செய்து பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளனர். எதுவித பயனையும் எதிர்பாராமல்  இம்மக்களின் முன்னேற்றம் கருதி நல்ல இன சோளம் விதைகளை வளங்கி வைக்கும் நிகழ்வு 21.10.2012 அன்று திக்கோடை கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

15 October 2012

நீயும் பொம்மைதான்


இந்த பொம்மைபோல் சிலர்
அழகாய் இருந்தாலும்
மனசி இல்லாத ஒன்றாக...
வெறும் வேசம்தான்...
கண்களை திருடி
மனசுக்குள் நுழைந்ததும்
விழிப்பின் விளிம்பில்
தொலைந்து போகும்
கனவுகளாய்...
இன்னும் எத்தனை காலங்கள்தான்
என் வாழ்க்கையோ!

11 October 2012

நான் மகான் அல்ல..


என் வீட்டில் அழகாய் இருக்கும் ரோஜாக்கள் இல்லைதான் இருந்தாலும் வெள்ளை நிற மல்லிகை இருக்கிறது அது உங்களுக்கு சூடிக்கொள்ள முடியாவிட்டாலும் அது உங்களைப் பார்த்து புன்னகை செய்ய தவறுவதும் இல்லை, பூத்துக் குலுங்க மறப்பதும் இல்லை.

மகான்கள் நடப்பதை, நடக்கப்போவதை தெழிவாகக் கணித்துச் சொல்லுவார்கள், அறிவாலும் ஆனந்தத்தாலும் உயர்வாக இருப்பார்கள், மற்றவர்கள் என்ன தேவையை மனதில் நினைக்கிறார்களோ, அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை குறிப்பறிந்து உதவுவார்கள். ஆனால் நான் மகான் அல்ல வெறும் தொண்டன், தொண்டனுக்கும் தொண்டன். எனக்கு தெரிந்ததெல்லாம் நா நயமும் நாணயமும் தான், என் வாழ்க்கையில் பெரியவர்கள் இருந்து சிறியவர்கள் முதல் ஏமாற்றப்பட்டுள்ளேன் ஏன் என்றால் நான் மகான் அல்ல. ஆனால் இது வரை எனக்கு தெரிந்த வகையில் யாரையும் ஏமாற்றியதில்லை, ஆனால் என்வாழ்வில் நன்றியுடையவனாக இருக்க வேண்டும் என்று அதிகமாக ஆண்டவனிடம்தான் கேட்கிறேன் ஏன் என்றால் நான் மகான் அல்ல.

எனக்கு எதையும் தாங்கும் மனம் இல்லை, அதை வளர்த்துக்கொள்ள நான் முயற்சி செய்தும் தோற்றுப்போகிறேன் ஏனெனில் நான் மகான் அல்ல. மக்களோடு மக்களாக மக்களின் தொண்டனாக வாழ்ந்து போவதுதான்;; எனது சிறிய ஒரு நோக்கம்.  நான் யாரையும் தட்டிக்கழித்ததும் கிடையாது வெட்டி அழித்ததும் கிடையாது, என் வாழ்வில் உள்ள பெரிய பயம் நான் யாரை முழுசாய் நேசிக்கிறேனோ அவர்கள் பிரிந்து சென்றுவிடுவார்கள் ஏனெனில் நான் மகான் அல்ல........

06 October 2012

சோளச் செய்கையில் மட்டக்களப்பில் கொண்டுவரவேண்டிய மாற்றங்கள்


இன்று மட்டக்களப்புக்கு வருவாய் தேடித்தருகின்ற பிரதானமான இரண்டு மார்க்கங்கள் காணப்படுகின்றன. ஓன்று விவசாயத்துறை மற்றது மீன்பிடித்துறை. அதில் குறிப்பாக சுமார் 58,374 கெக்டேயர் நிலப்பரப்பினில் சுமார் 300,000 விவசாயக் குடும்பங்கள் நெற்செய்கையில் இரு போகத்திலும் ஈடுபடுகின்றனர், அதேபோல சுமார் 49,339 கெக்டேயர் மேட்டுநிலத்தில் மேட்டு நிலப் பயிர்ச்செய்கையிலும் சேனைப்பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு வெண்காயம், பச்சை மிளகாய், கத்தரி, வெற்றிலை அதுபோல் சோளம், கச்சான், கவுப்பி மற்றும் இதர பயிர்களும் செய்கை பண்ணப்படுகின்ற ஒரு வளமிகு மாவட்டமாகும்..


மட்டக்களப்பு மாவட்டம் மற்றவரை வசீகரிப்பதற்கும், பொறாமை கொள்ள வைப்பதற்க்கும் காரணம் கொட்டிக்கிடக்கும் அளவில்லா வளமும், கொள்ளை கொள்ளும் வாவிகளின் அழகும்தான்.

29 September 2012

சில்லிக்கொடியாற்றில் ஒரு கல்விச்சுடர்..


புள்ளங்கள படிப்பிச்சு ஆளாக்கணும்இ இந்த பக்கத்தில நாங்களெல்லாம் மாட உளச்சி உளச்சி தேஞ்சி போனதுதான் மிச்சம். என்ட புள்ளங்களாச்சும் படிப்பிச்சு இஞ்சால பக்கத்து சனங்கள நல்லா படிப்பிக்க வைக்கணும். நாங்க பட்ட துன்பம் எங்களோட போகட்டும் இந்தக் குஞ்சுகளயாச்சும் உருப்படியாக்கணும்' என்று தம்பிராச தனது நிலைபற்றி பேசினார்.

சில்லிக்கொடியாறு கொக்கட்டிச்சோலைக்கு தெற்கே இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு விவசாயக் கிராமமாகும். அங்கு 5 குழந்தைகளுடன் வாழ்து வரும் இவர் தங்களது வாழ்வாதாரமாக வயற்செய்கைஇ பசு வளர்த்தல் என்பனவற்றை செய்து வருகின்றனர். மூத்த பெண் திருமணம் செய்து விட்டார். ஏனைய அனைவரும் கல்வி கற்று வருகின்றனர்.

26 September 2012

மட்/பண்டாரியா அ த க பாடசாலைக்கு சீருடை உதவி


Image may contain: 19 people, people standingயுகங்கள் பல கடந்து மனிதன் நவீன யுகத்தில் வாழ்ந்து வருகிறான். விவசாய யுகம் (Green era), கைத்தொழில் யுகம் (Blue era), அறிவு யுகம் (Knowledge era) என காலம் கடந்தே போய்விட்டது. கல்வியை வறுமை பாதித்து வருவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது.

25 September 2012

இனியும் வேண்டாம் பிரிவு












சண்டைபோட்டே நம் உயிர்களை இழந்தோம்
சண்டைபோட்டே நம் உறவினைப் பிரிந்தோம்
சண்டைபோட்டே நாம் பகைவர்கள் ஆனோம்
சண்டைபோட்டே நாம் சிறைகளில் அடைந்தோம்
சண்டைபோட்டே நாம் வறியவர் ஆனோம்
சண்டைபோட்டே நாம் சிறியவர் ஆனோம்
இனியும் வேண்டாம் ஆயிரம் பிரிவு- இதனால்
ஆகுமோ தமிழரின் விடிவு--