ADS 468x60

18 July 2025

பாலமுருகன் கோயிலுக்கு வாருங்க

 பாலமுருகன் கோயிலுக்கு வாருங்க
பாரமெல்லாம் உங்களுக்கு தீருங்க 
தேனூரில் முருகனுக்கு திருவிழா
தெள்ளுதமிழ் கந்தனுக்கு  பெருவிழா  
பாலமுருகன் கோயிலுக்கு வாருங்க
பாரமெல்லாம் உங்களுக்கு தீருங்க 

சுற்றிவர வயல்களெல்லாம் ஆடிடும்
சுருதியோடு வாவிமகள் ஓடிடும்
பன்னிருகை முருகவேளை  தேடிடும்
என்னிருகை கந்தவேளை நாடிடும் 
சுற்றிவர வயல்களெல்லாம் ஆடிடும்
சுருதியோடு வாவிமகள் ஓடிடும்
பன்னிருகை முருகவேளை  தேடிடும்
என்னிருகை கந்தவேளை நாடிடும் 

பாலமுருகன் கோயிலுக்கு வாருங்க
பாரமெல்லாம் உங்களுக்கு தீருங்க 


குலுங்கிவரும் வில்லுக்குள காத்துங்க
குரவைபோட்டு ஆடிவரும் நாத்துங்க
நீலமயில் வேலவனை தேடுங்க
குயிலுமங்கு பேரச்செல்லி பாடுங்க
குலுங்கிவரும் வில்லுக்குள காத்துங்க
குரவைபோட்டு ஆடிவரும் நாத்துங்க
நீலமயில் வேலவனை தேடுங்க
குயிலுமங்கு பேரச்செல்லி பாடுங்க

பாலமுருகன் கோயிலுக்கு வாருங்க
பாரமெல்லாம் உங்களுக்கு தீருங்க 
தேனூரில் முருகனுக்கு திருவிழா
தெள்ளுதமிழ் கந்தனுக்கு  பெருவிழா  
பாலமுருகன் கோயிலுக்கு வாருங்க
பாரமெல்லாம் உங்களுக்கு தீருங்க 

0 comments:

Post a Comment