ADS 468x60

27 November 2026

வயதுக்கு வந்த பெண் பிள்ளை வீட்டைவிட்டுப் போய்விட்டாள்... எங்கே போனாள் என்று தெரியவில்லை!

 என்னடா இந்த உலகம்! எங்கே போய்க்கொண்டிருக்கிறது இந்தச் சமூகம்?தினமும் செய்தித்தாளைத் திறந்தால் ஒரு செய்தி! தொலைக்காட்சியைப் போட்டால் இன்னொரு செய்தி! ஒரு பிள்ளையைக் காணவில்லை... இன்னொரு பிள்ளையைக் கடத்திவிட்டார்கள்... வயதுக்கு வந்த பெண் பிள்ளை வீட்டைவிட்டுப் போய்விட்டாள்... எங்கே போனாள் என்று தெரியவில்லை! ஐயோ! இதையெல்லாம் கேட்கும்போதே நெஞ்சு பதறுதே!


என்ன நடக்கிறது இந்த நாட்டில்? என்ன நடக்கிறது இந்தக் குடும்பங்களில்?

பெற்றோர்கள் பிள்ளைகளைப் பெற்றெடுப்பது மட்டும் போதுமா? அவர்களோடு பேச வேண்டாமா? அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டாமா?

பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கிறோம்... உடை வாங்கிக் கொடுக்கிறோம்... நல்ல பாடசாலையில் படிக்க வைக்கிறோம்... கையிலே தொலைபேசியையும் கொடுக்கிறோம்!

ஆனால், அந்தப் பிள்ளைகளின் மனதுக்குள் என்ன நடக்கிறது என்று எப்போதாவது உட்கார்ந்து கேட்டிருக்கிறோமா?

'
மகளே, உனக்கு என்ன பிரச்சினை? யாராவது உன்னைத் தொந்தரவு செய்கிறார்களா? உன் மனதில் ஏதாவது கவலை இருக்கிறதா?' என்று அன்பாகக் கேட்டிருக்கிறோமா?

அதேபோல பிள்ளைகளும் பெற்றோர்களிடம் எல்லாவற்றையும் சொல்லிப் பேசுகின்ற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாமா?

இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் கையில் தொலைபேசி இருக்கிறது. உலகமே அவர்களுடைய கைக்குள் இருக்கிறது. ஆனால், பக்கத்து அறையில் இருக்கிற அப்பாவிடமோ அம்மாவிடமோ மனம் விட்டுப் பேச நேரமில்லையா?

அதுவும் இந்த வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு! இது சாதாரணமான விஷயமா?

ஒரு பெண் பிள்ளை வீட்டிலிருந்து வெளியே போனால், அவள் பத்திரமாகத் திரும்பி வருவாளா என்ற கவலை இல்லாமல் பெற்றோர் இருக்க முடியுமா?

நம்பிக்கை இருக்க வேண்டும்! ஆனால், அந்த நம்பிக்கை என்ற பெயரில் எல்லாவற்றையும் கவனிக்காமல் விட்டுவிடலாமா?

பிள்ளைகளைக் கண்காணிப்பது என்றால் அவர்களைச் சந்தேகப்படுவது அல்ல. அவர்களைப் பாதுகாப்பதுதான்!

அதே நேரத்தில், பிள்ளைகளையும் குறை சொல்லிவிட முடியாது. ஏதாவது பிரச்சினை இருந்தால், பயப்படாமல் பெற்றோரிடம் சொல்லக்கூடிய சூழலை நாம் உருவாக்கியிருக்கிறோமா?

அன்பு காட்ட வேண்டிய இடத்தில் அதிகாரம் காட்டுகிறோம். பேச வேண்டிய இடத்தில் திட்டுகிறோம். கேட்க வேண்டிய இடத்தில் தீர்ப்புச் சொல்லிவிடுகிறோம். பிறகு பிள்ளைகள் மனம் திறந்து பேசவில்லை என்று கவலைப்படுகிறோம்!

இன்னொரு பக்கம், சமூகத்தில் நடமாடும் ஆபத்தான மனிதர்களைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். ஒரு பெண் பிள்ளையின் நம்பிக்கையைப் பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள் யார்? கடத்துபவர்கள் யார்? அவர்களுக்கு என்ன துணிச்சல்?

எங்கே போய்விட்டது நமது சமூகப் பொறுப்பு? அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று கவனிக்கக்கூட நேரமில்லாத சமூகமாக மாறிவிட்டோமா?

ஐயோ! ஒரு பிள்ளை காணாமல் போன பிறகு தேடுவதில் காட்டும் அக்கறையை, அந்தப் பிள்ளை பாதுகாப்பாக இருக்கும்போதே காட்டியிருந்தால் எவ்வளவோ பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாமே!

பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளுக்கு நேரம் கொடுங்கள். அவர்களோடு பேசுங்கள். அவர்களுடைய நண்பர்கள் யார், அவர்கள் எங்கே செல்கிறார்கள், யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை அன்போடு அறிந்துகொள்ளுங்கள்.

பிள்ளைகளே! உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. தெரியாதவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பாதீர்கள். இணையத்தில் அறிமுகமாகும் ஒவ்வொருவரையும் நம்பாதீர்கள். உங்களுக்கு ஏதாவது ஆபத்து அல்லது அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக நம்பிக்கையான பெரியவர்களிடம் சொல்லுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு பிள்ளை காணாமல் போனால் அது ஒரு குடும்பத்தின் கவலை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் கவலை!

என்னடா இந்தக் காலம்! வளர்ச்சி வந்துவிட்டது... தொழில்நுட்பம் வந்துவிட்டது... உலகம் முன்னேறிவிட்டது என்று சொல்கிறோம்.

ஆனால், நமது பிள்ளைகள் பாதுகாப்பாக வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறோமா?

இந்தக் கேள்விக்கு ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு பாடசாலையும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு பொறுப்புள்ள அதிகாரியும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது!

பிள்ளைகளைப் பெற்றெடுப்பது பெற்றோரின் கடமை. அவர்களைப் பாதுகாப்பாக வளர்ப்பது குடும்பத்தின் பொறுப்பு. அவர்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்துவது இந்தச் சமூகத்தின் கடமை!

இதை எப்போது நாம் உணரப்போகிறோம்?

எப்போது

0 comments:

Post a Comment