மக்கள் வாழ்ந்திடும் நாட்டினிலே
மானம் போனது அரசியலால்
சிக்கல் சூழ்ந்தது இனவெறியால்
செத்து மடிந்ததும் நாமல்லவோ
வேண்டாம் வேண்டாம் உன்தலமை
போனது குழியில் எம்நிலமை
வேண்டும் வேண்டும் சுயமுயற்சி
மீண்டும் தோன்றணும் பெருமகிழ்ச்சி
இனமத பேதம் ஏதுவுமின்றி
இருந்ததை வைத்து பொளச்சோமே
அரசியல் செய்ய வழியுமின்றி
பேச்சினில் சூட்டை விதைச்சானே
போச்சிது இருந்ததும் புதச்சானே


0 comments:
Post a Comment