2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 1103 வீதி விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 1154 பேர் உயிரிழந்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் 2200 வீதி விபத்துகளில் 2557 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை இது ஒப்பிடுகையில் காட்டுகிறது.
13 July 2024
வீதி விபத்துக்கள் தொடர்ந்துகொண்டே போகும் பேரழிவு
10 July 2024
களுதாவளைச் சுயம்புலிங்கர் பேராலயம் ஒரு ஆன்மீக நிறுவனமாகும் கனவு!
'களுதாவளைக்கு நீங்க வந்து பாருங்க-அங்கு
கணநாதன் சந்நதியில் நின்று பாருங்கள்
ஆறாத காயங்களும் ஆறி போகுங்க-அது
ஆறாவிட்டால் வந்து என்னைக் கேளுங்க'
எழுத்தினை இப்படி துவங்குகின்றேன். எனது சிறிய வயசில் பசுமரத்தாணிபோல் பதிந்த பல விடயங்களில் என்னுடைய அம்மம்மாவின் பாசம் அன்பு என்பவை மறக்கமுடியாதது. ஆம் எனது அம்மம்மா என்னுடனும் எல்லோருடனும் சிரித்த முகத்துடன் அன்பாகவும் பாசமாகவும் இருக்கும் ஒரு இறை நம்பிக்கைகொண்டவர். அவர்; பார்ப்பதற்கு எப்பொழுதும் நெற்றி நிறைய நீறணிந்து, சுத்தமாக உடைதரித்து மங்கலமாக இருப்பார்.
26 June 2024
வர்தக மற்றும் சுற்றுச்சூழல் ராஜாங்க அமைச்சு மட்டக்களப்பாருக்கு வரப்பிரசாதமா?
நண்பரும் அமைச்சருமான ச.வியாழேந்திரனின் அன்பான அழைப்பின்பேரில் அண்மையில் அவரது உத்தியோகபூர்வ வாசல்தலத்தில் சந்தித்து பல மணிநேரம் எமது நீண்டநாள் நட்பினை பகிரக்கிடைத்தது. அரசியல் மற்றும் அபிவிருத்தி சார்ந்தே பலவிடயங்களை எமக்குள் கதைத்துக்கொண்டோம். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் அவரது செயற்பாட்டுக்கு கிடைத்த தீனியாக இந்த புதிய அமைச்சுப்பதவி அமையும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
13 June 2024
இல்லத்தின் பாதுகாப்பு: விழிப்புணர்வும் கட்டுப்பாடும் அவசியம்
இந்த மாணவி, மின்சார தைக்கும் இயந்திரத்தின் மோட்டார் கம்பிகளை சுவரில் உள்ள சுவிட்ச் சொக்கெட்டில் இணைக்க முயற்சித்து தோல்வியடைந்தார். பின்னர், மின்சாரக் கம்பிகளை வெட்டி, கம்பிகளை நேரடியாக சொக்கெட்டில் செருகுவதன் மூலம் இணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
12 June 2024
மறக்க முடியாத உபவேந்தர்: பேருக்கில்லாமல் கடமைக்கு வாழ்ந்தவர்!
10 June 2024
பவளவிழா கொண்டாடும் எருவில் கண்ணகி மகா வித்தியாலயம். கருத்தில் எடுக்கவேண்டிய கிராம்!
07 June 2024
குழந்தைகளை இப்படியா துன்புறுத்துவது?
இன்று உங்களோட பேசுற விஷயம், நம்ம மனசாட்சியையே உறுத்தும் ஒன்னு. அது, குழந்தை துன்புறுத்தல். இலங்கையில் இப்போ இந்த பிரச்சனை ரொம்ப கவலைக்கிடமா மாறிஇருக்கு.
02 June 2024
பட்டிருப்புத்தொகுதியில் சிறுவர்களின் மன உழைச்சலுக்கு மருந்து கிடைக்குமா?
அவர்களின் அழுத்தம் அதிகரிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று, இயற்கையான பொழுதுபோக்குகளின் இல்லாமையாகும். சுமார் 70 வீதம் சிறுவர்கள் தினமும் மொபைல் போன், டிவி போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர், இந்த நிலைமை அவர்கள் மனநலனிலும், உடல்நலனிலும் தீமைகளை ஏற்படுத்துகிறது.









