சில சமயம் சிலரைப் பார்த்தால் ஆத்திரம் வரும் சிலரைப்பார்த்தால் பரிதாபம் வரும், எனக்கு யாரைப்பார்த்தும் ஆத்திரம் வருவதில்லை, அப்படி வந்தாலும் யாரையும் நோகடிப்பதில்லை. உங்களுக்கு தெரியும், சிலர் காரணம் இல்லாமலேயே மற்றவங்க மேல பழியப்போடுவாங்க, அதுக்கு பயந்து எதிர்க தெரியலன்னா போச்சி, சங்குதான்!! மல்டி வரல்போல தொடந்து அடிப்பாங்க.
ம்ம்ம்... ஒரு காலத்தில செய்யாத குற்றங்களுக்காய் சரசரப்புக்கெல்லாம் பயந்து நடுங்கி இருக்கிறன் அது ஒரு காலம். அப்போ எல்லாம் இந்த 'ஆறிலும் சாவு நூறிலும் சாவு' இதெல்லாம் ஞாபகம் வந்ததில்ல. 'தருமம் தலைகாக்கும்' அது மட்டும் இருந்திச்சி.
13 March 2016
கொம்புச்சந்தி கோயில்: சமுதாய பல்கலைக்கழகமாய் திகழும் ஒரு நிறுவகம்
மட்டக்களப்பு தமிழகத்தை ஒருங்கே பிரதிபலிக்கும் பழந்தமிழ் கிராமம் தேற்றாத்தீவு எனும் தேனூராகும். மட்டக்களப்பின் பெருமையும் பழமையும் மிகுந்த கிராமங்களுள் ஒன்றுதான் தேற்றாத்தீவுக் கிராமமாகும். இங்கு வாழுகின்ற மக்களின் வந்தோரை வாழவைக்கும் பண்பு, கலைகளை பேணிவளர்க்கும் திறமை, வீரசைவம் செறிந்த இடம், சித்தர்களும், கவிஞ்ஞர்களும், கலைஞர்களும் நிறைந்து உருவான இடம், கடலும் ஆறும், குளங்களும் சூழ வயல் வனப்புகள் வளம் கொஞ்சும் நாநிலம் போன்றவை எமது ஊர் ஏனைய ஊர்களைவிட தனிப்பண்புகளுடன் இருப்பதற்கு காரணங்களாய் அமைந்துள்ளன.
11 March 2016
இது மனிதர்களுக்கு, எருமைகளுக்கு அல்ல
படிப்பு பட்டம் எல்லாருக்கும் வாய்க்கிறது இல்ல, அது வாய்த்தவங்க எல்லாருக்கும் பயன்படுறதும் இல்ல. என்னங்க நான் பாத்த பலபேரு எப்படி படிச்சாங்க? யாரு படிக்க உதவினாங்க? எதுக்கு படிச்சம்? என்ற கேள்விகள தங்களுக்கு தாங்களே கேட்டுகொள்றததே இல்ல. இவங்க தங்களுக்கு மண்டியிடணும், அவங்க சொல்றத கேட்கணும் என்ற வர்க்கத்த எதிர்பார்க்கிறாங்க அதனால அவங்களுக்கு இயல்பாகவே இருக்கும் அழகு, மதிப்பு, பெருந்தன்மை எல்லாத்தையும் அவங்களுக்கு தெரியாமலேயே படிப்படியா எழந்திடுறாங்க.
அறிவும் திறனும் பதவியும் வந்து சேரும்போது தலை கனக்கக் கூடாதுங்க. நெல்லப் பாருங்க கதிராக வெளிவரும்போது உள்ள ஒண்ணுமே இராது ஆனா ஆது நீண்டு வளர்ந்திருக்கும். அதன்பிறகு அதில பால் ஏறி பின் காயாகி முத்தி பழுக்கும்போது பாருங்க தலை குனிந்து நெல்லாக பயனை மட்டும் வாரித்தரும். அப்படிப்பட்ட மனிதர்கள இந்த கலியுகத்தில காணுறது மிக மிக அரிதுங்க. இன்னும் ஒன்று நம்ம மேல மற்றவங்க வைத்திருக்கிற அன்ப தராதரம் பார்த்து கணிப்பிடக்கூடாதுங்க அது திரும்பவும் நமக்கு மேல உள்ளவர்களால நாம வைத்திருக்கும் அன்பை புறக்கணிக்க வைக்கும் இல்லையா. //தலைக்கனம் இல்லாது வாழுவோம்//
04 March 2016
ஓங்கார முதற் பொருளே!
ஓம் என்னும் ஒலியுடையாய் ஓங்கார முதற் பொருளே ஓயாது உனைத் தேடி ஊள்ளமே உருகி நின்றோம் துயரத்தை செவி சாய்த்த தும்பிக் கை நாயகனே உயரத்தில் நீ இருந்து ஊர் எல்லாம் அருள்கின்றாயே ஓம் பிரணவனே சிவன் மகனே சரண் புகவே உன்னைத் தொழுதேன் அவ்வைக் அருள் பாலா அகந்தை கொன்ற தீரா அனைவருக்கும் அப்பன் நீதானே கலை ஊறும் தேன் ஊரில் சிலையாக உயர்ந்தாயே! கலி யுகத்தின் தெய்வம் எலியின் மீது ஏறி கவலை நீக்கும் அப்பன் வேறேது கணம் போற்றும் கருணை வள்ளல் இனம் காக்க எழுந்தாயே உள்ளம் உருகப் பாடு உணர்வு ஒன்றித் தேடு வள்ளல் பெருமான் முன்னே வருவாரே வளல் மிஞ்சும் வயல் ஊரில் வானம் கொஞ்ச அமர்தாயே!
27 February 2016
யார் மன்னன்?
உணவை ஊருவாக்கி
வளத்தை வருவாயாக்கி
களத்தில் காத்து நிற்ப்பவன்
நீயும் ஒரு குறுநில மன்னன்
சேறு பறக்கும் நிலத்தில்
ஏரு பூட்டி விதைப்பவன்
ஆறு தரும் நீரைவைத்து
அறுவடை பண்ணுபவன்
ஏரு பூட்டி விதைப்பவன்
ஆறு தரும் நீரைவைத்து
அறுவடை பண்ணுபவன்
வேறு வளம் சேர்பவர்க்கு
சோறு கொடுத்து உதவுபவன்
நெற்றி வியர்வை சிந்தி
நிலம் விளைப்பவன்
சோறு கொடுத்து உதவுபவன்
நெற்றி வியர்வை சிந்தி
நிலம் விளைப்பவன்
படைப்பதால் நீயும் ஒரு பிரம்மா
அவன் உலகைப் படைக்கிறான்
நீ உணவைப் படைக்கிறாய்
நீ விளைத்தால்தான் எமக்கு சோறு
நீ இழக்கும் போது உனக்கு யாரு
அவன் உலகைப் படைக்கிறான்
நீ உணவைப் படைக்கிறாய்
நீ விளைத்தால்தான் எமக்கு சோறு
நீ இழக்கும் போது உனக்கு யாரு
கொம்புச் சந்தியானே!
தேத்தா மரத்து ஓரத்தில
தீர்த்தக் குளத்து ஈரத்தில
கொம்பு முறித்து ஆடினோமே வெள்ளையப்பா- அங்கே
கொம்புச் சந்தியான் அருள்தான் கொள்ளையப்பா
நம்பிவரும் மனிதருக்கு தும்பிக்கையான் துணையிருப்பான்!
நாடிவரும் கயவருக்கும் நல்லருளை புரிவானே!
வந்தவங்க வரம் குறைந்து போனதில்லே!
எங்க ஊரினிலே கலையின் பேரினிலே
எல்லாமே ஆனைமுகன் அருள் ஒளியின் ஊற்றம்மா!
ஏங்கித் தவிக்கும் மனதை இங்கே ஆற்றம்மா!
மீன்பாடும் தேனாட்டில் தேனூரில் குடியமர்ந்தாய்
நான்பாட நாவிருந்து நல்லருளை நீதந்தாய்!
அற்புதங்கள் நாளுக்கு நாள் செய்தாயே!
வில்லுக் குளக்கரையில் வில்வ மரத்தடியில்
ஆனாகப் பட்டவரெல்லாம் அறிவைப்பெற்று போனாங்க
பாவம் நீங்கிப் பக்குவமாய் ஆனாங்க-
-------------------------- -------------------------- -----------------
//இங்கு அழகுற அமர்ந்து எமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கும் கொம்புச் சந்தியான் அப்பனுக்கு எனக்கு சமர்ப்பணம்//
தீர்த்தக் குளத்து ஈரத்தில
கொம்பு முறித்து ஆடினோமே வெள்ளையப்பா- அங்கே
கொம்புச் சந்தியான் அருள்தான் கொள்ளையப்பா
நம்பிவரும் மனிதருக்கு தும்பிக்கையான் துணையிருப்பான்!
நாடிவரும் கயவருக்கும் நல்லருளை புரிவானே!
வந்தவங்க வரம் குறைந்து போனதில்லே!
எங்க ஊரினிலே கலையின் பேரினிலே
எல்லாமே ஆனைமுகன் அருள் ஒளியின் ஊற்றம்மா!
ஏங்கித் தவிக்கும் மனதை இங்கே ஆற்றம்மா!
மீன்பாடும் தேனாட்டில் தேனூரில் குடியமர்ந்தாய்
நான்பாட நாவிருந்து நல்லருளை நீதந்தாய்!
அற்புதங்கள் நாளுக்கு நாள் செய்தாயே!
வில்லுக் குளக்கரையில் வில்வ மரத்தடியில்
ஆனாகப் பட்டவரெல்லாம் அறிவைப்பெற்று போனாங்க
பாவம் நீங்கிப் பக்குவமாய் ஆனாங்க-
--------------------------
//இங்கு அழகுற அமர்ந்து எமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கும் கொம்புச் சந்தியான் அப்பனுக்கு எனக்கு சமர்ப்பணம்//
கைத் தொழிலை கையில் எடு
கைத் தொழிலை கையில் எடுத்து
காசி நிறைய பையில் நிரப்பி
வருமானத்தை கூட்ட வேண்டும் சின்னத்தம்பி- நீயும்
திறணை வளர்க்கப் பாடுபடனும் செல்லத்தம்பி
காசி நிறைய பையில் நிரப்பி
வருமானத்தை கூட்ட வேண்டும் சின்னத்தம்பி- நீயும்
திறணை வளர்க்கப் பாடுபடனும் செல்லத்தம்பி
படிப்பு உனக்கு பத்தலெனா
பார்த்த தொழிலும் கிட்டலன்னா
சுயமா வேல தொடங்க வேணும் சின்னத்தம்பி- நீயும்
சொந்தக் காலில் நிற்கப் பழகு செல்லத்தம்பி
பார்த்த தொழிலும் கிட்டலன்னா
சுயமா வேல தொடங்க வேணும் சின்னத்தம்பி- நீயும்
சொந்தக் காலில் நிற்கப் பழகு செல்லத்தம்பி
உலகம் போற போக்கப் பாரு
உழைகலன்னா கேட்கும் ஊரு
களவு எடுத்து புழைக்கணுமா சின்னத்தம்பி- இங்க
கடவுள் கூட ஒழைக்கிறாண்டா செல்லத்தம்பி
உழைகலன்னா கேட்கும் ஊரு
களவு எடுத்து புழைக்கணுமா சின்னத்தம்பி- இங்க
கடவுள் கூட ஒழைக்கிறாண்டா செல்லத்தம்பி
நீயும் ஒரு மனித வளம்
நிறைய இருக்கு வளரக் களம்
கூலி வேல பார்த்த போதும் சின்னத்தம்பி -இன்னும்
கூட நாலு வேல தரணும் செல்லத்தம்பி
நிறைய இருக்கு வளரக் களம்
கூலி வேல பார்த்த போதும் சின்னத்தம்பி -இன்னும்
கூட நாலு வேல தரணும் செல்லத்தம்பி
17 January 2016
இத்தனையுமா எமக்குண்டு

இத்தனையுமா எமக்குண்டு
எடுத்துச் சொன்னால்
நம்புவீரோ!
எடுத்துச் சொன்னால்
நம்புவீரோ!
சுற்றிவர வாவி
வற்றாத கடல்
சின்னச் சின்னதாய்
பூக்கள் செய்து
சிருஸ்டித்த காடு
வற்றாத கடல்
சின்னச் சின்னதாய்
பூக்கள் செய்து
சிருஸ்டித்த காடு