ADS 468x60

31 December 2024

2024இன் நூறாவது ஆக்கத்தில் நூறாவது நன்றி சொல்லக்கூடாதா!

இது நன்றி கூறும் நேரம், நினைந்து பார்க்கும் நேரம்! பாடம் படித்துக்கொள்ளும் நேரம்! நாம் பொதுவாக 2024இல் பல சவால்களை கடந்து வந்துவிட்டோம்! அவற்றை சாதாரணமாக திரும்பிப்பாருங்கள் அந்தத்தூரம் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும். உங்களையே நீங்கள் நம்மமறுப்பீர்கள்! ஆம் அதுதான் சாதனை, பாடம், சவால்களைக் கடத்தல். இதற்காக நான் பலருக்கு இங்கு நன்றி கூறவேண்டியிருக்கின்றது, இப்பிரலபஞ்சம் உட்பட. அத்துடன் நாம் கண்ட பிரதான சவால்களையும், விட்ட தவறுககளையும் பாடங்களாக சொல்ல இருக்கின்றேன். எல்லாம் மாற்றங்களைநோக்கிய தேற்றங்களே!

இது வெள்ளிச்சரத்தில் 2024ம் ஆண்டின் நுர்றாவது ஆக்கம். அதனை ஒரு நன்றிப்பெருக்கான ஆக்கமாக எழுத ஆசைப்படுகின்றேன்.

இந்த உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் எதையாவது கொன்றே ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும், நீங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கோடிக்கணக்கான உயிரினங்கள் இறக்கின்றன. பல தாவரங்கள், கண்களால் பார்க்க முடியாத மிகச் சிறிய உயிரினங்கள் உங்களுக்காகவே இறக்கின்றன.......

29 December 2024

2025-ல் கிழக்கு இலங்கையின் சுற்றுலா வளர்ச்சி: மாற்றத்தின் புதிய அத்தியாயம்


2025-ல் கிழக்கு இலங்கை, அதன் மைன்மை மிக்க கடற்கரைகள், பண்பாட்டு வளங்கள், மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுடன், நாட்டின் சுற்றுலா துறையின் முக்கிய பங்களிப்பாளராக உருவாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் பகுதியின் முழு திறனையும் பயன்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இது பன்னாட்டுத் தரத்திலான பயணிகளை ஈர்க்கவும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

27 December 2024

நவீன உலகில் மனித நேயத்தின் வீழ்ச்சி: ஆன்மிக சமுதாயத்தின் மீளுருவாக்கம் தேவை

ஆலயங்களில் நிதி மோசடி, வெளிப்படைத்தன்மையின்மை, பதவிமோகம், அரசியல் ஈடுபாடு, இயற்கை வளங்களை லயத்தின் பேரால் அழித்தல், தேவைக்கு அதிகமான விழாக்கள், செலவுகள் என்பன எதையும் வளர்த்துவிடும் திட்டமில்லாத மாற்றங்களே. ஆகவே ஆன்மிக வளத்தை மீண்டும் பெற சிறந்த திட்டங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

இன்றைய உலகம், மனித நேயத்தை பெரிதாக மதித்து வருவதில்லை. பணம், அதிகாரம், மற்றும் சமூகப் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்கின்ற ஒரு சுயநலமிகு சூழல் நிலவுகிறது. ஆனால், நம்முடைய வளர்சி என்பது வெறுமனே பொருளாதார ரீதியில் மட்டுமே இருக்கக்கூடாது, ஆன்மிக ரீதியிலும் வளர்ந்து இருக்க வேண்டும்.

நாம் தற்போதைய சமுதாயத்தின் ஆன்மிக வீழ்ச்சி குறித்து உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்விதம் நகராமல் இருந்தால், எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களின் அடிப்படையில் தடைகள் உருவாகக் கூடும். ஆன்மீகம் பல இடங்களில் அட்டகாசமாக மாறியுள்ளதனை நாளுக்கு நாள் அவதானித்து வருகின்றோம்.

26 December 2024

மீண்டும் சுனாமி தாக்கினால் என்னவாகும்? பொறுப்பும் நினைவுகூறலும்.

35,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் உயிர்களையும், இந்தியப் பெருங்கடலில் 250,000 பேரையும் பலிகொண்ட பேரழிவுகரமான 2004 சுனாமியின் 20வது ஆண்டு நிறைவை இன்று அடைந்த நிலையில், இதேபோன்ற பேரழிவு ஒன்று வராமலிருப்பதற்கான நாட்டின் தயார்நிலை விமர்சன மதிப்பீட்டிற்கு அவசியமானது. முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் வெளியேற்றும் வழிமுறைகளில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் ஒட்டுமொத்த தயார்நிலை பற்றிய கவலைகளை எழுப்புகின்றன.

இயற்கை அனர்த்தங்களினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பானது, நாட்டில் ஏற்படும் 96 சதவீத காலநிலை தொடர்பானவை என்பதன் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. உலகளாவிய காலநிலை இடர் சுட்டெண் 2018 மற்மு; 2016 இல் இலங்கையை நான்காவது மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக தரவரிசைப்படுத்தியது, இது சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகிறது. 

25 December 2024

மகிழ்ச்சியை பகிர்வதன் மகிமை – மட்டக்களப்பில் ஒரு கிறிஸ்மஸ் நினைவு


கிறிஸ்மஸ் என்பது அனைவருக்கும் புனிதமான நேரம். குடும்பத்துடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடுவதும், வாழ்க்கையின் சிறப்புகளை ரசிப்பதுமே பலரின் கிறிஸ்மஸ் நினைவாக இருக்கும். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன், நான் அனுபவித்த ஒரு கிறிஸ்மஸ் முழுமையாக வேறுபட்டது.

மட்டக்களப்பு மாங்கேணியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் சென்ற போது, அந்தக் குழந்தைகளின் நிலை மனதைக் கலங்கச்செய்தது. சோர்ந்த முகங்கள், பசியால் மங்கிய உடல், ஆனால் மனத்தில் இருந்த நல்லதொரு நம்பிக்கை—அதை எவரும் கைவிடவில்லை.

அந்த தருணத்தில் நாங்கள் ஒருசில கிறிஸ்மஸ் பரிசுகளையும் அத்தியாவசிய பொருட்களையும் கொடுப்பதற்காக அங்கே சென்றோம். குழந்தைகள் நமது பரிசுகளைப் பார்த்தவுடன் அவர்கள் முகங்களில் மகிழ்ச்சியின் ஒளி பரவியது. அவற்றை காண்பதே அவர்களுக்கான கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தமாக இருந்தது.

20 December 2024

சிஸ்டம் சேஞ்ச் ஆகுமென்றார் யேசு பிரானே!- படுர கஸ்டம் சேஞ்ச் ஆகவில்லை யேசு பிரானே!

 சிஸ்டம் சேஞ்ச் ஆகுமென்றார் யேசு பிரானே!- படுர

கஸ்டம் சேஞ்ச் ஆகவில்லை யேசு பிரானே!


ஊத்தும் மழை குறையவேண்டும் யேசு பிரானே

உப்பளங்கள் பெருக வேண்டும் யேசு பிரானே

தென்னை செழித்து ஓங்கவேண்டும் யேசு பிரானே

தேங்காய் விலை குறையவேண்டும் யேசு பிரானே


காக்கை குருவி வாழவேண்டும் யேசு பிரானே!

காடழிப்போர் ஒழிய வேண்டும் யேசு பிரானே!

நெல்லுமணி விழைய வேண்டும் யேசு பிரானே!

நெனச்சவிலையில் அரிசி வேண்டும் யேசு பிரானே!

18 December 2024

இந்திய-இலங்கை உறவுகள்: பொருளாதார முன்னேற்றத்தின் புதிய பாதை

இந்தியாவுடனான உறவு இலங்கையின் வரலாற்றில் நீண்டகாலமாய் தொடர்ந்துள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணமாக புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா அவர்கள் இந்தியாவுக்கு தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் இந்திய-இலங்கை உறவுகளுக்கு புதிய உற்சாகத்தை உருவாக்கி, இரு நாடுகளுக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கு வாய்ப்புகளைத் திறந்துவிடும்.

இந்திய பயணத்தின் முக்கியத்துவம்

ஜனாதிபதி அனுர, இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் இருநாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மேலும், இந்த பயணத்தின் ஒரு பாகமாக, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அசோகமரம் நடுகை செய்தது, இந்திய-இலங்கை பாரம்பரியத்தை நினைவூட்டும் ஒரு முக்கிய சம்பவமாக அமைந்தது.

17 December 2024

நாட்டின் முன்னேற்றத்தில் சமூக விஞ்ஞான ஆய்வாளர்களின் வகிபாகம்- ஆய்வுக்கட்டுரை

இலங்கையில் சமூக விஞ்ஞான ஆய்வாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் மற்றும் உள்ளூர் அபிவிருத்தித் தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் உலக அரங்கில் சமூக விஞ்ஞான ஆராய்ச்சியில் இலங்கையை முன்னணியில் நிலைநிறுத்துவதற்கும் மேலும் சாதகமான ஆராய்ச்சி சூழலை உருவாக்குவதற்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கு அவர்கள் எவ்வாறு ஆதரவளிக்க முடியும். என நாம் இவ்வாய்வுக் கட்டுரையில் பார்க்கப்போகின்றோம். நாம் பல்கலைகழகங்கள், மற்றும் ஆய்வு நிறுவனங்களினால் செய்யப்படும் ஆய்வின் தரத்தை நிர்ணயித்தல், அதனை கொள்கை வகுப்பாளர்கள் வரை எடுத்துச் செல்லுதல் என்கின்ற நோக்கத்தினை இன்னும் முழுதாக செயற்படுத்துவதற்கான ஆயத்தப்படிகளை ஸ்திரப்படுத்தவேண்டியுள்ளது.

தொழில்முனைவோர் ஆராயக்கூடிய பல லாபகரமான சிறு வணிக வாய்ப்புகள்

தொழில்முனைவோர் ஆராயக்கூடிய பல லாபகரமான சிறு வணிக வாய்ப்புகளை இலங்கை வழங்குகிறது மிகவும் இலாபகரமான துறைகளில் ஒன்று உயர்தர மசாலா மற்றும் தேநீர் ஏற்றுமதி செய்வது ஆகும், இது இந்த தயாரிப்புகளுக்கான நாட்டின் உலகளாவிய நற்பெயரைப் பயன்படுத்துகிறது [1]

கூடுதலாக, இலங்கையின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு காரணமாக சுற்றுலாத் துறை வளர்ந்து வருகிறது, வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள் மற்றும் தங்குமிடம் சேவைகள் [2] போன்ற வணிகங்களுக்கு வழிகளை வழங்குகிறது. 

மற்றொரு வளர்ந்து வரும் முக்கிய இடம் சுகாதார மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவாகும், அங்கு தொழில்முனைவோர் சுகாதார உணர்வுள்ள பயணிகளை ஈர்க்க யோகா பின்னடைவு மற்றும் ஆயுர்வேத ரிசார்ட்டுகளை மேலும், ஈ-காமர்ஸின் உயர்வு ஆன்லைன் சந்தைகள் மற்றும் டிஜிட்டல் கட்டண தீர்வுகளுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது, இது இணைய ஊடுருவலை அதிகரித்ததன் மூலம் இயக்கப்படுகிறது [4]

15 December 2024

கல்விக் கலப்படத்தால் ஏற்படும் "கலாநிதிக் காய்சல்" அபாயம்- உஷார் மக்களே!

இன்று பார்கும் இடமெல்லாம் இந்த "கலாநிதிக் காச்சல்தான்" பரவிவருது. இன்றைக்கு அததுக்கு ஒரு மதிப்பு மரியாத இல்லாமல் போயிற்று. காரணம் இந்தப் போலித்தன 'கல்விக் கலப்படம்'. எவன் புத்தகம் நோக்கி தலை குனிகின்றானோ அவன் உலகில் தலை நிமிர்ந்து வாழ்வான். ஆனால் அது பலருக்கு மாறி நடக்கின்றது. ஒளவையார் 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறார். அதாவது பிச்சை எடுத்தேனும் கல்வி கற்க வேண்டும் என அவர் கூறுகின்றார். ஆனால் பிச்சை கொடுத்து குறுக்குவழியில் கற்றவர் என உலாவருவோர்களால் இந்தச் சமுகத்தின் அபாயம் ஆரம்பமாகிறது.  ன்பது பற்றியே இக்கட்டுரை எழுதப்படுகின்றது. இக்கட்டுரை போலி கல்லாநிதிகளையும் பேருக்கு ஆசிரியர்களாய் இருக்கும் பேராசிரியர்களுக்கும் எழுதப்படுவது உண்மையானவர்களுக்கு அல்ல.

ஒரு காலத்தில் சாதாரண தரம் மற்றும் உயர்தர சித்திபெற 'குதிரை ஓடி' பாசு பண்ணிய பலர், இன்று பல பல பெரிய உத்தியோகத்தில் உலாவருகின்றனர். அதுவும் நம்மள ஒரு மாதிரி ஏளனமா வேற பாக்குதுகள், அவருடைய 'ரை' என்ன? புள் ஸ்லிப் சேட் என்ன, சூ என்ன... அப்பப்பா? 

09 December 2024

பாதித்தேங்காய் சந்தைக்கு அறிமுகம்- பரிதவிக்கும் மக்கள்

"முதல் முதலாக சந்தையில் பாதித்தேங்காய்கள் விற்கப்படுவதனைப் பார்த்தேன்." ஒரு பாதி 90 ரூபாய்களாகக் காணப்பட்டது. இது இப்படி இருக்க, இலங்கை மக்களிடையே, சுடுகாடு தொடங்கி சுவையூட்டிவரைக்கும் தேங்காய் ஒரு முக்கியமாகிவிட்டது. இதனால்தான் "பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு தென்னையைப் பெற்றால் இளநீரு' என்று கண்ணதாசன் சொல்லி இருக்கின்றார்.

ஆனால் இன்று அது எண்ணிப்பார்க்க முடிஎயாத ஒன்றாய் மாறி வருகின்றது அரிசைப்போல். தேங்காய்களின் உயர்ந்த விலைகளுக்கு இடையேயான நிவாரணம் எதுவும் எட்டாக்கண்ணியாக உள்ளது, எனவே, இன்று தேங்காய்களின் முக்கியமான குறைப்புகளை அடைய, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என தொழில்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர.

04 December 2024

புதையுண்ட பூலாக்காட்டு மக்கள்- மட்டக்களப்பு வெள்ள நிவாரணம்

நன்றாக விடிந்து விட்டது, பரபரப்பாக தொலைபேசி உரையாடல்கள், ஒழுங்குபடுத்தல்கள், இதனிடையே பொருட்களெல்லாம் இரவிரவாய் பக் பண்ணி காலையில் கடகட என ஏத்தி எடுத்தாச்சி. பூலாக்காடு நோக்கி புறப்படலானோம் . அது ஒரு நிவாரண யாத்திரை, நீண்ட யாத்திரை. வல்லவனின் வாகனம் வளைந்து நெழிந்து ஒரு மாதிரி கிரான் சந்தியை கிட்ட நெருங்கியது, அதன் பின்னர் புலிபாய்ந்தகல்லை நோக்கி போகத்துவங்கியது. ஆனால் அந்தப்பாதையை குறுக்கறுத்துக் குழிதோண்டி பீறிட்டுக்கொண்டிருந்தது வெள்ளம். அச்சத்தில் அசைந்து அசைந்து பெரிய லோட்டோடு ஒரு மாதிரியாய் பூலாக்காடு போகும் பாதையை அண்மித்தோம்.

பூலாக்காடு என்பது பக்கத்தில் உள்ள கிராமம் அல்ல, அது மிகத் தொலைவில் தனித்தீவுகளாக அமைந்துள்ள, 280 குடும்பங்களைக் கொண்ட பல சிறிய சிறிய குக்கிராமங்களைக்கொண்ட கிராம சேவகர் பிரிவாகும். இது கிட்டத்தட்ட கிரான் பிரதான வீதியில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. இங்கு வயல், காடு, குளம், ஆறு மற்றும் காட்டுவிலங்குகளின் அச்சுறுத்தல் என அனைத்தையும் கடந்தே செல்லவேண்டும்.

01 December 2024

இன்னும் நாங்கள் சரியான தொடர்பாடலை அனர்தகாலத்தில் பேணவில்லை

 
சுனாமி வருகின்றது என பரபரப்பான கதைகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேவையில்லாமல் அழைப்பெடுத்து வாந்திகள், வீண் பதட்டம், பீதி காரணம் சரியான தொடர்பாடல் அல்லது நம்பகமான செய்தியினை செவிமடுத்தல் என்பன இன்று எம்மத்தியில் பழக்கப்படவில்லை. எத்தனை மொக் றில், எத்தனை கிராமிய ரீதியான முன்னாயத்த தயார்படுத்தல்கள்! இருந்தும் எங்கே பிழை நடக்கின்றது? என ஆராய்தல் வேண்டும்.

25 November 2024

இதுவரை எதை செய்ய நாடாளுமன்றம் சென்றார்கள்?

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மாதாந்த கொடுப்பனவாக ரூ.54,285 வாகவும், அலுவலக கொடுப்பனவு 100,000 ரூபாயாதகவும், தொலைபேசி கொடுப்பனவு 50,000 ரூபாயாதகவும், ஒரு அமர்வுக்கு வருகைக் கொடுப்பனவு ரூ.2,500. எரிபொருள் கொடுப்பனவு 33,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது மற்றும் தூரத்தைப் பொறுத்து அதிகரிக்கிறது. அதுதவிர சுகாதார வசதிகள் இலவசம். இத்துடன் கூடுதலாக ஓய்வூதியம் கிடைத்தது. இப்படி குறிப்பிடுமளவான கொடுப்பனவினை மாத்திரமே கூறுகின்றேன்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் தீர்மானம் நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை பொதுத் தேர்தலில் அரசாங்கம் பெற்ற வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. அமைச்சரின் சிறப்புரிமைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட குழு இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

இன்று மிகப்பெரிய ஒரு மாற்றத்துக்கான பரீட்சை ஆரம்பம்

 அனைவரையும் இத்தருணத்தில் வாழ்துகின்றேன்!

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (25ஆம் திகதி) முதல் அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பதட்டமில்லாமல் அனைவரும் சித்திபெற முதலில் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

விழிப்பாக இருங்கள்: பரீட்சை நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதை மீறினால் 5 வருடங்களுக்கு பரீட்சைகளுக்கு தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

21 November 2024

தலைவர்களுக்கு புகழாரம் சூட்டுவது நம் வேலையல்ல


நண்பர்களே

இன்று நாம் இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு தருணத்தில் இருக்கின்றோம்;. தேசிய மக்கள் சக்தி புதிய ஆட்சியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட இந்த தருணம், சாதாரணமாக ஒரு அரசியல் கட்சியின் வெற்றியை ஒட்டியதல்ல. இது ஒவ்வொரு இலங்கையருக்கும் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிஜமாகும் ஒரு நேரம்; மற்றும் மாற்றத்திற்கான வாய்ப்பை எடுத்துச் செல்லும் பொறுப்பின் நேரம்.

ஆனால் திடீரென உண்மையான முன்னேற்றம் எளிதில் வராது. அது நம் தலைவர்களும், நாமும் இணைந்து உடனடியாகச் செயல் படும்போது மட்டுமே சாத்தியமாகும் ஒன்று.

20 November 2024

ஒருபோத்தல் சாராயத்துக்கு இவ்வளவு வரியா நாம கொடுக்கிறம்!


'அட யாரு அரசாங்கம் வந்தாலும் குடிச்சவாய்க்கு ஒரு குப்பிய ஆயிரம் ரூபாவுக்கு வாங்கிக் குடிக்க முடியாமல், 200 ரூபாவுக்கு எமன் ஏறிவரும் வடிசாராயம் குடிச்சி வாழாமல் போறமே'  எனப் பலர் கூறக்கேட்டுள்ளேன். அதனால் என்ன அரசிக்குத்தான் சுகாதாரச் செலவு அதிகமாகும், தொழிற்படையில் பலகீனமானவர்களைக் கொண்டிருக்கும், இழக்கவேண்டியும் வரும். 

விடயத்துக்கு வருவோம். ஓராண்டுக்கும் மேலாக, நாட்டின் முன்னணி மது உற்பத்தி நிறுவனங்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாதது குறித்து, இன்று சமூகத்தில் தீவிர விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்த கதை உண்மையில் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சில நரித்தந்திரங்களால் அரசாங்கத்திற்கு உரிய வரிகளை செலுத்துவதில்லை என பல்வேறு சமூக அமைப்புகளும் ஊடகங்களும் அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்தன.

ஆனால் அந்த வரி மோசடிகளோ வரி ஏய்ப்புகளோ குறையவில்லை. நாளுக்கு நாள் அது வளர்ந்து கொண்டே வந்தது.

19 November 2024

தமிழ் மக்கள் சிறந்த மாற்றத்துக்காக என்.பி.பியைச் சுற்றி திரண்டுள்ளனர்

வடக்கு, கிழக்கில் ஐந்து மாவட்டங்களில் மொத்தமுள்ள 28 ஆசனங்களில் 12 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி தனிப்பெரும் கட்சியாகக் கைப்பற்றியது. என்.பி.பி நாடு பூராவும் பெற்ற வெற்றியை விட இந்த வெற்றி மகத்தானது.

3 சதவீதமாக இருந்த என்.பி.பி 42 சதவீதமாக உயர்ந்தது. அதனால்தான் அது பொதுத் தேர்தலில் 62 சதவீதமாக மாறியது. இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை விட என்.பி.பி 12 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்கள். 54 நாட்களுக்குள் 'அனுபவம் வாய்ந்த' ரணில் 17 லட்சம் வாக்குகளையும், சஜித் 24 லட்சம் வாக்குகளையும் இழந்தார்கள். இப்படி இருந்தால், எதிர்காலத்தில் இந்த சரிவு மேலும் வளரும் என்பது உறுதி. இது என்.பி.பி அரசின் ஆட்சியின் வெற்றியைப் பொறுத்தே அமையும்.

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி அபாரமானது. அது சும்மா அல்லாமல் வடக்கிலிருந்து தெற்கேயும், கிழக்கிலிருந்து மேற்காகவும் பரவிய வெற்றி. 22 தேர்தல் மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த் 21 மாவட்டங்களை என்.பி.பி கைப்பற்றியது.

11 November 2024

14ம் திகதி மகிழ்சியான நாடாக மாற நாம் என்ன செய்ய வேண்டும்- எதியோப்பியா சொல்லும் பாடம்

நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஒரு வலிமையான ஆட்சியாளரைச் சுற்றி புத்திஜீவிகள் குழு ஒன்று திரள்வது வெற்றியின் முதற்படி என்பதை எத்தியோப்பியா நிரூபித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, எத்தியோப்பியா தேசம் நரகத்திற்கு மிக நெருக்கமான நாடு என்று அழைக்கப்பட்டது. உலகின் மிக மோசமான நாடு என்று அழைக்கப்பட்ட எத்தியோப்பியா, இன்று ஆப்பிரிக்க கண்டத்தின் 'புதிய சீனா' என்று அழைக்கப்படுகிறது.

05 November 2024

பொதுப் பணத்தை நம்பியிருக்கும் அதிகாரிகளை நாட்டின் மீது அக்கறையுள்ள அதிகாரிகளாக மாற்றுவதே முதல் பணி.


இன்று நடப்பவற்றை அவதானித்தால் நாம் அழுவதற்கு பிறந்த நாட்டு மக்களா! என எண்ணத்தோணுது. வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது மக்கள் அழுகிறார்கள். நிலச்சரிவுகள் வந்து அண்டை வீட்டாரை உயிருடன் புதைக்கும்போது மக்கள் அழுகிறார்கள். வீதி விபத்துகளில் இளைஞர்கள் உயிரிழக்கும்போது ஒட்டுமொத்த நாடும் அழுகிறது. நாட்டின் ஆட்சியாளர்கள் கொழும்பில் குளிர் அறைகளில் இவற்றை பேசிவிட்டு ஓரிரு வாரங்களில் அனைத்தையும் மறந்து விடுகின்றனர். மழைக்காலத்தில் மரங்கொத்திகள் கூடு கட்ட பேரம் பேசுவதும், மழைக்காலம் முடிந்ததும் அந்த எண்ணத்தை மறந்து விளையாடுவதும் ஒரு கதை. இலங்கையின் ஆட்சியாளர்களும் அப்படித்தான்.

01 November 2024

திறனை வளர்

 
இந்த உலகம் நமக்காகக் காத்திருப்பதில்லை, ஆனால் நமது திறமைகளுக்காக மட்டும் காத்து நிற்கிறது. உன் திறமையை நம்பினால் அது உன் காத்திருப்புக்கு கைகொடுக்கும்.

இந்த உலகம் நமக்காக காத்திருப்பதில்லை. காலம் ஒருபோதும் நின்று விடுவதில்லை. நாம் நம்முடைய வாழ்க்கையை காத்துக்கொண்டு, எதற்கும் காத்திருக்கையில், இந்த உலகம் தன் பாதையில் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், இந்த உலகம் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே நமக்கு இடம் கொடுக்கிறது – அது நம் திறமைகள்.

உனது திறமைகளுக்கு நீ மதிப்பு கொடுத்தால், உன் திறமை உலகத்தின் கவனத்தை ஈர்க்கும். உனது திறமை உனக்கே தேவையான வாய்ப்புகளைத் தேடி கொண்டு வரும்.

நம்பிக்கை என்பது உன் திறமையைப் பறவையாக உயர்த்து விடும் அசைவான சிறகுகள்.
முயற்சி உனது திறமையை நன்கு பயன்படுத்தி வெற்றியை உனக்கு தேடி தரும் கருவி.

உன் திறமையை நம்பு. அது உன் கனவுகளையும், உன் எதிர்காலத்தையும் உருவாக்கிக்கொள்வதற்கான முக்கிய அஸ்திரம்.
இந்த உலகம் உனக்கு பதிலளிக்காமல் போகலாம், ஆனால் உன் திறமை, உன் உழைப்பு, உன் நம்பிக்கை உலகத்தையே உன் பின்னால் நிற்கச் செய்யும்.

நான் ஒரு திறமைசாலி என்று நீ நம்பினால், அந்த நம்பிக்கை உன் வாழ்க்கையில் ஒளிக்கற்றையாக நீண்ட காலமாகத் திகழும்.

25 October 2024

பொதுப் பிரச்சினைகளில் அக்கறை காட்டாத அரசியல்வாதிகள்

நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து உரையாடல் மற்றும் ஆரோக்கியமான விவாதத்தை பேணுவது அரசியல் கட்சிகளின் முக்கிய பணியாகும். நாட்டை நேசிக்கும் ஒரு அரசியல்வாதி இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பிரதிநிதிகளிடம் இத்தகைய ஈடுபாட்டை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால்தான் இவர்கள் மக்கள் பிரதிநிதி என்ற பெயர் பெற்றார்கள். இப்படிப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒரு நாட்டுக்கு கிடைத்த வரம். இலங்கையின் அரசியல் வரலாற்றில் காலனித்துவ கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் இது போன்ற பல அரசியல்வாதிகள் இருந்துள்ளனர். இவர்களிடம் இருந்து பல்வேறு பாடங்களை ஆழமாகப் படித்து விவாதப் பாடத்தில் தேர்ச்சி பெற்ற இத்தகைய வரலாற்றுக் கதைகள் புதிய அரசியல்வாதிகளுக்கும் உதாரணமாக உள்ளது.

23 October 2024

பணம் பொருள் பெற்று வாக்களித்தால் என்னவாகும்?

ஒரு தேர்தலில் போட்டியிடும் தம்பி ஒருத்தர் என்னிடம் சொன்னார் 'அண்ணன் நம்மட்ட பணம் ஒன்றும் கிடையாது குணம் மட்டும்தான் உள்ளது, கிடைத்தால் தரமான சேவை செய்வேன்' ஆனால் இன்று ஒவ்வொரு வேட்பாளரும் பணத்தை வீசி செலவு செய்வதால், பத்து பதினைந்து கோடி இல்லாமல், மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது போல.

நீங்கள் எவ்வளவு கொள்கைவாதியாக, சேவகனாக இருந்தாலும் சரி, புத்திசாலியாக இருந்தாலும் சரி, அப்படிச் செலவு செய்ய முடியாவிட்டால், வேட்பாளராக இருப்பதில் அர்த்தமில்லை என்கின்ற நிலமை இல்லையா. அதற்கு பணம் கொடுக்கும் சமூகம் அதை முதலீடாகவும் செய்கிறது. கடைசியில் நமது வாக்கு வேறொருவரின் முதலீடாக மாறுகிறது.
அதன் பின்னர் நீங்கள் சொல்லுவதனை பா.உறுப்பினர் கேட்கவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அந்தக் கேள்விக்கு விலை பெற்றாச்சே!

19 October 2024

எதுடா தேசியம்? மக்களை ஏமாற்றுவதா!

இன்று எமது மக்களுக்கு என்ன நடந்துள்ளது? ஒன்றும் நடக்கவில்லை! ஐந்தைந்து வருடத்துக்கு ஒருதடவை வந்து வந்து அஞ்சி சதத்துக்கும் பெறுமதி இல்லாத வேலைகளைளே மக்களுக்கு செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு நன்மை பயக்கும் எல்லாவற்றினையும் செய்துள்ளனர்.

மண்னைக் கொள்ளையடித்தனர், மரத்தைக் கொள்ளையடித்தனர், வார் மற்றும் வாகனப் பேமிற்றுக்களை பெற்றுக்கொண்ளைடர். அபிவிருத்தி என்றுசொல்லி அளந்தளந்து கொமிசன் பெற்றனர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடி கோடியாய் வியாபாரம் ஆரம்பித்தனர். அவர்கள் நல்லாத்தான் இருக்கின்றனர்.
அதுமாத்திரமா, சிலர் வெறும் கோசமும், வேசமும், ஆர்பாட்டங்களும், ஆக்கிரோசங்களும் செய்வது மக்களை எப்படி வளர்துவிடும்? இது தேசியத்தின் சொத்தான மக்களை எப்படி வலுவூட்டும்?

17 October 2024

தலைவர் மாறினாலும் நம்ம தலையிடி மாறவில்லை- உணவின் விலையேற்ற அச்சுறுத்தல்

புதிய தலைமைத்துவத்தின் கீழ் ஒழிந்துவிட்டது என நினைத்த காலங்காலமாக செயல்படும் மார்க்கெட் மாஃபியா இந்த நாட்களில் மீண்டும் சுறுசுறுப்பாகி வருவதாக தெரிகிறது. ஒவ்வொரு பருவத்திலும் வௌ;வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது.

இன்றைய சந்தையை அவதானிக்கும் போது அரிசி விடயத்திலும் இதே போன்ற வர்த்தக மாபியா செயற்படுவது தெளிவாகின்றது. குறிப்பாக நாட்டு அரிசி (புழுங்கல்), சிவப்புப் பச்சை  மற்றும் சிவப்பு புழுங்கல் (நாடு) அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதால், சந்தையில் நாட்டு அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த அரிசி நெருக்கடியைக் கருத்தில் கொண்டால், இந்த நாட்டில் விவசாயக் கொள்கையின் சீத்துமம் என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க முடியும். கீரி சம்பா அரிசி விலையினை கடந்த சில வருடங்களில் வைத்து பார்க்கும்போது மிக அதிகமாக இருந்தது. இதனால், பல விவசாயிகள் நாம் சாதாரணமாக விரும்பி உண்ணும் நாடு மற்றும் சம்பா சாகுபடியை கைவிட்டு, கீரி சம்பா விளைவித்தனர்;.

15 October 2024

இலங்கையில் 2000 ஆண்டுக்கு முன்பதாகவே தமிழர்கள் வாழ்ந்தார்கள்

 இலங்கையில் 2000 ஆண்டுக்கு முன்பதாகவே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உண்டா?

ஆம்! ஆதாரம் இல்லாமலா ஒரு இன இருப்புப்பற்றி பேசிட முடியும், ஆதாரம் இல்லாமலா ஒரு தேசியம் பற்றி பேசிவிட முடியும்! ஆதாரம் இல்லாமலா உலக அரங்கில் போய் நிற்க முடியும்?

இலங்கையின் பழந் தமிழ்ப் பெயர் `ஈழம்` என்பதாகும். ஈழத்தினைச் சேர்ந்த சங்க காலப் புலவர் ஒருவரே சங்க இலக்கியப் பாடல்களையே பாடியுள்ளார். அவரது பெயர் ஈழத்துப் பூதன்தேவனார் என்பதாகும். இவரது பெயரின் முன்னொட்டான `ஈழம்` இன்றைய இலங்கையினைத்தான் குறிக்கின்றதா? என்ற ஐயம் உள்ளவர்கள் இவர் மொத்தமாக ஏழு சங்க இலக்கியப் பாடல்களைப் பாடியுள்ளார் அதனைப் பார்க்கவும்

அகநானூறு 88, 231, 307,
குறுந்தொகை 189, 343, 360,
நற்றிணை 366.

13 October 2024

இலங்கையில் ஏற்படவேண்டிய அரசியல் மாற்றம்

இலங்கையின் அரசியல் நிலைமை என்பது பல சவால்களை எதிர்கொண்டு உள்ளது. எளிதாகவே முன்னேற முடியாத நிலைமை மற்றும் அரசியல் முன்னணியில் உள்ளவர்களின் தீர்மானங்கள், நாட்டின் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத விதமாக இருக்கிறது. எனவே, இலங்கையில் ஏற்படவேண்டிய சில முக்கியமான அரசியல் மாற்றங்களைப் பற்றி கீழே விவரிக்கின்றேன்.

### 1. **அரசியலமைப்பில் மாற்றம்**
இலங்கையின் அரசியலமைப்பில் அடிப்படை மாற்றங்கள் தேவை. மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை உருவாக்குவது அவசியம். ஜனநாயக அடிப்படையில் செயல்படும் முறைமைகள் ஏற்படுத்த வேண்டும்.

12 October 2024

மட்டக்களப்பு மீனவ மக்களைப் பார்க்கும்போது ஏற்ப்படுகின்ற வலி

 
மட்டக்களப்பு மீனவ மக்களைப் பார்க்கும்போது ஏற்ப்படுகின்ற வலி சொல்லி மாளாது. அத்தனையும் இம்மக்களை வழி நடத்துகிறவர்களையே சாரும்..

பாருங்கள் இந்தப் பக்கம் கிறுகினா வயல், அந்தப்பக்கம் கிறுகினா கடல், மலை, காடு, மேடு அத்தனை வளங்களிலும் எத்தனை பயன்...
இருந்தும் என்ன??
இப்போது அள்ளா கொள்ளையாக மீன் படுகிற காலம். ஆனால் கஸ்ட்டப்படுகிற இந்த மக்களின் உழைப்பை கஸ்ட்டப்படாம சுறண்டிட்டு போறாங்க யாரோ ஒருவன்...
ஏன் நாங்கள் இன்னொருவனுக்கு உழைத்துக் கொடுக்கவேணும், பாருங்கள் இன்று பலருக்குக் கடற்கரை இருக்கின்றது ஆனால் ஒரு கறிக்கு மீன் கூடக் கிடைப்பதில்லை.

11 October 2024

கட்சியோ சின்னமோ ஒரு விடயமல்ல!

தனிமனித ஆளுமைதான் ஒரு வழிகாட்டிக்கு முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த ஆழுமை மக்கள் நலன் சார்ந்து அவர்களை மீட்பதற்காக சிந்திததுத் திட்டமிடுதலிலும் அதனை செயற்படுத்துவதிலும்தான் தங்கியிருக்கின்றது.

அரசியல் தலைமைகளில் அதிகாரமுள்ளவர்களாக இருப்பவர்கள் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவேணடும், அனர்த்தங்களின் போது ஆஜராகவேண்டும், அத்துடன் சாணக்கியத்துடன், சாமர்த்தியத்துடன் பணியாற்றவேண்டும் என்பதை ஏற்கும் மனோபாவம் அரசியல் செய்யும் எல்லோரிடத்திலும் இருப்பது அவசியம்.

என்றும் மக்களின் நலன்களுக்காக கடமை உணர்வுடன் செயற்பட்டால் நம் மக்களைவிட விட மட்டற்ற மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

05 October 2024

நீங்கள் தேடும் சரியான இடத்தில் உங்களை பொருந்திக்கொள்ளுங்கள்

 அன்புள்ள இளைஞர்களே,

உங்கள் வாழ்க்கையில், நீங்கள் யாராக இருப்பது, உங்கள் திறமை மற்றும் உங்களின் உண்மையான மதிப்பு என்னவென்று அறிந்துகொள்ளும் சரியான இடத்தை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம்.

ஒரு சிறிய கதையை நம் வாழ்வோடு இணைத்துப் பார்க்கலாம்
ஒரு தந்தை தனது மகனுக்கு, 50 ஆண்டுகளாக வலுவாக இருந்த ஒரு பழைய வோல்க்ஸ்வேகன் பீட்ல் காரை கொடுத்தார். தந்தை மகனிடம், இதற்கு என்ன மதிப்பு வழங்குகின்றனர் என்று முதலில் விற்பனை மையத்துக்கு செல்லச் சொன்னார். மகன் சென்று வந்தபின், "அவர்கள் இதற்கு $10,000 தருவதாகச் சொன்னார்கள், ஏனெனில் இது மிகவும் பழையதாகவும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது" என்றான்.

22 September 2024

புதிய ஜனாதிபதியிடமிருந்து மக்களின் எதிர்பார்ப்புகள்

இலங்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அதிக நம்பிக்கையுடன் வாக்களித்துள்ளனர். இது பொருளாதார நெருக்கடியின் பின்னர், அசாதாரண மக்களின் எழுச்சியைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல். மக்களின் எதிர்பார்ப்புகள் மிகுந்து காணப்படுகிறது, ஏனெனில் புதிய ஜனாதிபதியிடம் இருந்து, அவர் எதிர்வரும் ஐந்தாண்டுகளில் நாட்டை வழிநடத்தி, பொருளாதார, சமூக, மற்றும் அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்ற ஆவலுடன் உள்ளனர்.

1. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு

இந்த தேர்தல் பொருளாதார நெருக்கடியை மையமாகக் கொண்டு நடைபெற்றது. மக்களுக்கு மிக முக்கியமான எதிர்பார்ப்பு, விலைவாசி கட்டுப்பாடு. புதிய அரசாங்கத்தின் மேற்பார்வையில், மக்களின் வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்து கொண்டிருக்க, அவர்கள் அவற்றைத் தாங்க முடியாத நிலைக்கு வந்து விட்டார்கள். IMF சிக்கல்களை சரிசெய்யும் நிர்வாக திட்டத்தின் கீழ், கடும் வரி விதிமுறைகள் மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகள் மக்களிடையே பெரும் சுமையைக் கூட்டியுள்ளன.

18 September 2024

தொழிற்கல்வியும் அனுரவும்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலும், இளைஞர்களின் வேலைவாய்ப்பு மேம்பாட்டிலும் தொழிற்கல்வி முக்கிய பங்காற்றுவதை தேசிய மக்கள் சக்தி (NPP) அவசரமாகக் கருதுகிறது. NPP மற்றும் அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க தொழிற்கல்வியின் முக்கியத்துவத்தைச் சிறப்பிக்கின்றனர், ஏனெனில் இது வேலைவாய்ப்புகளை நேரடியாக உருவாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை தூண்டுகிறது.

16 September 2024

அநுர குமார 2024 இலங்கைத் தேர்தலில் பல வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முக்கிய காரணங்கள்

அநுர குமார திசாநாயக்க 2024 இலங்கைத் தேர்தலில் பல வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முக்கிய காரணங்கள்:

  1. மாற்றத்திற்கு எதிர்பார்ப்பு: இலங்கையில் நடந்த 2022 பொருளாதார நெருக்கடியின் பின்னர், பாரம்பரிய அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்தது. இதன் காரணமாக மக்கள் முன்னாள் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து நீக்கினர். அநுர குமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) புதிய மாற்றத்தை வாக்காளர்களுக்கு வழங்கும் முனைப்பில் உள்ளனர்.  பாதிக்கப்பட்ட பழைய அரசியல் அமைப்புகளிலிருந்து விலகி புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி இவர்களின் கொள்கைகள் அமைந்துள்ளன.

  2. பொருளாதார மாற்றம் மற்றும் சமூக நீதிக்கான போராட்டம்: திசாநாயக்க மக்கள் செல்வாக்கு மற்றும் ஆதாயங்களில் சமமான பங்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறுகிறார். அவர் வறுமையை குறைத்து, நீடித்த வளர்ச்சியைக் கொண்டுவரும் திட்டங்களை முன்வைக்கிறார். சமூக நீதி, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு அனைவரும் சமமான அணுகல் பெறுவதே இவரின் நோக்கம்

13 September 2024

அனுரவும் ஐ எம் எவ்வும்

 அன்புள்ள நண்பர்களே, இன்று நாம் சந்திக்கும் மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேச விரும்புகிறேன் – நமது நாடு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) தொடர்பு மற்றும் இதைப்  பற்றி தேசிய மக்கள் சக்தி எவ்வாறான நிலைப்பாட்டினைக்கொண்டுள்ளது என்பதனைப் பார்க்க இருக்கின்றோம்.

இலங்கை இன்னும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது யாரும் மறுக்க முடியாது. இதனைத் தீர்பதற்கு, அரசு ஐ.எம்.எப் உடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டு, பாரிய பொருளாதார கட்டுப்பாடுகள், வரிவிதிப்பு மீதான அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளில் செலவு  கள் என்பனவற்றினை  குறைத்து நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகள் குறித்த காலத்தில்  பொருளாதாரத்தை நிலைப்படுத்த உதவியிருக்கலாம், ஆனால் இது பொதுமக்கள், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை அதிகமாக பாதித்துள்ளது.

10 September 2024

அரச பல்கலைக்கழக முறைமையில் மாற்றம் தேவை

இலங்கை ஒரு காலத்தில் ஒரு நம்பிக்கையான கல்வி முறைமையைக் கொண்டிருந்தது, குறிப்பாக அரச பல்கலைக்கழக முறைமை. இங்கு மாணவர்களுக்கு சிறந்த கல்வி தரம், வெளிப்படையான அங்கீகாரம், மற்றும் சமுதாயத்திற்கு தேவையான திறமைகளை உருவாக்கும் ஒரு சூழல் கிடைத்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், அரச பல்கலைக்கழக முறைமை பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு, அதன் தரம் குறைந்து, மாணவர்களுக்கு எதிரான சவால்களாக மாறியுள்ளது.

07 September 2024

ஏன் ஒரு புதியவரை ஆதரிக்கக்கூடாது?

அனைவருக்கும் வணக்கம்!, இன்று பலர் கேள்விகள் கேட்கின்றார்கள் ஏன் நாம் அனுரவை ஆதரிக்க வேண்டும் என்று? நான் கேட்கின்றேன் ஏன் அவரை ஆதரிக்கக்கூடாதென?

இன்று மக்கள் அனைவரும் ஒரு நேர்மறையான மாற்றத்தினை எதிர்பார்கின்றனர். தேசிய மக்கள் சக்தியே இன்று மாற்றத்தின் ஒரே ஒரு முகவராக மாறியுள்ளனர். கசப்பான பாரம்பரியச் அரசியல் சாக்கடைக்குள் மக்கள் மீண்டும் அகப்பட விரும்பவில்லை. 

தாங்க முடியாத நாட்டின் கடன் அதிகரிப்பு, மோசமான வரிச்சுமை, தவறான திட்டமிடப்பட்ட இறக்குமதித் தடைகள், மற்றும் நாட்டின் ரூபாயின் மதிப்பிறக்கம், பற்றாக்குறையான வெளிநாட்டுக் கையிருப்பு, அசமந்தமான வினைத்திறனற்ற ஆட்சி, தலைவிரித்தாடும் குடும்ப மற்றும் அரசியல் ஊழல். குண்மூடித்தனமான சுரண்டல் போன்ற கலாசாரத்தில் ஊறிய ஒரு பின்னணி உள்ள எவரையும் மக்கள் விரும்பவில்லை என்பதனை பலர் ஊடகங்களில் நேரடியாகச் சாடி வருகின்றனர்.

06 September 2024

அநுர மற்றும் ஊழலற்ற ஆட்சிக்கான செயல்திட்டம்

அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP), இலங்கையில் நீண்டகாலமாக நிலவிய அரசியல் மற்றும் பொருளாதார ஊழலை முடிவுக்குக் கொண்டு செல்ல உறுதியாக உள்ளது. இது NPP இன் மையக் கொள்கைகளில் ஒன்றாகவும், நாட்டின் அனைத்து துறைகளிலும் புதிய ஓர் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை நிர்வாகத்தை ஏற்படுத்துவதாகும்.

NPP இன் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில், அரசாங்கம் முழுமையாக வெளிப்படையான மற்றும் பொறுப்பானதாக இருக்க வேண்டும் என்ற பார்வை மிக முக்கியமானது. ஊழலற்ற ஆட்சி என்பது அநுர குமார திசாநாயக்க வாக்காளர்களுக்கு வழங்கும் முதன்மையான வாக்குறுதி.

05 September 2024

வெள்ளிச்சரத்தில் இது எனது 1000மாவது ஆக்கம்!


'கற்றவரிடம் கற்பதைவிட கற்றுக்கொண்டிருப்பவரிடம் கற்றுக்கொள்'- கார்ல்மாக்ஸ் சொன்னதுக்கு அமைய நான் கற்றுக்கொண்டு இருப்பதனையே உங்களுக்கு கற்றுத்தருவதற்காக இந்த தளம் எனக்கு அமைந்தவரம். ஆம், இது 'வெள்ளிச்சரத்தில்' https://vellisaram.blogspot.com/ எனது ஆயிரமாவது ஆக்கம். இது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாசகர்களை அண்மித்துவிட்டது. இந்தப்பிரபஞ்சத்துக்கு இதற்காக முதல் நன்றிகள்! 

இன்று நான் பெருமைகொள்கின்றேன். இந்தப் பிரபஞ்சம் விசித்திரமானது, பல அற்புதங்கள் நிறைந்தது. பல மனிதர்கள், பல முகங்கள், வௌ;வேறுபட்ட மனங்கள் அத்தனையும் படித்தற்குரியது. அதற்குள் எமது நாட்டில் குறுக்கு வழிகளன்றி சாதனைகள், அடைவுகள் மிகக் கடினமானது. ஆனாலும் நேர்வழியில் பயணம் செய்ய இத்தனை வருடங்கள் கடந்து இந்த ஆயிரமாவது மயிற்கல்லை எட்ட முடிந்தது. எனக்காக அல்ல இந்த சமுகத்துக்காக! எனக்கு ஆங்கிலத்திலும் ஒரு வுலக்ஸ் இருக்கின்றது யுனோவி  https://unoov.blogspot.com/என்ற பெயரில். நான் எனது அப்பாவில் 41ம் நாளில் இதனை வெளியிடுவதில் பெருமைகொள்ளுகின்றேன்.

20 July 2024

வங்காளதேச கலகம்: மாணவர் எழுச்சியின் விளைவுகள்

அறுபதுக்கு மேல் மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 2000 பேருக்குமேல் காயமடைந்துள்ளனர், இன்ரர்நெற் முடக்கப்பட்டுள்ளது, பாதைகள், சாலைகள் மூடப்பட்டுள்ளன, வங்கதேசத்தில் என்னதான் நடக்கின்றது? 

மாணவர்கள் அரசுக்கு எதிராக திரும்பும்போது, ஒரு நாட்டின் அடித்தளம் நிலைகுலையலாம். இந்த நிலை தற்போது வங்காளதேசத்தில் உருவாகியுள்ளது, மாணவர் போராட்டங்கள் நாட்டை ஸ்தம்பித்து கிடக்க வைத்துள்ளன. இவ்விதமான மாணவர்களின் இயக்கங்கள் முக்கிய அரசியல் மற்றும் சமூக புரட்சிகளை ஏற்படுத்தும் சாத்தியங்களை வெளிப்படுத்துகிறது.

போராட்டத்தின் பின்னணி: சமீபத்திய கலவரம் 2018-ல் பிரதமர் ஷேக் ஹசீனா எடுத்த முடிவின் அடிப்படையில் உருவானது. மாணவர்களின் போராட்டத்துக்குப் பதிலளிக்க, 1971ல் பாகிஸ்தான் எதிரான சுதந்திர போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவு மீண்டும் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது, இது மாணவர்களின் எதிர்ப்பை தூண்டியது.