ADS 468x60

08 August 2016

ஒவ்வொரு நாளும் மரணச் செய்தி!

வாலிபம் காட்டுமா வாழ்வின் பெறுமதி
வருத்தப் படும் பெற்றோர்கு இதுவா வெகுமதி
பாதையில் பயணம் செய் பறவாயில்லை
போதையில் சென்றால் கிடைக்குமா இறவாநிலை
ஒவ்வொரு நாளும் மரணச் செய்தி
இளைஞர்கள் இப்போது இயமன் கைதி
துடிப்புள்ள இளைஞர்கள் எமக்கு இழப்பு
படித்திள்ள போதும் யார்கும் பயன் என்னப்பா
விதிகளை மதித்து வண்டியை ஓட்டு
வீட்டில் சொல்வதை செயலில் காட்டு
நீ இறப்பதனால் உனக்கில்லை கவலை
தாய் தந்தை தவிக்க பார்பது அவலம்!

02 August 2016

மாமாங்கப் பத்து!

நான் மாமாங்கம் சென்று மனமகிழ்ச்சி கொண்டபோது அவரை நினைந்து பாடிய பத்து பாட்டு என் அப்பனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
ம, மா, மி, மீ என ஒரே எழுதது வரிசையில் 10 பாடல்கள்!
மன்னனே நான் தொழும் கன்னலே- லோக மாமறையே மகிழ்ந்து ஒளிதரும் மின்னலே இன்னல்கள் எம்மினம் இழந்திட –வளத்தை ஈன்றவா மட்டில் வாழ் ஆண்டவா சுயம்பாக வந்தவா போற்றி- எமக்கு சுகமள்ளி வழங்கிடும் கணநாதா போற்றி! போற்றி!

01 July 2016

சிறுவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கவனமாக கையாளப்பட வேண்டும்!

சிறுவர்கள் எமது எதிர்காலத்தின் நம்பிக்கைச் சொத்தாகும். இதனை பாதுகாப்பதிலேயே ஒரு நாட்டின் அபிவிருத்தி தங்கியிருக்கின்றது.


இன்றைய சிறுவர்களே நாளைய தலை வர்கள் என்பதற்கு இலக்கணமாக பல வளர்முக மேற்கத்தய நாடுகளுக்கு உரித்தான சிறுவர்கள் மேதைகளாகவும், ஆய்வாளர்களாகவும் உருவாக்கப்பட்டு, அவர்கள்தான் கணிசமான அளவு கீழைத்தேய நாடுகளை வழிடத்தும் துர்ப் பாக்கிய நிலையில் இருப்பது வருத் தத்திற்கும் திருத்தத்திற்கும் உரியதாகும்.
சிறுவர்கள் சார்பாக இன்று உலகளாவிய ரீதியில் பெரும் முக்கியத்துவம் செலுத்த ப்பட்டு வருவது அறியக்கிடக்கின்றது.

இளைஞர்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்

நம்ம நாட்டில வருடா வருடம் உ/த படிக்கிறவங்களில் பல்கலைக்கழகத்துக்கு தகுதியானவர்கள் என சுமார் 1,50,000 தெரிவாகுவர். பின் கிட்டத்தட்ட 25,000 பேர் அதில் தெரிவாகி அரச ப.க.கழகங்களில் கல்வியினை தொடா்வாா்கள். மிகுதியானவர்களில் 70,000 பேர் தொழில் பயிற்சி கல்லூரிகள் மற்றும் திறந்த ப.க.கழகங்கள், தனியாா் ப.க.கழகங்கள் போன்றவற்றில் வெளிவாரி பட்டம் என சேர்ந்து கொள்ள, கிட்டத்தட்ட ஒரு 5,000 பேர் வெளிநாடுகளில் திறனற்ற தொழிலாளிகளாக இணைந்து கொள்ளுவர். ,இப்படியாகபோக மிகுதி 50,000 போ் (43%) வருடாவரும் வருகின்ற படித்த இளம் இரத்தம் கொண்ட, கல்வியினை தொடர முடியாத, கிராமப்புற இளையோரின் நிலையை யோசித்து பார்த்தால் கிா்என தலை சுற்றுகிறது.

தேடி வந்தேனையா கதிர்காம்!

ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ! என கதிர்காமக் கந்தனின் சந்நிதியை காலால் நடந்து, கிடந்து, பத்தியோடு பக்தர்களுடன் பழகி; பயணம் செய்யும் புண்ணிய தருணம் இது. உகந்தை தொடங்கி குமுக்கன், வியாழை மற்றும் வள்ளியம்மன் ஆறு குறுக்கறுத்து குன்றில் உறையும் குமரனை தரிசிக்க பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களின் வழக்காறு இன்று நேற்றல்ல பன் நெடுங்காலமாக பழக்கத்தில் இருந்து வருகிறது.

26 June 2016

கனவுகள் தொலையும் போது

கனவுகள் தொலையும் போது
வெறுப்பு வருகின்றது
வெறுப்பு வரும்போது
குழப்பம் நிலைக்கிறது
குழப்பம் ஏற்ப்பட்டால்
முடிவுகள் தெறிக்கின்றன
முடிவுகள் எடுக்க துணை தேவைப்படுகின்றது
அதுவும் இல்லாத போது
தனிமை மட்டும் வருகிறது
தனிமை ஒரு மனிதனை
கொல்லும், வைரப்படுத்தும்
இழைக்கவைக்கும்
இறக்க வைக்கும்
உருக்கவைக்கும் வெறுக்க வைக்கும்

08 June 2016

அறிவில்லாதவர்கள்!

காாியம் ஆவதற்கு பொய்யும் சொல்லலாம், காலிலும் விழலாம், நல்ல அன்பாயும் பேசிச் சாதிக்கலாம் அந்தக் காரியம் வேண்டாதவன் விதண்டாவாதம், பிடிவாதம், வரட்டுக்கௌரவத்தால் வெண்ணை திருடப்போய் தாழியை உடைத்துவிட்ட கதையாய் எல்லாத்தையும் நாசமாக்கிவிடுகிறான். ஒரு திருக்குறள் ஞாபகம் வருகிறது, //அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.// அதாவது அறிவில்லாதவர்கள் அவர்களுக்கு அவர்களது எதிரிகள் திட்டம்போட்டு கொடுக்கிற கொடிய தண்டனையைவிட அவர்கள் அவர்களாகவே தாங்களின் முட்டாள் தனத்தினால் தேடிக்கொள்ளும் தண்டனை மிகவேதனைக்குரியதாகுமாம்.... ம்ம்ம்ம் அவர்கள்தானே முட்டாள்கள் ஆச்சே இந்த திருக்குறள் எங்க புரியப்போகுதோ!!! அதுபோன்று ஒருவன் இன்னொருவரின் பின்னால் அடங்கி திரிய, தலையாட்டி பொம்மையாய் வாழ முனைகிறான் என்றால் அவன் ஒன்றில் முதுகெலும்பு இல்லாதவன் அல்லாது தானாக வாழப் பழகிக்கொள்ளாமல் தங்கி வாழும் ஒரு பிற்போக்கான். அதேபோல் நீதிக்கு புறம்பாக, அதிகாரமோ கல்வி அறிவோ, பணபலமோ எதுவுமே இல்லாமல் அல்லது இருந்து யாரும் அடக்கி ஆள நினைத்தும் அடிபணிந்து வாழதவனைக்கூட அன்பினால் அடக்கிவிடலாம். உலகில் எதைக் கையாழ்வதற்கும் பயன்படும் பெரிய ஆயுதம் அன்புதானுங்க!!

30 May 2016

தேடித் தேடி திறனை வளர்!!

வா! மகனே வா!!
பாரு பார் போகுது தூரர
ஒத்த மனிசனுக்கு அங்கு
ஓராயிரம் டொலரு - இங்கு
ஓராயிரம் மனிசங்களுக்கு
ஒத்த டொலரு!

கிடைக்கிற தொழிலுக்கு
படிக்கிறான் அங்க
படிக்கிற படிப்புக்கு தொழில்
தேடுறான் இங்க!!

அவனத் தேடி வேல வருது
மேல் நாட்டில்
வேலய தேடி நம்மபோறம்
கீழ்நாட்டில்!!

ஆடு ஒட்டகம் மேய்கவும்
வீட்டுப் பணிசெய்யவுமா
உன்னால் ஒண்ணுது!

வா! இங்க வா!!
தொழில் நுட்பக் கல்லூரிகள்>
தொழில் பயிற்சி நிலையங்கள்>
உயர் பயிற்சி நிலையங்கள்>
ஊரெல்லாம் உண்டு இங்கு!!
தேடித் தேடி திறனை வளர்!!
கோடி Nவைலை நாடி வரும்!!