ADS 468x60

30 September 2026

மட்டுநகர் அழகாலே மயங்குகின்ற மனமோ

 மட்டுநகர் அழகாலே மயங்குகின்ற மனமோ

மீன்மகளின் கவியாலே வாவியாடும் தினமோ

 மட்டுநகர் அழகாலே மயங்குகின்ற மனமோ

மீன்மகளின் கவியாலே வாவியாடும் தினமோ

வாவியாடும் தினமோ


ஆடிவரும் வயலோரம் பாடிவரும் கவியோ

ஆடிவரும் வயலோரம் பாடிவரும் கவியோ

தேனினமும் மானினமும் தேடுகின்ற இடமோ

மட்டுநகர் அழகாலே மயங்குகின்ற மனமோ

மீன்மகளின் கவியாலே வாவியாடும் தினமோ

வாவியாடும் தினமோ

[verse 2]

கடலின் அலை இசையாக காற்றில் வரும் தேனாக

கடலின் அலை இசையாக காற்றில் வரும் தேனாக

கூத்தில் வரும் குலமாக பார் மகிழும் தேனாடாம்

வருவிருந்து என்நாளும் வடிவினிலே பெண்ணாழும்

வருவிருந்து என்நாளும் வடிவினிலே பெண்ணாழும்

தேவர்களும் விரும்பியுறை தேனகமும் இதுதானோ

மட்டுநகர் அழகாலே மயங்குகின்ற மனமோ

மீன்மகளின் கவியாலே வாவியாடும் தினமோ

[verse 3]

புலவர்மணி புகழ்பரவும் பனுவல்கவி மழைபொழியும்

தேன்தமிழில் கலைபரவும் தென்னிலங்கை நாடாமோ

ஆநிரைகள் எந்நாளும் பால்கொடுக்கும் நானிலமோ

ஆநிரைகள் எந்நாளும் பால்கொடுக்கும் நானிலமோ

தேநிலவின் இடமாக தேடுகின்ற தமிழ்நாடோ

மட்டுநகர் அழகாலே மயங்குகின்ற மனமோ

மீன்மகளின் கவியாலே வாவியாடும் தினமோ

[verse 4]

செங்கோலைக் கைப்பிடித்து சிவன்மீது பக்திவைத்து

சிங்கமென ராவணணின் சிறப்பதிலே வாழுகின்றோம்

கடல்போலே நிலமிருக்க கண்ணைப் போலே தமிழிருக்க

கடல்போலே நிலமிருக்க கண்ணைப் போலே தமிழிருக்க

கிடைத்தவரம் எமக்கீடு வேறுஎங்கு உண்டாமோ

[outro]

மட்டுநகர் அழகாலே மயங்குகின்ற மனமோ

மீன்மகளின் கவியாலே வாவியாடும் தினமோ

வாவியாடும் தினமோ

 

 

 

 

 

 

 

 

0 comments:

Post a Comment