கொள்கை அது எமது ஒவ்வொரு தமிழ் குடிமகனின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் சார்ந்த நிறைவாக இருக்கணும் முதலில். 'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்' என்பது அனைவருக்கும் தெரியும். எமது மக்கள் அனர்த்தம், வறுமை, வேலைவாய்ப்பின்மை, திறனின்மை, குடும்பச்சுமை, கடன்சுமை, தொழில் இழப்பு காரணமாக நலிவுற்று அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாமல் மாற்றானிடம் அடிமையாக, வேற்றானிடம் வேலையாளாக, வேண்டிய மதத்திற்கு மாற்றப்பட்டு நுண் கடனால் நுடங்கி நிற்கும் இவர்களிடம் ஏன்டா இன்னும் இன்னும் போய் கொள்கை என்று கொடுமைப்படுத்துறீங்க!
08 August 2019
07 August 2019
அரசியன் தொழில் முயற்சியாண்மை திட்டம் அபிவிருத்திக்கான ஆரம்பமாகுமா?
நமது நாட்டை பொருளாதார ரீதியில் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள பல வேலைத்திட்டங்களை எமது அரசாங்கம் காலத்துக்கு காலம் முன்னெடுத்து வந்துள்ளது. தற்போதைய அரசும் மக்களுக்கு தொழில் முயற்சியாண்மையை ஊக்குவிக்க ஒரு திட்டத்தினை முன்னெடுத்து, கடந்த பாதீட்டில் அதற்கான நிதி ஒதுக்கீட்டினையும் பரிந்துரை செய்திருந்தது. ஆதன் பிரகாரம் நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றவும் முயற்சியாண்மையை ஊக்குவிக்கவும் இதுவரைக்கும் ரூபாய் 88 பில்லியன் பெறுமானமுள்ள 55,000 கடனுதவிகளை வழங்கியுள்ளது.
04 August 2019
சுற்றுச்சூழல் தூய்மை பற்றி எந்த மதம் எடுத்துரைக்கின்றது?
அனைவருக்கும் தெரியும், நாம் வாழும் இந்த பூமியில், எதிர்கால தலைமுறையும் நலமாக வாழ வேண்டுமெனில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம். உலக நாடுகளுக்கு சவாலான பிரச்னையாக, சுற்றுச்சூழல் பாதிப்பு உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பநிலை உயர்கிறது. மழை குறைகிறது. அன்டார்டிகா, இமயமலை பகுதிகளில் பனிகட்டிகள் உருகுவதால், கடல்மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவை இன்று அனைவருக்கும் பொதுவாக தெரிந்த விடயம்.
வேலையில்லாப் பட்டதாரி
இன்று கிராமமாகிக் கொண்டிருக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அதனால் சவால்களை விட சந்தர்பங்கள் எம்மத்தியில் கொட்டிக்கிடப்பதனைக் காணுகின்றோம். நாம் ஒருவருடன் அல்லது ஒரு குழுவுடன் தொடர்பைப் பேணுவதற்கான மார்க்கங்கள் இன்று பட்டி தொட்டி எங்கும் பரவிக் கிடக்கின்றது.
பட்டப்படிப்பு முடிக்காத எவரும், நாம் காணும்படியாக தொழிலுக்காக பாதைகளை நாடி பதாதைகளை தூக்கிய சரித்திரம் எனக்கு தெரிந்த வகையில் இருந்தது கிடையாது. அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தொழிலில் தாமாகவே தேடி ஈடுபட, பட்டதாரிகள் இவ்வளவு கற்றுக்கொண்ட பின்னரும் தாமாகத் தொழிலில் ஈடுபட முடியாத நிலையை பலர் வன்மையாக விமர்சித்து வருகின்றார்கள். மறுபக்கம் எமது மனப்பாங்கில் 'கோழி மேய்ப்பதென்றாலும் கோர்ணமெண்டில் செய்யணும்' என்ற என்ற அகற்ற முடியாத எண்ணத்துடன் நமது சமுகம் இருந்து விட்டதனால் மிகவும் கஸ்ட்டப்பட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் முடிப்பவர்களுக்கு அரச வேலை எடுத்து அரசாங்க ஊழியர்களாக இருப்பதற்கே விரும்புகின்றனர்.
03 August 2019
தான்தோன்றி அப்பன் ஊரு
தென்றல் வந்து வீசும்
தேன் கதலி வாசம்
திக்கெட்டும் உன்னைப் பேசும்
தீராத நோய்கள் தீரும்
கொக்கட்டிச் சோலை வந்தவரே தேவா!!
தேன் கதலி வாசம்
திக்கெட்டும் உன்னைப் பேசும்
தீராத நோய்கள் தீரும்
கொக்கட்டிச் சோலை வந்தவரே தேவா!!
தொண்டைக்குள்ள தான் நஞ்சை அடைத்தாய்!
தொல்லை கொடுத்தோர் நெஞ்சை உடைத்தாய்!
எல்லைத் தெய்வமாய் இங்கு உறைந்தாய்!
ஏற்றுத் தொழுவோர் நெஞ்சில் நிறைந்தாய்!
மீன்தோன்றி பாட்டிசைக்கும்
தான்தோன்றி அப்பன் ஊரு
நான்தோன்றி விட்டேனய்யா !!
நாயாக போனேன் பாரு
தெய்வத்துக்கே ஆதி
பார்வதியின் பாதி
உய்ய வழி இல்லாமலே
உந்தன் அடிவந்து சேர்ந்தேன்
தொல்லை கொடுத்தோர் நெஞ்சை உடைத்தாய்!
எல்லைத் தெய்வமாய் இங்கு உறைந்தாய்!
ஏற்றுத் தொழுவோர் நெஞ்சில் நிறைந்தாய்!
மீன்தோன்றி பாட்டிசைக்கும்
தான்தோன்றி அப்பன் ஊரு
நான்தோன்றி விட்டேனய்யா !!
நாயாக போனேன் பாரு
தெய்வத்துக்கே ஆதி
பார்வதியின் பாதி
உய்ய வழி இல்லாமலே
உந்தன் அடிவந்து சேர்ந்தேன்
வறுமை தமிழரை பீடித்துள்ள ஒரு பிணி; அது தற்காலிகமானதொன்று.
யுத்தத்தின் பின்னர் குறிப்பாக தமிழ் மக்களிடையே வறுமை ஒரு சவாலாகவே உள்ளது. இது எமது பரம்பரை வியாதியல்ல பாதியில் வந்ததுதான். எமது வறுமையான நிலைக்குக் காரணம் போர், இயற்கை சீற்றங்கள், காலநிலையில் சடுதியான ஏற்றத்தாழ்வுகள் கல்வி அறிவின்மை, அடிமைத்தனம் போன்றவைகளுடன் அரசியல் ரீதியான தாக்கங்களும் காரணமாக இருக்கின்றன.
02 August 2019
வறுமை இருக்கும் வரை அடிமைத்தனத்தை அழிக்க முடியாது.
வறுமையானது சிலரது வாழ்நாட்களில் கடந்துபோகும் ஒரு தற்காலிக நோய்மட்டுமே!
உழைப்பாளர் வர்க்கம் என்பது, அரசியல் விடுதலைக்காகவும் பண்ணையடிமை முறையின் எச்சங்களை ஒழித்துக் கட்டவும் விவசாயிகள் அனைவரின் போராட்டத்தை தலைமை தாங்க வல்ல ஓரே சக்தி என்பது மட்டுமல்ல, கிராமப்புற ஏழை மக்களுடன் கூட்டுசேர்ந்து உற்பத்திச் சாதன்ங்களின் மீதான தனியுடைமையை ஒழித்துக் கட்டி, சோஷலிச மாற்றங்களை நிறைவேற்ற வல்ல சக்தியும் இதுதான் என்று அறியமுடிகின்றது. இந்த வர்க்கத்தினை வாக்குக்காக மாத்திரம் பயன்படுத்தி வாக்கை காப்பற்ற விருப்பமில்லாத வர்க்கத்தை வேரறுக்கும் வர்க்கம் நாம். நாம் மிகப்பெரிய சக்தி என்பதை எப்பொழுதும் மனதில் வைக்கவேண்டும்.
01 August 2019
நல்ல தொண்டன் நல்ல தலைவனாகிறான்..
ஒரு நல்ல தலைவராக மாறுவது பற்றி நாங்கள் அதிகம் பேசுகிறோம், ஆனால் முதலில் ஒரு நல்ல தொண்டனாக அல்லது பின்தொடர்பவனாக மாறுவது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் ஒரு சிறந்த தலைவராக இருக்க விரும்பினால், நீங்கள் முதலில் ஒரு சிறந்த தொண்டனாய் பின்பற்றுபவராக மாற வேண்டும்.
இது மிகவும் அரிதாகவே விவாதிக்கப்பட்டாலும், வரலாற்றின் மிகப் பெரிய தலைவர்கள் அனைவருமே தங்கள் தொடக்கத்தை தொண்டராகவே தொடர்ந்திருந்தனர். வரலாற்றின் மோசமான தலைவர்கள் ஒருபோதும் இன்னொருரு தலைவரை பின்பற்றக் கற்றுக்கொள்ளவில்லை.