ADS 468x60

28 July 2025

நினைக்கின்ற நேரமெல்லாம் அருகிருப்பார் அப்பா

நினைக்கின்ற நேரமெல்லாம் அருகிருப்பார் அப்பா

நினைவுகள் ஒருநாளும் மறைவதில்லை

அணைத்திடும் ஆருயிராய் அனைவருக்கும்- எம்மை

இணைத்திடும் ஓருயிராய் ஆகிவிட்டார் 

காலையிலே நானும் போவதென்னறால் -அவர்

கண்மூடித் தூங்காமல் விழித்திருப்பார்

எமக்காக செய்தவைதான் கொஞ்சமில்லை

எமக்காக செய்தவைதான் கொஞ்சமில்லை- அங்கு

உருவான பாசத்துக்கோர் பஞ்சமில்லை

குழந்தைகளோடு அப்பா கொஞ்சிடுவார் -அவர்

கொண்டாட்டம் என்று சொன்னால் வந்துநிற்பார்

ரோடும் உழவோடும்  வாழ்ந்துவிட்டார்- இன்று

மீழாத தூக்கமதில் ஆழ்ந்துவிட்டார்

நினைக்கின்ற நேரமெல்லாம் அருகிருப்பார் அப்பா

நினைவுகள் ஒருநாளும் மறைவதில்லை

அணைத்திடும் ஆருயிராய் அனைவருக்கும்- எம்மை

இணைத்திடும் ஓருயிராய்; ஆகிவிட்டார் 

0 comments:

Post a Comment